"B டீம்".. கண் சிவந்த மேலிடம்.. பறந்த டாக்குமெண்ட்கள்.. யார் சீமானா? உள்துறையின் பிளான் இதுவா
நாம் தமிழர் கட்சி சீமானுக்கு உள்துறை மூலம் சிக்கல் வர வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்
சென்னை: தொடர்ந்து பாஜகவை சீண்டி வரும் சீமானின் மீது மேலிடப்பார்வை அழுத்தமாக விழுந்துள்ளதாம்.. இதையடுத்து, சிக்கல் ஒன்று விரைவில் நாம் தமிழர் கட்சி சீமானை சூழலாம் என்று யூகமான தகவல் ஒன்று இணையத்தில் பறந்து கொண்டிருக்கிறது.
தமிழக அரசியலில் மூன்றாவது இடத்துக்கு போட்டியிட்ட கட்சிகளுள் ஒன்றுதான் நாம் தமிழர் கட்சி.. இதுவரை போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாமே தோல்வியை தழுவினாலும், குறிப்பிடத்தக்க தொகுதிகளில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் அளவுக்கு அக்கட்சி முன்னேறி உள்ளதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
கூட்டணி இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டு ஏறக்குறைய 6.5%-க்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது..

B டீம்
இதற்கெல்லாம் காரணம், தன்னுடைய கட்சியின் வேட்பாளர் தேர்வை கூட, மிகுந்த கணக்குகளுடனேயே சீமான் கையாண்ட விதம்தான்.. திமுக, அதிமுகவின் வாக்குகளை பிரிக்கக்கூடிய அளவுக்கு நாம் தமிழர் கட்சி, சிறப்பாக களமாடி வருகிறது.. சீமானை பொறுத்தவரை, "பாஜகவின் பி டீம்" என்ற கலர், தொடர்ந்து இவர்மீது பரவலாக பூசப்பட்டு வரும் நிலையில், தன்னுடைய எல்லா மேடைகளிலும் பாஜகவையும், ஆர்எஸ்எஸ்ஸையும் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்.. சில சமயம், பிரதமர் மோடியை போல் மிமிக்ரியும் செய்து காட்டி கிண்டலடிப்பார்..

பி TEAM
ஆனால், பாஜகவின் ஊழல் குறித்து சிலசமயம் இவரிடம் கேள்வி எழுப்பினால், அதற்கு மழுப்பலான பதிலை சொல்லி, வழக்கம்போல் திமுகவிடமே, அம்பை திரும்பி விட்டுவிடுவார்.. இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு, 5ஜி ஊழல் குறித்து ஆ.ராசா குற்றஞ்சாட்டுகிறாரே, அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.. இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நாட்டிற்கு இரண்டரை லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டிருப்பதாகவும் புகார்கள் வந்துள்ளதே, இதை பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டதற்கு, திடீரென சிரித்தார் சீமான்..

குபீர் சிரிப்பு
"என்னது, கருத்தா?.. இப்பதான் இது தெரியுதா? இழப்பீடு நேர்ந்திருக்கிறது என்று சொல்லும் பெருமக்கள், இவ்வளவு காலம் என்ன பண்ணிட்டு இருந்தாங்க? இழப்பீடு நேரும்வரை என்ன பண்ணிட்டு இருந்தீங்க?ன்னு கேட்கிறேன்.. இழப்பீடு நேர்ந்து, 8 வருட காலம் பாஜக ஆட்சிக்கு பிறகு, இரண்டரை லட்சம் கோடி இழப்பீடு என்று இப்பதான் தெரியுதா?" என்று திருப்பி கேட்டாரே தவிர, அந்த ஊழல், முறைகேடு பற்றி கடைசிவரை பதில் ஏதும் சொல்லவேயில்லை என்பது கவனிக்கத்தக்கது.

தொங்கும் கத்தி
இப்போது விஷயம் என்னவென்றால் சீமானுக்கு ஒரு சிக்கல் சூழ வாய்ப்பிருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன.. அதாவது, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்றியதை கடுமையாக சாடியிருந்தார் சீமான்.. என்ஐஏ பாஜகவின் கிளைப் பிரிவுபோல் செயல்படுவதாகவும் விமர்சித்திருந்தார்.. இதையடுத்து, கடந்த ஒரு வாரமாகவே, சீமானின் நடவடிக்கைகள் குறித்து தீவிர விசாரணையில் இருக்கிறதாம் மத்திய உள்துறை அமைச்சகம்... சில முக்கிய கோப்புகள், மேலிடத்திற்கு நகர்ந்தும் வருகிறதாம்.

சீக்ரெட் டாக்குமெண்ட்
குறிப்பாக, சீமான் தன்னுடைய கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து நிதிபெற்றது தொடர்பான சில டாக்குமெண்ட்கள் உள்துறை அமைச்சகத்தின் கையில் சிக்கி உள்ளதாக சொல்கிறார்கள்... அதுகுறித்தோ அல்லது சீமான் தொடர்பாக வேறு ஏதாவது ஒரு விவகாரம் குறித்தோ, சீமானுக்கு செக் வைக்க முனைகிறதாம் மேலிடம்.. ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், சீமானுக்கு நெருக்கடி தர நேர்ந்தால், அதையும் தகர்த்தெறிந்து பொய்யென நிரூபித்து, தொடர்ந்து முன்னேறவே செய்வார் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் அவரது தம்பிகள்..!!












Click it and Unblock the Notifications