Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நங்கூரத்தை" நச்சுனு போட்ட நடிகர் விஜய்.. "நீங்க ரெடியா இருங்க".. மலைத்து பார்க்கும் திராவிட கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாதி அரசியலை விஜய் முன்னெடுக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் வெடித்து கிளம்பிய நிலையில், இன்றைய தினம் விஜய்யின் மக்கள் இயக்கம் ஆலோசனை கூட்டத்தை பனையூரில் நடத்துகிறது.

இதோ அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்த்தால், விஜய்யின் அரசியல் உறுதியாகி கொண்டு வருகிறது.. அதேசமயம், அவர் என்ன மாதிரியான அரசியலை முன்னெடுக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வருகிறது.
நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் ஆரம்பமாகி உள்ள நிலையில், எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்க போகிறார் என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால், எம்பி தேர்தலைவிட, தமிழக சட்டப்பேரவை தேர்தலை மையப்படுத்தியே இருக்கலாம் என்றும், வேண்டுமானால், இந்த எம்பி தேர்தலை 'வெள்ளோட்டமாக' விஜய்யின் மக்கள் இயக்கம் பயன்படுத்தி கொள்ள நிறைய வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்..

 Are these the political plans of actor Vijay and what did Vijay Makkal Iyakkam general secretary Pussy Anand

ஒருபக்கம் நலப்பணி திட்டங்கள் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் "தொகுதி வாரி" என்ற சொல் தவறாமல் இடம்பெறுவதும் அரங்கேறி வருகிறது. மாணவர்களை அழைத்து பாராட்டுவது, உதவித்தொகை வழங்குவது, இரவு நேர பயிலகம், சட்டம் தொடர்பான வகுப்புகள் என தீவிரமாக செயல்பட்டுவரும்நிலையில், அடுத்துக்கட்டத்துக்கு நகர்ந்துள்ளது விஜய்யின் ஐடி விங்..

அந்தவகையில், அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து 2 நாட்களுக்கு முன்பு, ஒரு அழைப்பு விடுத்திருந்தார்.

அழைப்பு: அதில், "ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வாயிலாக மாவட்டம், இளைஞரணி, தொண்டரணி, மாணவரணி, வழக்கறிஞர் அணி, மகளிர் அணி, வர்த்தக அணி, விவசாய அணி, தொழிற்சங்க அணி, ஊடக அணி மற்றும் நகரம், ஒன்றியம், வார்டு, பகுதி, கிளை, பூத் கமிட்டி உறுப்பினர் வரை செயல்வீரர்களாக செயல்படுவது குறித்தான (IT Wing) ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

சனிக்கிழமை (26.08.2023) அன்று காலை 8.55 மணியளவில் சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற உள்ளதால் தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிக்காக பரிந்துரை செய்த மூன்று (IT Wing) நபர்களை தவறாமல் தங்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்து வந்து கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

என்ன காரணம்: விஜய்யின் மக்கள் இயக்கமும், விஜய்யின் செயல்பாடுகளும், விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பை அவரது ரசிகர்களிடமும், பொதுமக்களிடம் ஏற்படுத்தி வரும் சூழலில், இன்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.. எதற்காக இந்த ஆலோசனை கூட்டம் என்று இதுவரை தெரியவில்லை.

நேற்றைய தினம், தன்னுடைய 71 வது பிறந்தநாளை வழக்கம்போல், தேமுதிக தலைவர் விஜய்காந்த், தன்னுடைய தொண்டர்களுடன் கொண்டாடியிருந்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரமுகர்களும், திரையுலகத்தினரும் விஜயகாந்த்துக்கு வாழ்த்துக்களை சொன்னார்கள். ஆனால், நடிகர் விஜய், எந்த வாழ்த்தையும் சொல்லவில்லை என்பதை சோஷியல் மீடியாவில் பலரும் மறைமுகமாக சுட்டிக்காட்டினர்..

நன்றி எங்கே: தன்னை திரைத்துறையில் வளர்த்துவிட்ட நடிகர் விஜயகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறாமல் திருமாவளவனுக்கு மட்டும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லியதையும், தயாரிப்பாளர் ஏஎம் சவுத்ரி வீடியோ வெளியிட்டு கடுமையாக சாடியிருந்தார். இந்த சாதிய அரசியலை மிக விரைவில் தோலுரிப்பேன்.

நடிகர் விஜய் சாதி ரீதியாக அடையாளப்பட்டுள்ளார். அவர் சாதி அரசியலை நோக்கி பயணப்பட உள்ளார்.. இந்த நன்றி கெட்ட செயலுக்கு நடிகர் விஜய் மிக விரைவில் பதில் கூறியே ஆகவேண்டும் என்றும் கூறியிருந்தார். இதுகுறித்த பரபரப்பும் இன்றைய தினம் மீடியாவில் பரபரக்கும் சூழலில், விஜய்யின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது.

1000 பேர்: சமூக வலைதளங்கள் மூலமாக மக்களை சந்திக்க முனைந்துள்ளதால், அரசியல் கட்சிகளின் கவனத்தையும் இந்த கூட்டம் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. நடிகர் விஜயின் உத்தரவுப்படி நடைபெறும் தொழில்நுட்ப அணியின் இந்த ஆலோசனை கூட்டத்துக்கு, மொத்தம் 1000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.. குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டே கூட்டத்தை நடத்துவதால், விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் அரசியல் களத்தில் கவனம் ஈர்க்க தொடங்கியிருக்கிறது.

பேட்டி: இன்றைய கூட்டம் துவங்குவதற்கு முன்பு, செய்தியாளர்களை சந்தித்து பேசினார் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.. அப்போது, ''விஜய் மக்கள் இயக்க தொழில்நுட்ப பிரிவில் 3 லட்சம் பேர் செயல்பட்டுவருகின்றனர். ஐடி பிரிவு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றுவருகிறது. அடுத்தடுத்து பல்வேறு பிரிவினருடன் ஆலோசனை நடத்தவிருக்கிறோம்'' என்றார்.

பிறகு, ஆலோசனை கூட்டம் ஆரம்பமானது.. இந்த நிகழ்வில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் முன்னிலையில் அவர் பேசியபோது, "31 வருடங்களுக்கு முன் ரசிகர் மன்றம் துவங்கப்பட்டது. 15 வருடங்களுக்கு முன் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. இனிவரும் காலங்களில் அடுத்தக்கட்ட பரிமாணத்திற்கு தயாராக வேண்டியிருக்கலாம். அதற்கு ஏற்ற வகையில் செயல்படும் நோக்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+