Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டிலேயே முதல்முறை நடந்த விஷயம்.. சீமான் சொன்னது அத்தனையும் நிஜம்: விஜயகாந்த் விஜய்காந்த்தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் இழப்பிலிருந்து, தமிழக மக்கள் இன்னும் மீளவில்லை.. ஏதோ இனம்புரியாத சோகத்தில் மூழ்கி கிடக்கிறது இந்த தமிழ்நாடு..!!!

நேற்று விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில், 2 மணி நேரத்தில் வெறும் 5 கி.மீ தூரமே கடக்க முடிந்தது என்றால், அந்த அளவுக்கு கூட்டம் திரண்டு வந்திருந்தது.. இதெல்லாம் வெறும் கட்சி தொண்டர்கள் கூட்டம் அல்லது ரசிகர் கூட்டம் என்று மட்டுமே கருத முடியாது..

Are these the good qualities of DMDK Vijayakanth and Vijayakanth was one of the best leaders of Tamil Nadu

விதை: அதேசமயம், இதற்கெல்லாம் "விதை" போட்டது விஜயகாந்த்தின் நண்பர் ராவுத்தர் என்பதையும் இங்கு அழுத்தமாக பதிவு செய்ய வேண்டி உள்ளது.
ஒரு சாதாரண ஹீரோவை, இன்னொரு எம்ஜிஆராக பார்க்க ஆசைப்பட்டவர் ராவுத்தர்.. ஒரு நடிகரை தமிழகத்தின் முதல்வராக உயர்த்தி பார்க்க ஆசைப்பட்டவர் ராவுத்தர்.. அதனால்தான், பேண்ட் சட்டையிலிருந்த விஜயகாந்த்தை, வெள்ளை வேட்டி சட்டைக்கு மாற்றியவர் ராவுத்தர்.. ரசிகனுக்கு வணக்கத்தை வைக்காமல், தோளில் கை போட்டு பேசும் சமத்துவத்தை கற்று கொடுத்தவர் ராவுத்தர்..

உழைப்பு: ராவுத்தரின் அன்றைய உழைப்புக்கு கிடைத்த பரிசுதான், 29 தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள், பிரதான எதிர்க்கட்சி தலைவர், 14 சதவீத வாக்கு வங்கி போன்ற எல்லாமே.. ஒவ்வொருமுறையும் விழும்போதும், எழும்போதும் தாங்கிப்பிடித்த ராவுத்தரை, விஜயகாந்த் கைவிட்டது, அவரது வாழ்வில் மிகப்பெரிய கறுப்பு புள்ளியாகவே தங்கிவிட்டது ஒரு குறைதான்.

தள்ளாமையில் இருக்கும் விஜயகாந்த்தின் வீடியோக்களை பார்க்கும்போதெல்லாம் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு நெஞ்சை அடைத்துவிட்டு செல்லும்.. ஆனால், இந்த 2 நாட்களாகவே தமிழகம் கதிகலங்கி கிடக்கிறது.. தங்கள் வீட்டு சொந்தம், பிரிந்துபோன துக்கத்தில் துவண்டு கிடக்கிறது.. மாநிலம் முழுவதையும் சோகங்கள் அப்பிக்கிடக்கிறது. இந்த இறப்பிலும்கூட, கக்கப்பட்ட சில வன்மங்கள், இணையத்தை வட்டமடித்தன.

"இங்கே எல்லாருமே கெட்டவர்கள் கிடையாது.. நல்லவர்கள் 75 சதம் இருக்கிறார்கள்.. விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர்.. இருக்கட்டுமே, ஆனால், அவரால் இந்த நாட்டிற்கு என்ன பயன்? இந்த மொழிக்கு என்ன பயன்? இந்த சமுதாயத்திற்கு என்ன பயன்? ஒரு தலைவராக இருப்பவருடைய பார்வை சமுதாயம் நோக்கோடு இருக்க வேண்டும் அல்லவா? வெறும் நல்ல மனிதரை வைத்து என்ன செய்ய முடியும்?" என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

பண்புகள்: "சில நற்பண்புகள் அங்கொன்றும் இங்கொன்றும் அனைவருக்குமே இருக்கும் என்பதால், ஒரு நபரை முழுமையாகத்தான் அலசி பார்க்கவேண்டும்.. ஒரேடியாக புகழ கூடாது" என்று இன்னொரு தரப்பு விமர்சிக்கிறது.

"நீ வாழ்ந்த வாழ்க்கை என்பது, நீ இறந்த நாளில் இருந்து துவங்குகிறது" என்ற இந்த வரிகளை மட்டுமே இதுபோன்றவர்களுக்கு பதிலாக தர வேண்டியிருக்கிறது.

குணங்கள்: ஒருசில நல்ல குணங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அந்த குணங்கள், மற்றவர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கிறதா? என்பதே கேள்வி. இங்குதான் விஜயகாந்த் வேறுபடுகிறார்.. பல பேரை உருவாக்க கூடிய பலத்தை பெற்றிருந்தார் விஜயகாந்த்.. இன்று தமிழ்நாட்டுக்கு முதல்வராக துடிக்கும் சில நடிகர்கள்கூட, விஜயகாந்த் செய்ததில் இம்மியளவு செய்திருப்பார்களா என்பதை ஒப்பிட வேண்டியிருக்கிறது. இங்குதான் விஜயகாந்த் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்.

விசிக-வின் ஷா நவாஸ் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.. ஒருமுறை விஜயகாந்த் வீட்டுக்கு போயிருந்தோம்.. "இஸ்லாமியர்களை வில்லனா சித்தரித்து சில படங்களில் நடித்திருக்கிறீர்களே?" என்று கேட்டோம்.

பூஜைகள்: அதற்கு அவர், "தினமும் அப்படித்தானே பேப்பரில் நியூஸ் வருது? அதன் அடிப்படையில் தானே படம் எடுக்கிறோம்?" என்று அப்பாவித்தனமாக கேட்டார். பிறகு தன்னுடைய பூஜை அறைக்கு அழைத்து சென்று காட்டியபோது, அங்கே இயேசு, மெக்கா மதினா படங்கள் உட்பட, எல்லா மத கடவுளும் இருந்தார்கள்.. அவர் வணங்குவது மட்டும் இல்லாமல் தன் குடும்பத்தாரையும் வணங்க செய்து இருக்கிறார்" என்றார். இங்குதான் விஜயகாந்த் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்.

இளைஞர்கள் மீது யாருக்கும் வராத நம்பிக்கை விஜயகாந்த்துக்கு மட்டும் ஏன் வந்தது? "ஊமை விழிகள்" என்ற ஒரு படம் வராமல் போயிருந்தால், அந்த படத்தின் டெக்னிஷியன்கள் எங்கே போயிருந்திருப்பார்கள்? வணிக சினிமாவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சேர்த்ததில் திரைப்படக்கல்லூரிக்கு பெரும்பங்கு உண்டு என்றால், இந்த திரைப்படக்கல்லூரியின் "விழுதாக" தாங்கி பிடித்தது விஜயகாந்த் என்பதை மறுக்க முடியாது. இங்குதான் விஜயகாந்த் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்.

நம்பிக்கைவாதி: தொடர் தோல்விகள், உடனிருந்தவர்களின் பச்சை துரோகங்கள், முதுகில் குத்திய நம்பிக்கைவாதிகள், கைவிட்ட தோழன்கள்... இதெல்லாம் சேர்ந்துதான், விஜயகாந்த்தை உருக்குலைய வைத்துவிட்டது. ஒருமனிதனின் உடல்மொழியை பழிப்பது என்பது கடைந்தெடுத்த அநாகரீகம்.. அந்த அநாகரீகத்தின் உச்சத்தை தொட்டது அன்றைய பல மீடியாக்கள்..

விஜயகாந்த் பேசுவது, சிரிப்பது, அழுவது, என அவரது ஒவ்வொரு உணர்வையும், காட்சி பொருளாக்கி காசு பார்த்தது அந்த கூட்டம். எந்த மீடியாவால் அவர் ட்ரோல் செய்யப்பட்டாரோ, எந்த மீடியாவால் வணிக மெட்டீரியலா பார்க்கப்பட்டாரோ, இன்று மொத்த மீடியாவையும், தன்னை பற்றி மட்டுமே பேச வைத்துவிட்டு போயுள்ளார் விஜயகாந்த்.. இங்குதான் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார் விஜயகாந்த்.

சாப்பாடு: "எம்ஜிஆர், சிவாஜி வீடுகளிலிருந்து பெரிய பெரிய கேரியர்களில், ஷூட்டிங்குக்கு சாப்பாடு வரும்.. அந்த சாப்பாட்டை எங்களுக்கும் பகிர்ந்து தந்து சாப்பிடுவார்கள்" என்று பல நடிகர்கள் சொல்லி கேட்டுள்ளோம்.

ஆனால், பெரிய நடிகர்களுக்கு உயர்தர சாப்பாடும், மற்றவர்களுக்கு தயிர் சாதம், சாம்பார் சாதம் பொட்டலம் என விதிக்கப்பட்ட பாகுபாட்டை உடைத்தெறிந்தவர் விஜயகாந்த்.. சாதாரண சாப்பாட்டு விஷயத்தையும் ஜனநாயகப்படுத்தியவர் விஜயகாந்த்தான்.. ராஜாபாதர் தெரு அலுவலகம் தங்களுக்கு வேடந்தாங்கல் புகலிடமானதை, இன்றளவும் நன்றியுடன் கலங்கி சொல்கிறார்கள் அங்கிருந்து வெளிவந்த திரைபறவைகள்... இங்குதான் விஜயகாந்த் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்.

சீமான்: "விஜயகாந்த் ஆபீஸ் மட்டும் அன்று இல்லாமல் போயிருந்தால், என்னைக்கோ ஊருக்கு சென்றிருப்பேன்" என்று சீமான் ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார்.. அதுதான் நிஜம்.

ஒருவர் பொதுவெளியில் கோபப்படுகிறார் என்றால், அவருக்கு நடிக்க தெரியவில்லை என்றே அர்த்தம்.. அந்தவகையில், விஜயகாந்த்தின் இதயத்திற்கும் - செயல்பாட்டுக்கும் இடைவெளி மிகவும் குறைவு. இங்குதான் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார் விஜயகாந்த்..!

எப்படி இருக்கிறோமோ, அப்படியே தன்னை வெளிப்படுத்தி கொள்ளும் நிஜ எளிமைவாதி விஜயகாந்த்..!

Are these the good qualities of DMDK Vijayakanth and Vijayakanth was one of the best leaders of Tamil Nadu

எந்த சூழலிலும் நேர்மையான பேச்சை வெளிப்படுத்தியவர் விஜயகாந்த்..!

விதவிதமாக ட்ரோல் செய்தும்கூட, எந்தவித கோபத்தையும், ஆதங்கத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தாமல், கடந்து சென்ற முதிர்ச்சி பக்குவம் நிறைந்தவர் விஜயகாந்த்..!

கூழை கும்பிடு போட்டு, சொந்த கட்சி உட்பட உதிரி கட்சிகள் வரை "அம்மா" என்று அழைத்தவர்கள் மத்தியில், வளையாத முதுகெலும்புடன் கம்பீரமாக நின்று "ஜெயலலிதா" என்று பெயரை சொல்லி அழைத்த துணிச்சல்வாதி விஜயகாந்த்..!

மாற்று கருத்துக்களும், மனம்நிறைய வருத்தங்களும் கொண்டிருந்த நிலையிலும், "கலைஞர்" என்ற மரியாதைக்குரிய வார்த்தையுடன் விளித்தவர் விஜயகாந்த்..!

சொந்த உழைப்பாலும், சொந்த திறமையாலும், முன்னுக்கு வருபவர்களை, எப்படி சூழ்ச்சி செய்து சிலர் வேட்டையாடுகிறார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் விஜயகாந்த்தான்.

ஆக, நாம் எங்கு இருக்கிறோமோ - எந்த துறையில் இருக்கிறோமோ - யார் மத்தியில் வாழ்கிறோமோ - அவர்களுக்காக வாழ்வது, அவர்களது உயர்வுக்காக உழைப்பது, பலனை எதிர்பாராமல் பாடுபடுவதுதான் மனிதனாய் பிறந்ததற்கு காரணம் என்ற அர்த்தத்தை புரிய வைத்திருக்கிறார் விஜயகாந்த்..!

வீ மிஸ் யூ கேப்டன்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+