Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக பால் கனகராஜ் "வளைத்துக்குள்" வந்தாச்சு.. ஆம்ஸ்ட்ராங் கேஸில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜர்.. ஏன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தினம் தினம் பரபரப்புகள் கிளம்பி வரும்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராக சம்மன்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ந் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக காரணம் கூறப்பட்டு வருகிறது.

Armstrong BJP Paul Kanagaraj

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்ற அனைவருமே ஒவ்வொருவராக கைதாகி வருகிறார்கள். இதில், திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளை சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், வக்கீல்கள், ரவுடிகள் என பலதரப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிக்கி வருவதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டவாறே உள்ளது.. இதுவரை 22 பேர் கைதாகி உள்ளனர்.

காவல் - கைது: ஆனாலும் கொலைக்கான காரணம் என்ன? இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றியெல்லாம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை... அதனால்தான், இந்த வழக்கில், இதுவரை கைதாகியிருப்பவர்களை, ஒவ்வொருவராக போலீசார் காவலில் எடுத்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு மர்ம நபர் ஒருவர் கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கவும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, உறவினர்கள் வசிக்கும் அயனாவரம் அப்பார்ட்மென்ட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது..

பள்ளி தாளாளர்: ஆனால், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு அவ்வாறு கொலை மிரட்டல் விடுத்தவர், பள்ளியின் தாளாளர் அருண்ராஜ் என்பது தற்போது தெரியவந்துள்ளது.. இவரது பள்ளியில் பணிபுரியும் டிரைவர் சதீஷ் என்பவரின் பெயரில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, கல்வி அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தாளாளர் அருண்ராஜ் ஏற்கெனவே கைதாகியிருக்கிறார்.. அந்த வழக்கில் டிரைவர் சதீஷ் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.. எனவே, சதீஷை பழிவாங்குவதற்காகவே, அவரது பெயரில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு அருண்ராஜ் கொலை மிரட்டல் விடுத்தது தற்போது அம்பலமாகியிருக்கிறது. இதையடுத்து, பள்ளி தாளாளர் அருண்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர் பரபரப்பு: இந்த பரபரப்புக்கு நடுவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக நிர்வாகி பால் கனகராஜ் விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார். வடசென்னை லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் பால் கனகராஜ்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராக நேற்றைய தினம், சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது.. இன்றைய தினம் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் பின்புறமுள்ள அலுவலகத்தில், 11 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இதுதான் காரணம்: ரவுடிகள் சம்போ செந்தில், நாகேந்திரன் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞராக பால் கனகராஜ் பணியாற்றியவர் என்ற அடிப்படையில், இந்த சம்மன் அவருக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதன்படியே, இன்று காலை 11 மணிக்கு ஆஜராகியிருக்கிறார் பால் கனகராஜ்.. இனிமேல்தான், பால் கனகராஜிடம் போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

ஏற்கனவே ஒருமுறை பால் கனகராஜிடம் விசாரணை நடத்தியிருந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது.. இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெரும் பரபரப்பு இன்னமும் நிலவியபடியே உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+