"சூப்பர்ப் பவர்".. டபுள் ரூட்டில் கிளம்பும் எடப்பாடி.. தினகரனுக்கு திகிலை கிளப்பி.. மீண்டும் தேர்தல்?
எடப்பாடி பழனிசாமி மேலும் 2 ப்ளான்களை கையில் எடுத்துள்ளதால் அமமுக, ஓபிஎஸ் டீம் கதிகலங்கி உள்ளதாம்
சென்னை: அடுத்தடுத்த லெவலுக்கு எடப்பாடி பழனிசாமியின் அரசியல் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடம் பரவி வருகிறது.
கொங்குவில் தன்னுடைய பலத்தை பெரும்பான்மையாக அதிகப்படுத்தி உள்ள எடப்பாடி பழனிசாமியால், தென்மண்டலங்களில் இதுவரை தன் செல்வாக்கை நிரூபிக்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளதாக தெரிகிறது.
அதனால்தான், கடந்த சில தினங்களாகவே, தென்மண்டலங்களில் முக்குலத்தோர் வாக்குகளை சிந்தால் சிதறாமல் அள்ளுவதற்காக வியூகம் வகுத்து வருகிறாராம்.. அதன்படி 2 விதமான பிளான்கள் தற்போது எடப்பாடியிடம் உள்ளதாக தெரிகிறது.

டாப் லெவல்
முதலாவதாக டிடிவி தினகரனின் அமமுகவின் வாக்கு வங்கிதான் குறி வைக்கப்பட்டுள்ளதாம்.. காரணம், கடந்த சட்டமன்ற தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 10,85,985 வாக்குகளை பெற்றிருந்தது.. ஏற்கனவே, வன்னியருக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டால் அதிகம் பாதிக்கப்பட்டது எம்பிசி பிரிவில் பெரும்பான்மையாக இருந்த முக்குலத்தோர் சமூகம் தான்.. இந்த அதிருப்தியில் இருந்து அவர்களால் 2 வருடங்களாகியும் வெளியே வரமுடியவில்லை.. அதுமட்டுமல்ல, தேவர் ஜெயந்தி விழாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி புறக்கணித்ததையும் அவர்கள் இன்னமும் மறக்கவில்லை..

செல்லூர் ராஜு
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை விட்டு ஓபிஎஸ்ஸை நீக்கிய பிறகு, அந்த சமூகத்தின் வெறுப்பை சம்பாதிக்கும் சூழல் வரும் என்பதை எடப்பாடி உணராமல் இல்லை. அதனால்தான், முக்குலத்தோர் வாக்குவங்கியை கொத்தோடு அள்ளுவதற்காகவே, ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு போன்றோரையும் எடப்பாடி நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.. இப்போதுகூட எடப்பாடிக்கு அடுத்த இடத்தில் உதயகுமார்தான் இருக்கிறார். செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா போன்றோர் அந்த கட்சியின் முக்கிய முகங்களாக இருக்கிறார்கள்..

வலதுகை இளங்கோ
எனினும், வரும் தேர்தலில் முக்குலத்தோர் சமூகத்தினர் மற்றும் அந்த சமூகம் சார்ந்த அமைப்புகள் அதிமுகவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக ஒரு பகீர் கிளம்பி உள்ளது. அதனால்தான், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனிடம் இருக்கும் நிர்வாகிகளை இழுக்கும் வேலைகளை முடுக்கிவிட்டிருக்கிறதாம் எடப்பாடி டீம்.. இதற்கான முழுபொறுப்பையும், தன்னுடைய வலதுகரமான சேலம் இளங்கோவனிடம் தந்துள்ளாராம் எடப்பாடி.. இதன் முதல் முயற்சியாக தென்மாவட்டத்தை சேர்ந்த அமமுக மண்டல பொறுப்பாளரிடம் ஒரு சுற்று பேச்சுவார்த்தையை இளங்கோவன் நடத்தி முடித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்..

மாஜி சரவெடி
விரைவில் அந்தப் பொறுப்பாளர் தலைமையில், தென் மண்டல அமமுக நிர்வாகிகள் சிலர் எடப்பாடி பக்கம் வரக்கூடும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, திருச்சியை சேர்ந்த மாஜி எம்எல்ஏ, மாவட்ட பொறுப்பாளர் போன்றோருக்கும் ஸ்கெட்ச் போட்டுள்ளதாம் இளங்கோவன் தரப்பு.. அந்தவகையில், தென் மண்டலத்தை தொடர்ந்து இவர்களும் கூடிய சீக்கிரம் எடப்பாடி பக்கம் அதிமுகவில் இணையலாம் என்கிறார்கள்.. இதற்கு நடுவில் ஓபிஎஸ் தரப்புக்கு கிலியை தரும் வகையில், அடுத்தகட்ட நெருக்கடியை தருவதற்கு எடப்பாடி டீம் தயாராகி வருகிறதாம்... அதன்படி, உடனடியாக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த திட்டமிட்டு வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி...

மனோஜ்பாண்டியன்
அநேமாக இதற்கான அறிவிப்பு விரைவில் வரக்கூடும் என்கிறார்கள்.. "தேர்தல்" என்று பொதுப்படையாக சொன்னாலும், எடப்பாடி பழனிசாமி மட்டுமே பிரதானமாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றாலும், விதிப்படி எல்லாமே பக்கா ஏற்பாடுகளுடன் தயாராக போகிறதாம். அதேபோல, ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேருமே கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்பதால், இவர்களை பதவி நீக்கம் செய்ய முடியுமா? அப்படி பதவிநீக்கம் செய்தால், அடுத்து இடைதேர்தல் நடக்ககூடிய வாய்ப்பு எழுமா? என்றெல்லாம் பரபர ஆலோசனைகள் ஓடிக்கொண்டிருக்கிறதாம்... ஆக, ஒருபக்கம் டிடிவி தினகரன், மறுபக்கம் ஓபிஎஸ் என இருவருக்குமே கலக்கத்தை தரும் அளவுக்கு எடப்பாடியின் மூவ் நகர்ந்து கொண்டிருக்கிறதாம்..!!












Click it and Unblock the Notifications