"அந்த" கமெண்ட்ஸ் பார்த்தீங்களா.. பாஜக வேலைதான் இதெல்லாம்.. பாயும் திமுகவின் மனுஷ்யபுத்திரன்.. பொளேர்
திமுகவின் மனுஷ்யபுத்திரன் ஒன் இந்தியாவுக்கு சிறப்பு பேட்டி தந்துள்ளார்
சென்னை: சோஷியல்மீடியாவில், தன்னுடைய பதிவுகளுக்கு ஏராளமான பாஜகவினரின் போலி ஐடிக்களில் இருந்து, ஆபாச கமெண்ட்கள் வருவதாக திமுகவின் மனுஷ்யபுத்திரன் தெரிவித்துள்ளார்.
மனுஷ்யபுத்திரன் தமிழகத்தின் மிகச்சிறந்த கவிஞர் - இலக்கியவாதி - 'உயிர்மை' பதிப்பகம் மற்றும் மாத இதழின் ஆசிரியர் - சமூக செயற்பாட்டாளர் - திமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நிலையில், தற்போது தற்போது திமுக ஐடி விங்கின் ஆலோசகராக இருந்து வருகிறார்..
சக்கர நாற்காலியில் வீற்றிருக்கும் தன்னம்பிக்கையின் அடர்த்தி மிகுந்த மனிதர்.. பரந்த இதயம் கொண்ட மனிதாபிமானி.. உதவி என்று தேவைப்படுவோருக்கு தொய்வின்றி உடனே செய்து தரும் அக்கறை நிறைந்தவர்..

மனுஷ்யபுத்திரன்
இவரது கவிதைக்கு ஏராளமான வாசகர்கள் உண்டு.. அதிலும் பெண் வாசகர்களை அபரிமிதமாக பெற்றவர்.. சமீபத்தில்கூட, நம்பர் 1 எழுத்தாளர் யார் என்ற கேள்விக்கு, பெண்கள் மனதை கவர்ந்த மனுஷ்யபுத்திரன்தான் என்று சோஷியல் மீடியாவில் அவரது ரசிகர் ஒருவர் உச்சிமுகந்து பாராட்டினார்.. பெண்களின் மனதை எப்படி இவ்வளவு நுட்பமாக புரிந்து கொள்ள முடிகிறது? பெண்களின் உணர்வுகளை எப்படி அப்பட்டமாய் எழுத்துக்களில் பிரதிபலிக்க முடிகிறது என்பது குறித்த கேள்வியை, நம் ஒன் இந்தியா சார்பாக மனுஷ்யபுத்திரனிடம் முன்வைத்தோம்.. அதற்கு அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தான் இவை:

பர்ஸ் பணம்
"ஆண்கள் பெண்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது விஷயமல்ல, பெண்கள் இந்த உலகத்தை எப்படி பார்க்கிறார்கள் என்பதுதான் விஷயமே.. பெண்களை ஒரே மாதிரியாக நான் பார்ப்பதில்லை, உதாரணத்துக்கு, ஒரு பெண் தன் வீட்டிலிருந்து, கோபித்து கொண்டு படிக்கட்டில் இறங்குகிறாள்.. அப்போதுதான் யோசிக்கிறாள், தன் பர்சில் பணமே இல்லையே என்று.. ஒருஆட்டோ பிடித்து தோழி வீட்டுக்கு போவதற்குகூட பணம் இல்லை.. வீட்டுக்கு திரும்பி போவதற்கும் மனம் இல்லை.. அங்கேயே உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிடுகிறாள்.. கையில் 100 ரூபாய் கூட இல்லையே என்ற அழுகையில், அவளிடமிருந்த அத்தனை கோபமும், அத்தனை ஆவேசமும், விழுந்துவிடுகிறது..

கண்ணீர் பெண்
அதாவது பொருளாதார சுதந்திரமும் இல்லாமல், அல்லது மற்ற சுதந்திரங்களை அவளிடமிருந்து பறிக்கப்பட நேரும்போது, வெளிப்படும் உணர்வுகளே அந்த கண்ணீர்.. நான் சின்ன வயசுல இருந்தே, பெண்கள் நிறைய உள்ள வீட்டில் வளர்ந்தவன்.. எனக்கு சின்ன வயசிலேயே உடம்பு சரியில்லாமல் போயிடுச்சு.. பள்ளி படிப்பு பாதிப்பு, வெளி உலக தொடர்பும் குறைவு.. ஆனால் பெரிய குடும்பம் என்பதால், பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுடன்தான் நான் பழக வேண்டி இருந்தது.. அப்போது அவர்களின் மனவலிகள், கண்ணீரையெல்லாம் அந்த வயதிலேயே எனக்கு மனதளவிலான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது..

ஃபேக் ஐடி
நான் ஒரு முஸ்லிம் சமுதாயத்திலிருந்து வருவதால், என்னுடன் வளர்ந்த சகோதரிகள், வயதுக்கு வந்தபிறகு, அவர்களை படிக்க அனுப்பாதது, உடனே திருமணங்கள், இதெல்லாம் பார்த்துள்ளேன்.. ஒரு ஆணாக இருக்கும்போது, எனக்கு நிறைய சாதகமான விஷயங்கள் கிடைக்கும்போது, பெண்களுக்கு அது கிடைக்கவில்லையே என்று அந்த சிறு வயதிலேயே கவலைப்பட்டேன்.. இப்படியான உணர்வுகளை நான் எழுதும்போதுதான், அப்பெண்களுக்கு அந்த எழுத்துக்கள் எளிதாக சேர்ந்துவிடுகிறது, தங்களையே அவர்கள் அந்த எழுத்தில் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்..

டிபேட்கள்
என்னுடைய கவிதைகள், பதிவுகளுக்கு நிறைய கமெண்ட்கள் வரும்.. அதிலும் சர்ச்சைகள் தாங்கி நிறைய கமெண்ட்கள் வரவே செய்யும்.. ஒன்று அரசியல் ரீதியாகவும், மற்றொன்று கவிதைகளுக்கும் அத்தகைய கமெண்ட்கள் கிடைக்கும்.. அரசியல் ரீதியாக, எத்தனையோ பேருக்கு என்னுடைய கருத்துக்கள் மீது நிறைய முரண்பாடுகள் இருக்கலாம்.. ஆனால், அதற்கு நான் பொறுப்பாக பதில் சொல்வேன்.. அப்படி கருத்துக்களை குறிப்பிட்டு எழுதுபவர்கள் மிக குறைவு.. நான் மீடியாவுக்கு வந்து 12 வருடமாகிறது.. திமுகவுக்கு நான் வருவதற்கு முன்பேயே ஆயிரக்கணக்கான டிபேட்களில் கலந்து கொண்டுள்ளேன்.. சாதி, மத விஷயங்களை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறேன்.. அதனால், ஃபேக் ஐடி-களை வைத்துக் கொண்டு, சோஷியல் மீடியாவில் நிறைய பேர் திட்டி கமெண்ட்களை போடுவார்கள்.

ஆபாச கமெண்ட்
என் அரசியல் பேட்டி ஏதாவது பதிவிட்டால், அடுத்த அரை மணி நேரத்தில் ஆபாசமான கமெண்ட்கள் நூற்றுக்கும் மேல் இருக்கும்.. எல்லாம் பாஜக, மற்றும் மத அடிப்படைவாதிகள், சாதி அடிப்படைவாதிகளின் ஃபேக் ஐடி-க்கள்தான்.. அனைத்து கமெண்ட்களும் ஒரே மாதியாக இருக்கும்.. இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு பேட்டி எடுக்குறிங்களேன்னு திட்டி இருப்பாங்க.. பாசிட்டிவ்வாக ஒரு கமெண்ட்கூட இருக்காது.. தனிப்பட்ட நபர்கள் யாரும் அப்படி எழுத மாட்டார்கள்.. அதனால்தான் ஆபாசமாக கமெண்ட்கள் வந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன்.. சோஷியல் மீடியாவில் இவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நான் நீண்ட வருடமாகவே பார்த்து வருகிறேன் என்பதால், இந்த போலிகள் கமெண்ட்கள் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications