கிளாம்பாக்கம் டூ கூடுவாஞ்சேரி.. பொங்கலுக்கு சென்னையில் இருந்து பைக்கில் சொந்த ஊர் போறீங்களா.. கவனம்
சென்னை: சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல பலரும் தயாராகி வருகிறார்கள்.. தற்போதைய நிலையில் ரயில்களின் முன்பதிவு முடிந்துவிட்டது. ஆம்னி பேருந்துகளில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிறது. பலர் அரசு பேருந்துகளிலும், சொந்த வாகனங்களிலும் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்வார்கள். சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் செல்வோர், செங்கல்பட்டு வழியாக போகும் போது கிளாம்பாக்கம் முதல் கூடுவாஞ்சேரி வரை மிக கவனமாக செல்லுங்கள்.. சாலை அந்த அளவிற்கு நன்றாக இருக்காது.
பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 13, 14, 15, 16 ஆகிய நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை, 14ம் தேதி பொங்கல், 15ம் தேதி மாட்டுப்பொங்கல், 16ம் தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஆறு நாட்கள் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. திங்கள்கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும். பள்ளி மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இந்த விடுமுறை கிடைக்கும். இந்த விடுமுறையை கொண்டாட பலர் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள், பலரும் ரயில் பயணத்தையே விரும்புவார்கள். ஆனால் ரயிலில் செல்ல ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. ஆம்னி பேருந்துகளிலும் டிக்கெட் கட்டணம் மிக அதிகமாக உள்ளது.

பொதுவாக பொங்கல் பண்டிகை காலத்தில் விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி , பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் செங்கல்பட்டு வழியாக இருசக்கர வாகனங்களில் அதிக அளவு சொந்த ஊருக்கு செல்வார்கள். இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் செல்லும் பயணிகள் முடிந்த வரை சென்னையில் இருந்து திருப்போரூர் வழியாக செங்கல்பட்டுக்கு சென்று போகலாம்.
அதேபோல் செங்கல்பட்டுக்கு, தாம்பரத்தில் இருந்து, பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் வழியாக பைக்கில் போகலாம். ஆனால் இதில் கிளாம்பாக்கத்தை கடந்து கூடுவாஞ்சேரியில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும். சாலை முழுவதும் படுமோசமாக உள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் மையப்பகுதியிலோ அல்லது சாலையின் வலதுபுறமோ செல்வது அவ்வளவு நல்லது இல்லை. ஏனெனில் சாலைகளின் நிலை மோசமாக இருப்பது ஒருபுறம் எனில், பின்னால் வரும் வாகனங்கள் அசுர வேகத்தில் வரும்.. திடீரென பள்ளம் காரணமாக பிரேக் பிடித்தாலோ, அல்லது வேகத்தை குறைத்தோ இந்த பகுதிகளில் செல்லும் போது , பின்னால் வரும் வாகனங்கள் கவனிக்காமல் போனால் பெரிய விபத்திற்கு வாய்ப்பு உள்ளது.
பெருங்களத்தூர் இரும்புலியூர் பாலம் தொடங்கி, பரனூர் வரை வாகன நெருக்கம் மட்டுமின்றி, சில இடங்களில் இருசக்கர வாகனங்கள் பயணிக்கும் வகையில் சாலைகள் இருக்காது. எனவே மெதுவாக கவனமாக செல்வதே, அந்த சாலை சிறந்ததாக இருக்கும். அங்கு சாலை மேம்பாட்டு பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. அதேபோல் சாலை நன்றாகவே இருந்தாலும் பள்ளம் ஆங்காங்கே இருக்கும் என்பதால் கவனமாக செல்ல வேண்டிய நிலை இருக்கிறது என பயணிகள் கூறினார்கள்.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications