இனி வளர கூடாது..மெட்ராஸ் ’அன்பு’ பாணியில் ஆம்ஸ்ட்ராங்! ஸ்கெட்ச் போட்ட பிரபல தாதா..சம்பவம் செய்த பாலு
சென்னை : சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. கொலையில் பிரபல ரவுடி நாகேந்திரன் தொடங்கி பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் பிரபல ரவுடியான திருவேங்கடம், திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், தாமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரன், பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை, கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், விஜயகுமார், முகுந்தன், விக்னேஷ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரைத் தவிர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 பேர் சிறையில் இருந்தனர். தொடர்ந்து பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது தந்தை நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமல்லாமல், இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை தற்போது போலீசார் தாக்கல் செய்துள்ளனர். அதில் முதல் குற்றவாளியாக பிரபல ரவுடி தாதா நாகேந்திரனும், இரண்டாவது குற்றவாளியாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும், மூன்றாவதாக நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஆம்ஸ்ட்ராங் பெரிய நபராக வலம் வந்திருக்கிறார். இது வடசென்னையில் ஆதிக்கம் செலுத்தி வந்த நாகேந்திரனுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அஸ்வத்தாமனுடன் நிலம் தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் பிரச்சனை செய்துள்ளார். மேலும் வழக்கு ஒன்றில் அஸ்வத்தாமன் கைதானதற்கு ஆம்ஸ்ட்ராங் தான் காரணம் என நாகேந்திரன் நினைத்திருக்கிறார். இதை அடுத்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சிறையில் இருந்தே திட்டம் தீட்டிய நாகேந்திரன் அவருக்கு யார் யார் எதிராக இருக்கிறார்கள் என தேடியுள்ளார்.
அப்படி வந்தவர்தான் ஆற்காடு சுரேஷ்-ன் தம்பியான பொன்னை பாலு. மேலும் ஆம்ஸ்ட்ராங் மீது சம்போ செந்திலும் கோபமாக இருந்த நிலையில் அவர்கள் அனைவரையும் சேர்த்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நாகேந்திரன் திட்டம் தீட்டி இருக்கிறார். கொலை செய்யும் பொறுப்பு பொன்னை பாலுவுக்கும், பணம், நாட்டு வெடிகுண்டுகள், ஆயுதங்களை கொடுக்கும் பொறுப்பு சம்போ செந்திலுக்கும், கொலையை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அஸ்வத்தாமனிடம் கொடுக்கப்பட்டது.
மேலும் கொலை குறித்து பேசுவது யாருக்கும் தெரிந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக விபிஎன் மூலம் பேசி இருக்கின்றனர். உணவு டெலிவரி ஊழியர்கள் போல் கொலை செய்ய வேண்டும் என்பது பொன்னை பாலுவின் திட்டம் என கூறப்படுகிறது. தொடர்ந்து கொலை திட்டம் குறித்து நாகேந்திரன் ஒன்று கூடி திட்டத்தை விளக்கி இருக்கிறார். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய மட்டும் 10 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. இன்னும் அடுத்த கட்ட குற்றப்பத்திரிக்கையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Chennai Encounter: சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸாரால் சுட்டுக் கொலை -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி! -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications