Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நயினாரா?.. இங்கே "அவர்" வர போறாரா.. எடப்பாடியின் பிளானை புட்டு புட்டு வைத்த நாகராஜன்.. என்னாச்சு

பாஜகவுக்கு எதிராக கூட்டணியில் உள்ள அதிமுக, பாமக கட்சிகள் திரும்ப காரணம் என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக இடையே என்ன நடப்பது என்ன? யார் மீது யாருக்கு அதிருப்தி? என்பன போன்றவை தெரியாமல் குழப்ப மனநிலை தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.. பொன்னையன் ஒருபக்கம், நயினார் நாகேந்திரன் மறுபக்கம் என ஆளுக்கு ஒருவர் பரபரப்பை கிளப்ப, இதற்கு நடுவில் பாஜகவின் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் வேதனையை கொட்டி வருகிறார்.

திமுகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில், சமீபகாலமாகவே அதிமுகவை ஏறி மிதித்து மேலே வர முயன்று கொண்டிருக்கிறது தமிழக பாஜக..!

அதிமுகவோ சைலன்ட் மோடுக்கு சென்று கொண்டிருக்கிறது.. ஆரம்பத்தில் பாஜகவை பெரிதும் கண்டுகொள்ளாத திமுக அரசோ, இன்று அண்ணாமலைக்கு பதில் அளிக்கும் அளவுக்கு ஆளாகி கொண்டிருக்கிறது.

நயினார்

நயினார்

நேறுறு பேட்டி ஒன்றை தந்துள்ளார் பாஜகவின் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன்.. அதில் அவர் சொல்கிறார், "பொன்னையன் சொன்னது எல்லாமே பச்சை பொய்.. எல்லா கட்சிகளுக்கும், பாஜகவை பார்த்தால் பொறாமையாக இருக்கு.. அதிலும் கூட்டணி கட்சி தலைவர்களே தவறாக பேசியது வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கு.. அதிலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக சொல்லும் பாமக நிறுவனரும் அப்படி பேசியது வேதனையாக இருக்கு.. இருந்தாலும், இதெல்லாம் எங்களுக்கு பிளஸ்தான்.. பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது..

 கரு.நாகராஜன்

கரு.நாகராஜன்

அவரவர் கட்சியை வளர்க்க வேண்டியது, அவரவர் பொறுப்பு.. சும்மாவே வீட்டில் படுத்திருந்தால், கட்சியை வளர்க்க முடியாது... அந்த வகையில் பாஜக தலை நிமிர்ந்து நிற்கிறது... மக்கள் தாங்களாகவே எங்களிடம் வருகிறார்கள்.. இதை பொறுத்துக்க முடியாமல் பேசினால், அதுக்கு நாங்க என்ன செய்றது? பாஜகவில் இளைஞர்களை சேர விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ராமதாஸ் சொன்னதுமே, நான் ஷாக் ஆயிட்டேன்.. ரொம்ப வேதனையா இருக்கு.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அண்ணாமலை வளர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே, கோவையில் தொகுதி தர பழனிசாமி மறுத்துட்டார். இப்போது அண்ணாமலையின் செயல்பாடுகள், அவர்களுக்கு கலக்கத்தை தந்துள்ளன.. பொன்னையன் பேசியதை பார்த்தால், அவரை வைத்து எடப்பாடி பழனிசாமி ஆழம் பார்ப்பதாக தெரிகிறது.. இதை வைத்து எம்பி தேர்தலிலும் எங்களுக்கு சீட் குறைக்க வாய்ப்பு உண்டு.. எதுவாக இருந்தாலும் தமிழக பாஜக தன் செயல்பாடுகளை நிறுத்தாது.. தொடர்ந்து தன் பாணி அரசியலில் நடைபோடும்" என்று குமுறி தீர்த்துள்ளார் நாகராஜன்.

 விரிசல் ஆரம்பம்

விரிசல் ஆரம்பம்

இதையடுத்து, அதிமுக - பாஜக - பாமக கூட்டணி இடையே விரிசல்கள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன.. கடந்த 6 மாத காலமாகவே, அதிமுக முடங்கி கிடக்க, பாஜகவின் வீரியத்தை கண்டு பொங்கி எழுந்துவிட்டார் பொன்னையன்.. முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான பொன்னையன் பாஜகவுக்கு எதிராக பேசியதுதான், பாஜக - அதிமுக கூட்டணி விரிசலின் முதல் புள்ளியாக இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. பொதுவாக, எதிர்க்கட்சிகளை அட்டாக் செய்ய வேண்டும் என்றால், அல்லது மிக முக்கிய மெசேஜ்களை சொல்ல வேண்டும் என்றால், கேபி முனுசாமியை வைத்துதான் அதிமுக மேலிடம் காய் நகர்த்துவது வழக்கம்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஆனால், பொன்னையன் ஏன் இப்படி பேசினார் என்பதுதான் பல சந்தேகங்களை, பாஜகவுக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்குள்ளேயே கிளம்பி உள்ளது.. எம்பி சீட் தராத விரக்தியா? சசிகலா பக்கம் தாவலுக்கான அறிகுறியா? அல்லது நிஜமாகவே பாஜகவின் எழுச்சியை அடக்க நினைத்தாரா? என்பதெல்லாம் தெரியவில்லை.. எப்படி பார்த்தாலும், இத்தனை வருட காலமாக இல்லாமல், இன்று வெளிப்படையாகவே தங்கள் கட்சியை விமர்சித்துள்ளதால், பாஜக அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

பொன்னையன்

பொன்னையன்

அதேபோல, அதிமுக மீதும் பாஜகவுக்கு வருத்தம் இருக்கலாம் என்கிறார்கள்.. அதிமுக நிர்வாகிகளையே, சசிகலா பற்றி பேசக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி பலமுறை உத்தரவிட்டுள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் ஏன் அப்படி பேசினார் என்ற குழப்பம் அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ளது.. ஏற்கனவே, ஆண்மையில்லாத என்ற வார்த்தையை பயன்படுத்தி நயினார் நாகேந்திரன், இதே அதிமுகவை பொதுவெளியில் விமர்சித்திருந்தார்.. இதை ஜீரணிக்க முடியாமல்தான், பாஜகவுக்கு சீட் கொடுக்க மனமில்லாமல் அதிமுக நெருக்கடியை தந்தது..

நயினார்

நயினார்

இப்போது நயினார் மீண்டும் சசிகலா விஷயத்தை கிளப்பிவிட்டு, அதிமுகவை சூடேற்றி இருக்கிறார்.. சசிகலா கட்சிக்குள் வந்தால் சேர்ப்போம்" என்று நயினார் சொன்னது அதிமுகவை வேண்டுமென்றே சீண்டவா? அல்லது சசிகலாவுக்கான தங்களுடைய நிஜமான ஆதரவா? அல்லது நயினாரின் தனிப்பட்ட கருத்தா? தெரியவில்லை.. ஆனாலும், பாஜக மீது அதிமுகவும்கடுமையான அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

 நயினார் நாகேந்திரன

நயினார் நாகேந்திரன

இப்படி 2 பக்கமும் புகைந்து கொண்டிருக்க, இதற்கு நடுவில்தான் பாஜகவின் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தன் வதனைகளை கொட்டி தீர்த்துள்ளார்.. பொன்னையனை வைத்து, பாஜகவுக்கு செக் வைக்க அதிமுக கணக்கு போட்டால், சசிகலாவை வைத்து அதிமுகவுக்கு செக் வைக்க பாஜக வேறு ஒரு கணக்கு போடுவதாக தெரிகிறது.. அப்படி என்றால், உண்மையிலேயே பாஜக வளர்ந்து கொண்டுள்ளதா? அல்லது வளர்ந்து விடக்கூடாது என்று ஆரம்பத்திலேயே நசுக்க கூட்டணிகள் முயல்கின்றனவா? தெரியவில்லை.. பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+