ரோஹித் + பும்ரா + ராகுல்.. 2 மேட்ச் ஓவர்.. இந்திய அணிக்கு வந்த 4 குட் நியூஸ்.. இதை நோட் பண்ணீங்களா?
சென்னை: உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் இரண்டு லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த இரண்டு போட்டியிலும் இந்தியா அதிக விக்கெட்டுகள், ஓவர்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
அடுத்தடுத்த வெற்றியுடன் இந்த தொடரில் இந்தியா வேகம் காட்டி வருகிறது. வெற்றியுடன் இந்திய அணி தொடரை தொடங்கி உள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டிக்காக தற்போது இந்திய அணி தயாராக தொடங்கி உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடர் முழுக்க முழுக்க இந்தியாவில் நடக்க உள்ளது. இதனால் இந்திய அணிக்கு சாதகமாக பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இந்திய பிட்ச் இந்தியாவிற்கு பிரபலமான பிட்ச் என்பதால்.. அதிக அளவில் வெற்றி வாய்ப்பு நமக்கு உள்ளது.

அடுத்தடுத்து 2 வெற்றி: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் உலகக் கோப்பை 2023 லீக் ஆட்டம் இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா 199க்கு ஆல் அவுட ஆனது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. அந்த போட்டியில் ஜடேஜாதான் ஆட்டத்தை மாற்றினார். இன்று ஜடேஜா மட்டும் 3 விக்கெட், குல்தீப், பும்ரா 2 விக்கெட் , சிராஜ், அஸ்வின் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதன் பின் இறங்கிய இந்திய அணி கோலியின் 85 மற்றும் கே எல் ராகுலின் 97 ரன்கள் காரணமாக இந்தியா வென்றது.
இதையடுத்து நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வென்றது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்கத்தில் வரிசையாக விக்கெட் விழுந்தது. ஆனால் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர்.
இரண்டு பேருமே மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆடி ஆப்கானிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 80 ரன்கள், அஸ்மத்துல்லா உமர்சாய் 62 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனால் இரண்டு பேரும் அவுட்டான பின் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் 272-8 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸ் முடிந்தது. இதையடுத்து இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 131, இஷான் 47, கோலி 55 ரன்கள் எடுக்க இந்திய அணி வெற்றிபெற்றது.
( எங்காகினும் பார்த்தது உண்டோ.. கோலி இன்று செஞ்ச அந்த செயல்.. கிரிக்கெட் உலகை புரட்டிய 2 சம்பவங்கள்!)
4 நல்ல விஷயங்கள்: இந்த இரண்டு போட்டிகளில் வென்றதன் மூலம் இந்திய அணி பல "டிபார்ட்மெண்டுகளை" சரி செய்து உள்ளது. பல்வேறு துறைகளில் இந்தியாவின் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு உள்ளன. முக்கியமாக 4 நல்ல விஷயங்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.
விஷயம் 1: கோலி இந்த தொடரில் முழு பார்மில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக குறைந்த ரன் ரேட்டில் ஆடி கவனம் பெற்றார். இக்கட்டான நேரத்தில் நிதானமாக ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தார். அதே சமயம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மிக வேகமாக ஆடியும் நம்பிக்கை கொடுத்தார், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 85, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 55 நாட் அவுட் என்று இவர் ஆடியது பெரிய அளவில் இந்திய அணிக்கு சாதகமாக மாறி உள்ளது.

விஷயம் 2: மிடில் ஆர்டர் பிரச்சனை ஒருவழியாக தீர்ந்து உள்ளது. முன்பு இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் பிரச்சனை இருந்தது. கடந்த உலகக் கோப்பையை இந்தியா தோற்க இது முக்கிய காரணம். ஆனால் இந்த முறை மிடில் ஆர்டரில் கே எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் இரண்டு பேருமே நல்ல பார்மில் உள்ளனர். அதிலும் ஷ்ரேயாஸ் ஐயர் நேற்று பார்மிற்கு வந்தார். கே எல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டு வந்ததில் இருந்தே நல்ல பார்மில்தான் இருக்கிறார்.
விஷயம் 3: ரோஹித் சர்மா நேற்று ஆடியது ஆப்கானிஸ்தானுக்கு எதிரானது என்றாலும் அவரின் ஆட்டத்தில் பழைய ரிதம் தெரிந்தது. நீண்ட காலமாக அவரிடம் இல்லாமல் போன அந்த ரிதம் தெரிந்தது. முக்கியமாக அவர் செஞ்சுரி அடித்ததை விட.. அவரின் பவுண்டரிகளில் நல்ல ரிதம் காணப்பட்டது. அவரிடம் பழைய பன்னீர்செல்வம் ஆங்காங்கே தென்பட்டதை பலரும் பாராட்டி இருந்தனர். இந்த தொடரில் அவர் முழுமையாக மற்ற அணிகளுக்கு எதிராகவும் பார்மிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஷயம் 4 : இந்தியாவின் பவுலர் சிராஜ் பார்மிற்கு திரும்பவில்லை என்றாலும் மெயின் பவுலர் பும்ரா நல்ல பார்மில் இருக்கிறார். அவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் நல்ல ரிதத்தில் பவுலிங் செய்தார். நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் 4 விக்கெட் எடுத்தார். அவர் காயம் அடையாமல் தொடர்ந்து பவுலிங் செய்வதும் இந்திய அணிக்கு சாதகமாக மாறி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications