Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்லி சல்லியா "காலி" பண்ண எடப்பாடி! எம்ஜிஆரின் "பெல்ட்" எங்கே? கிட்ட வரக்கூடாது சசிகலா: யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நற்பண்புகளை தொடர்ந்து வெளிபடுத்தி வரும், மூத்த பத்திரிகையாளர் 'இதயக்கனி' விஜயன், ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். தேர்தல் தோல்வியால் கொந்தளித்து போயிருக்கும் அதிமுக தொண்டர்கள், இந்த வீடியோவை 2 நாட்களாகவே இணையத்தில் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள.

படுமோசமான தோல்வியால் அதிமுக தொண்டர்கள் இடிந்துபோய் உட்கார்ந்துள்ளனர்.. அந்தவகையில் தங்கள் வேதனைகளை சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். அதுபோலவே, "இதயக்கனி" பத்திரிகையின் ஆசிரியர் அந்த வீடியோவில் கடும் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் இவைகள்தான்:

MGR AIADMK lok sabha election ADMK Edappadi Palanisamy BJP government PM Narendra Modi

கவலைகள்: "இந்த லோக்சபா தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல்.. நம்முடைய எதிர்பார்ப்புகளையும் மீறி, கருத்து கணிப்புகளையும் மீறி தேர்தல் முடிவுகள் கவலைப்படுத்துகிறது.. சங்கடப்படுத்துகிறது.. கோபப்படுத்துகிறது.. இது தேசிய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி..!!

பாஜக 400 இடங்களை பிடிப்போம் என்றார்கள். ஆனால் அடிச்சு பிடிச்சு, வெறும் 292 சீட் மட்டுமே வந்திருக்கிறது. அதுவும் கூட்டணியில் இந்த வாக்குகளை பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் 2019 தேர்தலில் 38 இடங்களை பிடித்திருந்த திமுக, இப்போது 40 இடங்களையும் பிடித்துவிட்டது. விளவங்கோடு தேர்தலிலும் காங்கிரஸ் ஜெயித்துவிட்டது.. அதிமுகவுக்கோ 4வது இடம்.. அதாவது நாம் தமிழர் கட்சிக்கு அடுத்த இடத்தை அதிமுக பிடித்திருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது.

தேனி: கடந்த 2019 தேர்தலில், "ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு" என்று தேனியில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.. இப்போது அதுவும் இல்லை.. தொடர்ந்து தோல்விகளில் அதிமுக திணறி கொண்டிருக்கிறது..

அதிமுக எப்படியெல்லாம் உருவாக்கப்பட்ட கட்சி தெரியுமா? எடப்பாடி பழனிசாமி கோவையில் பிரச்சாரம் செய்யும்போது, "2 கோடியே, 4 லட்சம் உறுப்பினர்கள் அதிமுகவில் இருப்பதாக சொன்னார்.. ஆனால், 88 லட்சம்தான் ஓட்டுதான் அதிமுகவுக்கு இப்போது வந்திருக்கிறது.. அப்படியானால், மிச்சம் 1 கோடியே சொச்சம் வாக்குகள் எங்கே போயிற்று? அவர்கள் எல்லாம் ஏன் அதிமுகவுககு ஓட்டு போடல? ஏன் இந்த பிரச்சனைகள் நடந்திருக்கிறது?

சாதனைகள்: புரட்சி தலைவர் எம்ஜிஆர் அன்று கட்சி தொடங்கியபோது மொத்தமே வெறும் 14 லட்சம் உறுப்பினர்தான் இருந்தாங்க.. திமுக கனவுகூட காணமுடியாத அளவுக்கு 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் உட்கார்ந்து சாதனை புரிந்து கொண்டிருந்தார் எம்ஜிஆர்... அந்த கட்டமைப்பும், அந்த பலமும், அந்த வலிமையையும் மிகவும் ஸ்ட்ராங்காக உருவாக்கி வைத்திருந்தார் எம்ஜிஆர்.

பிற்காலத்தில் ஜெ. அணி + ஜா.அணி என்று பிளவுகள் வந்தபோதும்சரி, ஜானகி அம்மா விட்டுக்கொடுத்த பிறகு, அதிமுகவை மிக சரியாக வழிநடத்தினார் ஜெயலலிதா. ஆனால், சசிகலா என்ற தீயசக்தி உள்ளே வந்து, கட்சியை கபளீகரம் பார்த்தபோதும், கட்சியை அசைக்க முடியாமல் வைத்திருந்தார் ஜெயலலிதா.

சசிகலா: இதற்கு நடுவில், ஜெயலலிதா, சசிகலா இருவரும் சேர்ந்து செய்த ஆட்சியின் அட்டுழியங்கள், அத்துமீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் எல்லாம் அதிமுகவையே படிப்படியாக கீழே கொண்டுவந்துவிட்டது. அந்த நேரத்தில் இதுகுறித்து, அதிமுக அமைச்சர் ஒருவர் என்னிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

எங்கே சென்றாலும், மக்கள் எங்களை அடிக்காத குறைதான். அந்த அளவுக்கு இந்த ஆட்சி மீது கோபமாக இருக்கிறார்கள்.. அந்த அளவுக்கு அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது. புரட்சி தலைவர் உருவாக்கிய கட்டமைப்பை இப்படி சிதைத்துவிட்ட கோபம் தொண்டர்களிடம் அப்பட்டமாக தெரிகிறது" என்று அந்த அதிமுக மந்திரி என்னிடம் வருத்தப்பட்டார். அவர் இப்போது திமுகவில் இருக்கிறார் என்பதால் அவர் பெயரை சொல்ல நான் விரும்பவில்லை.

என்ன காரணம்: இதற்குபிறகு, திமுக ஆட்சியின் போக்கை மக்கள் புரிந்து கொண்டதையடுத்து, ஜெயலலிதாவும் தன்னுடைய தவறுகளை திருத்தி கொண்டு மக்களிடம் பேசியதையடுத்து, 2001-ல் அதிமுக வெற்றி பெற்றது. . ஆனால், 2006 தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி மீது அதிருப்தி எதுவுமேயில்லை என்றாலும், அதிமுக தோல்வி சந்தித்தது.

இதற்கு காரணம், கடைசி நேரத்தில் சசிகலா உள்ளே நுழைந்ததுதான்... பணம் வாங்கி கொண்டு, 60 பேரை புதிதாக கட்சிக்குள் நுழைத்து போட்டியிட வைத்தார் சசிகலா.. தோற்க போகிறவங்களுக்காகவெல்லாம் நான் பிரச்சாரம் செய்ய போணுமா? என்று சொல்லிக்கொண்டேதான் ஜெயலலிதா அப்போது பிரச்சாரத்துக்கு சென்றாராம்.. இந்த தகவல் எல்லாம் அன்றைய பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தன..

தவறான புரிதல்கள்: அதிமுக வலிமையாக இதுக்க வேணடும் என்பதற்காக, இதையெல்லாம் அப்போதே நான் பேசினேன். ஆனால், நான் அதிமுகவுக்கு எதிராக பேசுவதாக சொன்னார்கள்.. கட்சியைவிட்டு, சசிகலாவை ஜெயலலிதா நீக்கியதுமே, எனக்கு ஆயிரக்கணக்கானோர் கடிதங்கள் எழுதி நன்றி சொன்னார்கள்.. என்னை தவறாக புரிந்கொண்டதாகவும் வருத்தப்பட்டார்கள். இப்பவும் தவறு செய்பவர்களையே எதிர்க்கிறேனே தவிர, அதிமுகவை இல்லை.

இதே ஜெயலலிதா, பாஜகவுடன் கூட்டணி என மாறி மாறி கூட்டணி வைத்தும் வெற்றி பெற்றார்.. 2011-ல் தேமுதிகவுடன் ஃபுல் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றார். திமுக கோட்டையாக இருந்த சென்னையை , அதிமுகவின் கோட்டையாக அப்போதுதான் மாற்றிக்காட்டினார் ஜெயலலிதா.

கோட்டை விட்டாச்சு: ஆனால், இப்போது வந்துள்ள ரிசல்ட்டை பாருங்கள், 2 இடங்களில் பாஜக 2ம் இடத்தை பிடித்திருக்கிறது.. அதிமுக 3வது இடத்துக்கு போய்விட்டது.. கோட்டையாக விட்டுவிட்டு சென்றதை, கோட்டை விட்டுட்டாங்களே?

தென் மண்டலமும், கொங்கு மண்டலமும் எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது. சாதி ரீதியாக இவர்கள் பிரித்து வைத்து கொண்டாலும், இவையெல்லாம் எம்ஜிஆரின் "பெல்ட்" என்றே பொதுவாக சொல்வார்கள். அவர் போட்டியிட்டு வென்றதும் மதுரைதானே?
அப்படிப்பட்ட மதுரையையும் அதிமுக கோட்டை விட்டுவிட்டது.

தானே தலைவன்: காரணம், இவர்களிடம் தெளிவான பார்வை இல்லை, தொலைநோக்கு பார்வையும் இல்லை.. சரியாக முடிவெடுக்கவும் தெரியவில்லை.. தானே தலைவனாக இருக்க என்ற ஆசைதான், இதற்கெல்லாம் காரணம்.

ராமநாதபுரத்தில் சுயேச்சையாக பலாப்பழத்தில் ஓபிஎஸ் நிற்கிறார்.. உடனே அவர் பேரில் 5 பேரை நிறுத்தி அவரை தோற்கடிக்கிறார்கள். திமுகவை தோற்கடிக்க ஜெயலலிதா எவ்வளவோ ராஜதந்திரம் செய்வார்.. ஆனால், ஒருபோதும் சொந்த கட்சியையே தோற்கடிக்க எந்த காரியத்தையும் செய்தில்லை. இப்படி கட்சியிலிருப்பவர்களே அதிமுகவுக்கு எதிராக இருந்தால் எப்படி?

இதன் விளைவு, ஓபிஎஸ் 2வது இடம் வந்திருக்கிறார்.. ஆனால், அதிமுகவோ 3வது இடத்துக்கு வந்துள்ளது. அதாவது 3-ல் 1-பங்கு வாக்குகளையே அதிமுக வாங்கியிருக்கிறது..

எடப்பாடி : திருநெல்வேலி, தேனியிலும் டெபாசிட் போயிருக்கு... டெபாசிட்டை கூட அதிமுகவால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லையா? 17 லட்சம் உறுப்பினர் வைத்திருந்த எம்ஜிஆர் எங்கே? 2 கோடியே 4 லட்சம் உறுப்பினர் எடப்பாடி எங்கே?
எம்ஜிஆர் கட்சி இன்று இருந்தால் போதும் என்கிறார்கள், அதுக்காக படுதோல்வி அடைந்தால் போதுமா? "தோல்வியையே எதிரிகளுக்கு பரிசாக தந்தவன் நான்" என்று சொன்னதே எம்ஜிஆர்தான்.. தனித்து போட்டியிட்டு ஜெயலலிதா சாதனை செய்தாங்களே?

மூடநம்பிக்கை: இன்று யாரிடமும் ஒற்றுமையில்லை.. கீழே விழுந்தாலும் மீசையிலும் மண் ஒட்டவில்லை என்பதே என்பது அதிமுகவுக்கு பழகிவிட்டது போலும். இந்த ஓட்டுக்களுக்கே திருப்தி பட்டுக்கொள்வது மூடநம்பிக்கை.. தங்கள் தவறுகளை உணர வேண்டும்.. அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று ஜேசிடி பிரபாகரன் சொல்கிறார். ஆனால், அவரையும் விமர்சிக்கிறார்கள்.. அவரை விமர்சிக்க அதிமுக தலைவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.

மோடியுடன் கூட்டணி வைத்தால் முஸ்லிம் ஓட்டுக்கள் வராது என்று சொன்னாங்களே.. இப்ப அவங்களே அதிகமாக ஓட்டுக்களை வாங்கியிருக்காங்களே? 11 இடத்தில் 2வது இடத்தையும் பெற்றிருக்கிறதே பாஜக? "புரட்சி தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் ரயில் நிலையம்" என்று சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு பிரதமர் மோடி பெயர் வைத்திருக்கிறார்.. உலகம் பூராவும் அந்த பாரத ரத்னாவுடன்தான் அந்த பெயர் உச்சரிக்கப்பட்டு வருகிறது.

திமுக காலி: அதுக்காக பாஜகவுக்காக நான் சப்போர்ட் செய்யவில்லை.. ஆனால், அவங்க செய்ததைகூட அதிமுக செய்யலயே என்ற ஆதங்கத்தில் பேசுகிறேன்... பாஜக, அதிமுக சேர்ந்திருந்தால், திமுகவை காலி செய்திருக்கலாமே? என்று இப்ப எல்லாரும் புலம்புறாங்க.. பிற்போக்குத்தனமாக, பகுத்தறிவில்லாத கூட்டம் அதிமுகவில் இருக்கும்வரை, மறுடிபயும் தேர்தலில் வெல்லும் என்பது முட்டாள்தானம். இனிமேலாவது அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

ஆனால் சசிகலா மட்டும் தேவையில்லை.. சசிகலாவால்தான் இந்த கட்சி, இன்னைக்கு இப்படியொரு நிலைமைக்கு வந்திருக்கிறது.. எனவே, சசிகலாவை தவிர்த்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.. ஒற்றுமை - நேர்மை - ஒழுக்கம் இவ்வளவு இருந்தால்தான், அது எம்ஜிஆரின் அதிமுக என்றே அர்த்தம்.

தவறான தகவல்: எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கையில், "சத்தியமே லட்சியமாய் கொள்ளடா" என்ற பாடலை சொல்லி, அது எம்ஜிஆர் பாட்டு என்கிறார்.. அது தவறான தகவல்.. எம்ஜிஆர் பாணியில், நடிகர் ரஞ்சன் என்பவர் குதிரையில் பாடி வருவது.. இந்த விவரம்கூட தெரியாமல் அதிமுக ஐடி விங்கில் என்ன வேலை பார்க்குறாங்க?
சவுக்கு சங்கர் மாதிரி தவறான பேர்வழிகளையும், தவறாக வழிகாட்டுபவர்களையும் வைத்திருந்தால், இப்படித்தான் கட்சி பின்னாடி போய்க்கொண்டிருக்கும்.. விவரம் தெரிந்தவர்களை தங்களுடன் வைத்து கொண்டால், தங்கள பலவீனம் வெளியே தெரிந்துவிடுமே என்று அதிமுக தலைவர்கள் பயந்திருக்கும்வரை அதிமுக முன்னேறுமா? என்பது கேள்விக்குறியே.

சொரணை இருக்கா: எம்ஜிஆர் ரசிகர்கள் என்றால் சொரணை வரும்.. ஆனால், இப்போது சொரணையே கிடையாது. மூடநம்பிக்கையையும், பகுத்தறிவின்மையையும், எம்ஜிஆர் தன்னுடைய தொண்டர்களுக்கு கற்று தரவில்லை.. எனவே எம்ஜிஆர் பெயரை சொல்லிக் கொண்டு, அவர் பெயரை கெடுக்க வேண்டாம் என்று அதிமுக தலைவர்களை நான் கேட்டு கொள்கிறேன்" என்று காட்டமாக கூறியிருக்கிறார் இதயக்கனி விஜயன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+