Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளம்பிட்டாரு எடப்பாடி.. ஸ்பீடு எடுத்த அதிமுக.. இதுக்கு நடுவில் "டெல்லி புரளி" வேற.. கவனித்த திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் பெரும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.. அதிமுகவின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் திமுகவும் உற்று கவனித்து வருகிறது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அதிர்ச்சி தோல்வியை அதிமுக பெற்றிருந்தது.. இத்தனைக்கும் அதிமுக ஸ்கோர் செய்யக்கூடிய எத்தனையோ நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்திருந்தன. ஆனால், அத்தனை சான்ஸையும் அதிமுக, பயன்படுத்தி கொள்ளவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியிருந்தனர்.

Edappadi Palaniswami BJP DMK Delhi

தருணங்கள்: டிசம்பர் மாத புயல், தென்மாவட்டங்களில் பெய்த வெள்ள பாதிப்பு உட்பட மக்களுடன் நெருங்கியிருக்கக்கூடிய தருணங்களை அதிமுக நழுவவிட்டுவிட்டதாகவும், உரிய நேரங்களில் களத்தில் இறங்காமல், தானுண்டு தன் வேலையுண்டு என்று செயல்பட்டதாகவும் விமர்சகர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதுமட்டுமல்ல, அதிமுக ஸ்கோர் செய்ய வேண்டிய இடத்திலெல்லாம் தமிழக பாஜக அசால்ட்டாக உள்ளே நுழைந்து களப்பணியில் இறங்கியதுடன், திமுகவையும் எதிர்த்து ஒவ்வொரு விஷயத்திலும் கேள்விகளை கேட்டுக் கொண்டேயிருந்ததையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

கணிப்புகள்: தேர்தல் கணிப்புகளில் வெளிவந்தபடியே, தேர்தல் முடிவும் அதிமுகவுக்கு பாதகமாகிவிட்டது. இதனால் அதிமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அதிருப்திகளையும், ஆதங்கங்களையும் வீடியோ மூலம் வெளிப்படுத்தும் வரை நிலைமை சென்றது.

இதற்குபிறகே தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் அதிமுக அதிரடி காட்டி வருகிறது.. திமுக அரசை கேள்வி மேல் கேள்வியாக கேட்டு, இறங்கியடிக்க துவங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

திமுக அரசு: சட்டசபை தேர்தலுக்கான நாளும் நெருங்கி வருவதையொட்டி, திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளை அனைத்து எதிர்க்கட்சிகளுமே முன்வைப்பது அதிகரித்தபடியே வருகின்றன.. இதில், முதல்நபராக குதித்துள்ளவர் எடப்பாடி பழனிசாமி ஆவார்.. தினந்தோறும் ஒரு அறிக்கையை வெளியிட்டு, திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக சொல்லி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

பால் விலை, முத்திரை கட்டணம் உயர்வு முதல் மின்கட்டணம் உயர்வு வரை, அரசு பஸ்களில் கட்டண உயர்வு என ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி, கண்டித்து வந்த நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது..

கள்ளக்குறிச்சி: இதனை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அதிமுகவினர் ஆர்பாட்டம் நடத்தினார்கள்.. சட்டசபையில் அமளியை ஏற்படுத்தினார்கள்.. உண்ணாவிரத போராட்டத்தையும் கையில் எடுத்தார்கள்.. ஆளுநரையும் சந்தித்து மனு அளித்தார்கள்.. போதாக்குறைக்கு தேமுதிக தலைவர் பிரேமலதாவிடமும் இதுகுறித்து பேசி, கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து ஆளுநரிடம் மனு அளிக்க செய்ததாம் அதிமுக.

சட்டப்பேரவையில் புறகணிப்பதாக எடுத்த அதிமுகவின் முடிவு தனக்கு வருத்தம் அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் வருத்தத்தை பதிவு செய்திருந்தாலும், திமுக எதிர்ப்பு என்ற விஷயத்தில் அதிமுக வீறுகொண்டு எழுந்துள்ளது..

எடப்பாடி பழனிசாமி: 4 நாட்களுக்கு முன்புகூட, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. டெல்லி செல்லும் எடப்பாடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாகவும், அப்போது கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கை சிபிஐ விசாரணை கோரி மனு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இப்போது நாளைய தினம் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் மீண்டும் கிளம்பியது.. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமித்ஷா: பாஜகவின் அமித்ஷா, நட்டா போன்ற தலைவர்களை டெல்லியில் எடப்பாடி சந்திக்க உள்ள நிலையில், விரைவில் கூட உள்ள நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் குறித்தும், அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்தும் விவாதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

நாளை டெல்லி செல்வதாக கூறப்பட்ட நிலையில், சேலத்தில் இன்று மாலை உள்ள தன்னுடைய இல்லத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் செய்திகள் கசிந்தன.. பல்வேறு மீடியாக்களில் இந்த செய்தி திடீரென பரவியதையடுத்து, திடீர் பரபரப்பு அரசியல் களத்தில் ஏற்பட்டுவிட்டது.

ஆனால், நாளைய தினம் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லவில்லையாம்.. இதுகுறித்து அதிமுக மறுப்பு தெரிவித்துள்ளது.. எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்வதாக வெளியானது தவறான தகவல் என்றும், ஊடகங்கள் பொறுப்புணர்ந்து செய்தி வெளியிடுமாறும் அதிமுக கேட்டுக் கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+