சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கருகும்" தாமரை?.. அமித்ஷா பலே சீக்ரெட்.. "குறி" வைக்கப்படும் தமிழ்நாடு.. விஸ்வரூப பாஜக.. அப்ப திமுக

: பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிட போவதாக அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.. இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா?
கடந்த வாரம் அர்ஜுன் சம்பத் தன்னுடைய புத்தக வெளியிட்டு விழாவில் பேசும்போது, பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்று கூறினார்.

நேற்றும் ஒரு விழாவில் பேசும்போது, ராமேஸ்வரத்தில் பிரதமர் போட்டியிட வேண்டும் என்று தொகுதியை குறிப்பிட்டு கூறியுள்ளார். இது ஏதோ அர்ஜுன் சம்பத்தின் தனிப்பட்ட விருப்பம் என்று எடுத்துக் கொள்ள முடியாது..

புதுவையில் பரவும் வைரஸ் காய்ச்சல்.. 1 முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! புதுவையில் பரவும் வைரஸ் காய்ச்சல்.. 1 முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

 அமித்ஷா

அமித்ஷா

காரணம், அர்ஜூன் சம்பத் தன் விருப்பத்தை வெளிப்படுத்தியது, எச்.ராஜா, அண்ணாமலை போன்ற தலைவர்களை பக்கத்தில் வைத்து கொண்டுதான் சொன்னார்.. அப்படியானால், பிரதமர் மோடி போட்டியிடக்கூடிய அளவுக்கு சாதகமான சூழல்கள் தமிழகத்தில் நிலவுகின்றனவா? என்னவெல்லாம் பாஜகவுக்கு சாதகமாக இருக்கலாம் என்று ஓரளவு அலசி பார்க்கப்படுகிறது.. முதலாவதாக, கடந்த முறை பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது, ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசி, எடப்பாடி, ஓபிஎஸ் இருவருமே அனுமதி கேட்டிருந்த நிலையில், கடைசி வரைக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.. அதற்கு பதிலாகஅன்றைய தினம் இரவே, கவர்னர் மாளிகையில் பாஜகவின் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.. தமிழகத்தின் பாஜக தலைவர்கள், கட்சி சீனியர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்..

 ஆதாரங்கள்

ஆதாரங்கள்

இவர்கள் எல்லாம் என்ன பேசினார்கள் என்பது இப்போது வரை உறுதியாக தெரியவில்லை.. ஆனால் 2 விஷயங்களை பிரதமர் மோடி நிர்வாகிகளிடம் சொன்னாராம்.. "இந்த பலமுறை தமிழகம் வந்திருக்கிறேன். ஆனால், சமீபகாலமாக தமிழக மக்களிடம் பெரும் மாற்றத்தை பார்க்கிறேன்... அவர்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளனர்.. அதை உணர்ந்து கட்சிப் பணிகளை துரிதப்படுத்துங்கள்.. திமுக என்பது சித்தாந்த ரீதியாக பாஜகவுக்கு எதிரான கட்சி... அதனால் திமுகவை நாம் எதிர்க்கும்போது, அது, தமிழ் மொழி, கலாசாரத்திற்கு எதிரான கட்சி என்பதுபோல மக்களிடம் சென்று சேர்ந்து விடக் கூடாது.. இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.. மாநில அரசு செய்யும் தவறுகளை, ஆதாரங்களுடன் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.

 கெத்து இதுதான்

கெத்து இதுதான்

பாஜகவுக்கு தமிழகத்தில் நிறைய ஆதரவை நேரடியாகவே நான் பார்க்கிறேன்.. இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது.. அதனால் தமிழகம் முழுக்க பூத் கமிட்டிகளை உடனடியாக நியமிக்க பாருங்கள்.. நமக்கான வாய்ப்பு காத்து கொண்டிருக்கிறது" என்று பிரதமர் அறிவுறுத்திவிட்டு சென்றதாக கூறப்பட்டது.. அதாவது, தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது என்பதே பிரதமரின் கூற்றாக இருப்பதாக தெரிகிறது.. அந்தவகையில், தமிழகத்தின் மீது டெல்லிக்கு ஒரு பார்வை இருக்கவே செய்கிறது..

அமித்ஷா

அமித்ஷா

அடுத்ததாக, அமித்ஷா அன்று ஹைதராபாத்தில் மாநாட்டில் பேசும்போதும், தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையப் போவது உறுதி என்று சூளுரைத்துள்ளதால், தமிழகத்தில் டெல்லி தலைவர்களின் குறி இன்னும் ஆழமாக பதிந்துவிட்டதாக தெரிகிறது.. தென்மாநிலங்களில் பாஜக ஆட்சி என்பது வழக்கமாக சொல்லப்படும் முழக்கம் என்றாலும், இந்த முறை அமித்ஷாவின் பேச்சில் காரமும், வீர்யமும் அதிகமாகவே தென்பட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

 சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு

இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது.. முதல்வர் ஸ்டாலின் சிறந்த முதல்வர் என்பதையும்தாண்டி, தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறார்.. பாஜகவுக்கு எதிரான கூட்டணிகளை ஒன்றுதிரட்டுவதில் கடுமையான முயற்சிகளை பல வகைகளில் எடுத்து வருவதும் டெல்லியை சீண்டிக் கொண்டே இருக்கிறது.. அன்று சந்திரபாபு நாயுடு எடுத்த முயற்சிகளும், கடந்த 2 வருடமாக மம்தா எடுத்த முயற்சிகளும் அவ்வளவாக பலன் தராத நிலையில், பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு ஸ்டாலின் மேற்கொள்ளும் அரசியல் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறது.. இது டெல்லிக்கு எரிச்சலை தந்துவரும் நிலையில், தமிழகத்தின் மீதான குறி இன்னும் அதிகமாகவே விழுந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

எல்லாவற்றிற்கும் மேலாக, அதிமுகவின் பலவீனம், பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திவிட்டதாம்.. இவர்கள் 2 பேரின் பஞ்சாயத்தில் டெல்லி தலையிடாமல் ஒதுங்கி கொண்டதுகூட ஒருவகையில் லாபக்கணக்குதானாம்.. ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி + ராமதாஸ் + விஜயகாந்த் + பாரிவேந்தர் + கிருஷ்ணசாமி + ஜிகே வாசன் + இவர்களை எல்லாம் வைத்து, தங்கள் தலைமையிலான கூட்டணியில்,வரப்போகும் தேர்தலை சந்திக்கவும் வசதியாக இருக்கும் என்று பாஜக நினைக்கிறது.. அந்தவகையில், தமிழக அரசியல் சூழலும் டெல்லிக்கு வசதியாகவே இருக்கிறதாம்.

பாரிவேந்தர் + விஜயகாந்த்

பாரிவேந்தர் + விஜயகாந்த்

அதிமுகவின் பலவீனமும், சறுக்கலும், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்க செய்யும் வகையில் இருப்பதால்தான், பாஜக அதற்குள் நுழைந்து தங்கள் பலத்தை காட்டி வருகிறது.. அதிமுக செய்யக்கூடிய எல்லா போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தமிழக பாஜக முன்னெடுத்து வருவதும் இதற்காகத்தானாம்.. நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று பகிரங்கமாகவும் அண்ணாமலை எத்தனையோ முறை தெரிவித்தும் விட்டார்.. இந்த சூழல்களே தமிழகத்தை டெல்லி உற்றுநோக்க காரணமானதாக சொல்கிறார்கள்.

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

போதாக்குறைக்கு ராகுலின் நடைபயணமும் தமிழகத்தில்தான் துவங்கப்பட்டது.. இந்த முறை சென்ட்டிமென்ட்டாக ஸ்ரீபெரும்புதூரில் ராகுல் போட்டியிட சான்ஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.. ராகுல் தமிழகத்தை குறி வைத்து நகர்வதால், மேலிட பாஜகவும் தமிழகத்தை குறி வைத்துவிட்டது, அதனாலேயே அர்ஜுன் சம்பத் விடுத்துள்ள கோரிக்கை வலுவாக உற்றுநோக்கப்பட்டு வருகிறது என்றும் சொல்கிறார்கள்.. ஆக, பிரதமர் மோடி தமிழகத்தில்தான் போட்டியிடப் போகிறாரா? அதுவும் ராமேஸ்வரத்தில்தான் போட்டியிடப் போகிறாரா? தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
Are there favorable conditions for BJP in Tamil Nadu and Is PM Modi going to contest in Rameswaram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X