லாஸ்ட்டு "துருப்பு சீட்டு" இதான்.. எடப்பாடி "அதை" சமாளிப்பாரா? பன்னீருக்கு "மேஜர் பாயிண்ட்" இருக்கே
சென்னை: சின்னம் கிடைக்காமல் கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? அதிமுக விவகாரத்தில் அவருக்கு உள்ள கடைசி துருப்பு சீட்டு என்ன என்பது குறித்த எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளன.
எடப்பாடி பழனிசாமி கர்நாடக தேர்தலில் போட்டியிட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஓபிஎஸ்.. அதாவது, கர்நாடக சட்டசபை தேர்தலில், அதிமுக தனித்து போட்டியிட முடிவு செய்தால், அந்த கட்சிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் தடுப்பதற்கான முயற்சியில் ஓபிஎஸ் டீம் களமிறங்க தயாராகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின..
ஒருவேளை அதிமுக போட்டியிடாமல், தேர்தலை புறக்கணிக்குமானால் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க, ஓபிஎஸ் அணி ரெடியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.. ஆனால், திடுதிப்பென்று ஓபிஎஸ்ஸூம் கோதாவில் குதித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி: எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு போட்டியாக அதே புலிகேசி நகர் தொகுதியில் ஓபிஎஸ்ஸூம் தனது அணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.. கர்நாடக சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நெடுஞ்செழியன் நிறுத்தப்படுகிறார் என்று அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். பிறகு, 3 இடங்களில் போட்டியிட போவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.. கர்நாடகாவில் மூன்று தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது..
புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியனும், கோலார் தங்க வயல் பகுதியில் அனந்த ராஜ்ஜும், காந்தி நகர் தொகுதியில் குமாரும் போட்டியிடுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது... கர்நாடகாவைப் பொறுத்தவரை ஜெயலலிதா காலத்திலிருந்தே அதிமுக கட்சிக்கு கர்நாடகாவிலும் நிர்வாகிகள் இருந்துவருகின்றனர்... ஓபிஎஸ் இப்படி அறிவிக்க காரணம், மூத்த தலைவர் புகழேந்திதான் என்கிறார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, தினகரனை ஆதரித்த அவர், ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்தார்.
தனிச்சின்னம்: இப்போது அவர், ஓபிஎஸ் அணியில் உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியை தீவிரமாக எதிர்த்தும் வருகிறார்.. பெங்களூருவில் தீவிர அரசியல் பணி செய்த அனுபவம் அவருக்கு உள்ளதால், நிச்சயம் ஓபிஎஸ்ஸுக்கு உதவக்கூடும் என்கிறார்கள்.. அதனால்தான், ஓபிஎஸ் இவ்வாறு 3 தொகுதிகளில் போட்டி என்பதை அறிவித்ததாக சொல்கிறார்கள்.. ஆனால் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததால், கட்சியின் பெயர், சின்னம் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே ஓபிஎஸ் டீம், சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேசமயம், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு உட்பட்டது எனத்தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்த ஒரு துருப்பு சீட்டு போல உள்ளதாக தெரிகிறது.. எனவே, சென்னை ஹைகோர்ட் மற்றும் டெல்லி ஹைகோர்ட்டில் உள்ள வழக்குகளை மேற்கோள் காட்டி, கொடி, சின்னம், கட்சியின் பெயரை ஓபிஎஸ் பயன்படுத்துவார் என தெரிகிறது.
கடைசி துருப்பு: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிறகும், சசிகலா அதிமுக, சின்னம், கொடி போன்றவற்றைப் பயன்படுத்தவில்லையா? அதுபோலத்தான் வழக்குகளை மேற்கோள் காட்டி ஓபிஎஸ் சமாளிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். அதேபோல, திருச்சி மாநாட்டிற்கு அதிமுக என்ற பெயரையோ, சின்னம், கொடியையோ ஓபிஎஸ் பயன்படுத்துகிறாரா? என்று கழுகுக்கண்ணால் கவனித்து வருகிறது எடப்பாடி பழனிசாமி அணி.. ஒருவேளை ஓபிஎஸ் அவைகளை பயன்படுத்தினால், அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதால், எடப்பாடி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் மாநாட்டை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications