அந்த 6 விஷயங்களில் ஆப்பு.. தமிழ்நாட்டின் குடுமியை பிடித்து ஆட்டிய மத்திய பட்ஜெட்.. இதுதான் சிக்கலே

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டை மிகப்பெரிய அளவில் ஏமாற்றி உள்ளது. தமிழ்நாட்டிற்கு என்று நேரடியாக 1 ரூபாய் நிதியை கூட கொடுக்கவில்லை. நேற்று பட்ஜெட்டில் 6 முக்கியமான விஷயங்களில் தமிழ்நாடு வசமாக ஏமாற்றப்பட்டு உள்ளது. அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்,

ஏமாற்றம் 1; கோவை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வளரக்கூடிய நகரங்களில் ஒன்று. வேகமாக வளரக்கூடிய முக்கியமான நகரங்களில் கோவையும் ஒன்று. ஆனால் உபி தலைநகர் லக்னோவை விட பல மடங்கு திறன் கொண்டது கோவை. ஆனால் இப்படிப்பட்ட கோவைக்கு மத்திய அரசு தொடர்ந்து ஓரவஞ்சனை செய்து வருகிறது.

budget 2024

கோயம்புத்தூருக்கு அமைக்கப்பட உள்ள முழுமையான டிபிஆர் ரிப்போர்ட் அளிக்கப்பட்ட பின்பும் அங்கே பணிகளை தொடங்க அரசு இன்னும் அனுமதிக்கவில்லை. இதனால் இரண்டு பெரிய நகரங்கள் வளர முடியாமல் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கு நேற்று நிதி ஒதுக்கப்படவில்லை. கோவையில் மெட்ரோ பணிகள் இந்த வருடமே தொடங்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவையில் 5 இடங்களை மையமாக வைத்து மெட்ரோ பணிகள் நடக்க உள்ளன. அவினாசி சாலை கணியூர் வரையில்தான் முதல் கட்டமாக இந்த திட்டம் கொண்டு வரப்படும்.

அவினாசி சாலை, திருச்சி சாலை வழியாக மெட்ரோ பாதை. சத்தி சாலை, சிறுவாணி சாலை வழியாக மெட்ரோ பாதை. மேட்டுப்பாளையம் சாலைகள் வழியாக மெட்ரோ பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளனர், மொத்தமாக 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஏமாற்றம் 2: இன்னொரு பக்கம் மதுரை மெட்ரோ தொடர்பான ஆலோசனைகள், சாத்தியக்கூறு சோதனைகள் நடந்து வருகின்றன. இதற்கான மணல் ஆய்வு நடந்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற வேண்டும். பல்வேறு இடங்களில் கடைகளை அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி அனுமதியும் பெற வேண்டும். அதன்பின் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

மேலும் பல தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்ய வேண்டும். அவர்களுடன் ஒப்பந்தம் பெற வேண்டும். இதற்காக பல்வேறு ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும். இதனால் மதுரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் துவங்கும். இதற்கும் நேற்று நிதி ஒதுக்கப்படவில்லை.

ஏமாற்றம் 3: சென்னை மெட்ரோ 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் பணத்தில்தான் கடன் வாங்கி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மத்திய அரசு அனுமதி தராத காரணத்தால் மதுரை, கோவை மெட்ரோ என்று இரண்டு திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.

சென்னை மெட்ரோவிற்கு நிதியை மத்திய அரசு கொடுத்தால் கோவை, மதுரை மெட்ரோ மீது தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த முடியும். உத்தர பிரதேசத்தில் 7 மெட்ரோ சேவைகள் தொடங்கப்பட உள்ளன. இந்த வருட இறுதிக்குள் மத்திய அரசின் நிதி உதவியுடன் 7 மெட்ரோ சேவைகள் தொடங்கப்பட உள்ளன.

நொய்டா
கிரேட்டர் நொய்டா
லக்னோ
கான்பூர்
ஆக்ரா
காசியாபாத் (DMRC)
மீரட் ஆகிய மெட்ரோ சேவைகள், மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வருட இறுதியில் இந்த சேவை தொடங்கப்பட உள்ளது.

ஏமாற்றம் 4: தமிழ்நாட்டிற்கு புதிய எக்ஸ்பிரஸ் வே எதுவும் அமைக்கப்படவில்லை. ஜூலை 2023 நிலவரப்படி, 5,173 கிமீ (3,214.4 மைல்) நீளம் கொண்ட 48 எக்ஸ்பிரஸ்வேக்கள் இந்தியாவில் செயல்படுகின்றன, மேலும் 8,772 கிமீ கட்டுமானத்தில் உள்ளன. 2014 ஆம் ஆண்டில், நாட்டில் சுமார் 1,021 கிமீ அதிவேக நெடுஞ்சாலைகள் மட்டுமே இருந்தன.

உத்தரப்பிரதேசம் 1,396 கிமீ (867 மைல்) 8 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
மகாராஷ்டிரா 793.4 கிமீ (493.0 மைல்) 6 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
ராஜஸ்தான் 757 கிமீ (470 மைல்) 3 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
ஹரியானா 609 கிமீ (378 மைல்) 7 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
மத்தியப் பிரதேசம் 244 கிமீ (152 மைல்) எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
சத்தீஸ்கர் 191 கிமீ (119 மைல்) 2 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
கர்நாடகா 171 கிமீ (106 மைல்) 5 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.

வடஇந்தியா: தமிழ்நாட்டில் வெறும் 94.8 கிமீ தூரத்திற்கு சென்னை - குமரி இடையே சில ஸ்ட்ரெட்ச் 6 வழி சாலையாக அமைக்கப்பட்டு உள்ளன. வடஇந்தியாவில் இருப்பது போல நீண்ட எக்ஸ்பிரஸ் வே சாலைகள் தமிழ்நாட்டில் கட்டப்படவில்லை.

தமிழ்நாட்டில் போதிய அளவில் எக்ஸ்பிரஸ் வே கட்டுமானங்கள் தொடங்கப்படாமல் இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில் அதிக அளவில் எக்ஸ்பிரஸ் வே. கட்டப்படுவதால் தமிழ்நாடு பின்தங்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

ஏமாற்றம் 5: தாம்பரம் - செங்கல்பட்டு விரைவுச் சாலை திட்ட ஒப்புதல் வழங்கப்படவில்லை.

ஏமாற்றம் 6: பரந்தூருக்கு ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் வே அமைப்பதற்கான அறிவிப்பும் வெளியாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+