சூட்டோடு சூட்டாக போன மெசேஜ்.. டார்ச் ஒளியில் "கருகுதா" தாமரை? பாஜக ஓட்டை பிரிப்பது "இவரா"? பலே திமுக
சென்னை: திமுக கூட்டணி ஏற்கனவே, ஹவுஸ்ஃபுல்லாக இருக்கும்போது, மக்கள் நீதி மய்யமும், திமுகவுடன் ஐக்கியமாகும் என்று தெரிகிறது. அதேசமயம், திமுக கூட்டணிக்கு, மய்யம் வலுசேர்க்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அரசியலுக்கு வந்ததுமே, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கையில் எடுத்த முதல் விஷயம் கிராமசபை கூட்டம்தான்.. தமிழக மக்களால் பல வருட காலம் மறக்கடிக்கப்பட்டிருந்த, கிராமசபை பற்றி கமல் சொன்னபோது யாருமே அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை..

கமல்ஹாசன்: ஆனால், மாதிரி கிராம சபை கூட்டங்களுக்கும் கமலே நேரடியாக சென்று விழிப்புணர்வு ஊட்டவும்தான், திமுகவும் இதே பாணியை கையில் எடுத்தது. முக ஸ்டாலின் மக்களவை தேர்தலுக்கு முன்பு கிராம சபை கூட்டங்களை நடத்தினார் என்றால், அதற்கு முன்னோடி, கமல் என்பதை மறுக்க முடியாது.. அதுபோலவே, சட்டசபை தேர்தலுக்கு முன்பும் கூட்டங்களை நடத்தினார்..
செல்லுமிடமில்லாம் கூட்டம் முண்டியடித்து கொண்டு வந்தது.. அதற்கு பிறகு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, உள்ளாட்சி தேர்தல் நடந்தபோதும்கூட, மீண்டும் கிராம சபை தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தியது கமல்ஹாசன்தான்.
கிராமசபைகள்: எனினும், என்னதான் கமல் கிராம சபை கூட்டத்தை நடத்தி வந்தாலும், தேர்தல் என்று வரும்போது, கிராமங்களுக்கு முக்கியத்துவம் தந்து பிரச்சாரங்களையும், வேட்பாளர்களையும் நிறுத்துவதில்லை என்று ஒரு குறை இருக்கவே செய்கிறது.
குறிப்பாக, கமல் "மேல்மட்ட" அளவிலேயே அரசியல் செய்து வருவதாகவும், கமல் நினைத்திருந்தால், ஏதாவது ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து, தானே நேரடியாக போட்டியிட்டிருந்தால், அது இன்னமும் அவருக்கு பலத்தை தந்திருக்குமே என்ற கருத்துக்களும் எழத்தான் செய்கின்றன..
அதிருப்திகள்: இதோ இப்போது எம்பி தேர்தலுக்கு, மய்யம் தயாராகிவரும்நிலையில், எப்படியும் தன் கட்சியின் மீதான குறைகளையும் அதிருப்திகளையும் கமல் போக்குவார் என்றே நம்பப்படுகிறது. அதற்கேற்றவாறு, 2 நாட்களுக்கு முன்பு கமல் பேசியபோது, "கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினை பலப்படுத்தி மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள கட்சியாக உருவாக்க வேண்டும்" என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்ததை கவனிக்க முடிந்தது.
கடந்த முறை தேர்தலில், எடுத்த எடுப்பிலேயே, குறிப்பிடத்தகுந்த வாக்குகளை, மய்யம் பெற்றிருந்தது. கிராமப்புறங்களை விட, நகர்ப்புற பகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்தன.. அதிலும் பாஜகவுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுக்களை பிரித்ததில், மய்யத்தக்கு நிறைய பங்கு இருந்தது.. என்றாலும், வரும் தேர்தலில் கிராமங்களிலும் வாக்குகளை தக்க வைக்க வேண்டிய அவசியம் கமலுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.
1+1 சீட்கள்: தற்போது, பாஜக எதிர்ப்பு என்ற விஷயத்தில், கமல்ஹாசனின் உறுதித்தன்மை அதிகமாகவே உள்ளதால், திமுக மற்றும் காங்கிரசுடன் கூட்டணியில் இணையும்போது, அந்த உறுதித்தன்மை மேலும் பலத்தையே பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று டெல்லியில் தனது குரலை ஒலிக்கச் செய்து விட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் தீவிரமாக இருப்பதால், அவருக்கு மட்டும் ஒரு இடம் ஒதுக்குவதற்கு, திமுக கூட்டணியில் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இருந்தாலும், எப்படியாவது 2 இடங்களை, திமுக மேலிடம் கேட்டு பெற்று விட வேண்டும் என்பதிலும் மய்யத்தினர் உறுதியாக இருக்கிறார்களாம்.. அத்துடன், கூட்டணி பேச்சுவார்த்தையில் இதனை வலுவாக வலியுறுத்தவும் அவர்கள் முடிவு செய்து இருக்கிறார்களாம்..
உதயசூரியன்: திமுக கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள கட்சிகளே தற்போதும் நீடிப்பதாக தெரிகிறது. பாரிவேந்தர் மட்டும், பாஜக பக்கம் தாவியிருக்கிறார். வேல்முருகன் நிலைப்பாடு இதுவரை தெரியவில்லை. எனினும், புதிதாக இடம்பெற போகும் மய்யத்திற்கு, எத்தனை இடங்களை திமுக ஒதுக்கப்போகிறது என்று தெரியவில்லை.
ஒருவேளை, வைகோவுக்கு ஒதுக்கியதுபோல, 1+1 பாணியில் சீட்டுகளை ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்படி வற்புறுத்தினால், மய்யம் என்ன முடிவெடுக்கும் என்பதும் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய விஷயம்தான்.. உதயசூரியன் வெளிச்சத்தில் "டார்ச்" லைட் மங்கலாகிவிடுமா? அல்லது உதயசூரியனுடன் சேர்ந்தே பிரகாசிக்குமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications