Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கத்தில் இருந்த ஒரு குறையும் நீங்குது.. பயணிகளுக்கு குட் நியூஸ்.. இது நடந்தால் சூப்பர்தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடிய விரைவில் மலிவு விலையில் உணவகம் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி மலிவு விலையில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.

Kilambakkam Bus Stand Sivashankar Restaurant


கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்:
சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, நெல்லை, கோவை என அனைத்து நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளும் இங்கிருந்தே இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து 90 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் ஆம்னி பஸ்களும் இங்கிருந்தே வெளியூர்களுக்கு பெரும்பாலும் செல்கின்றன. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இயக்கவும் பராமரிக்கவும் தனியாரை நியமித்துள்ளது.

பயணிகளுக்கு தரமான சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நாட்டிலேயே சிறந்த பேருந்து நிலையமாக இது இருக்க வேண்டும், உலக தரத்திற்கு இணையாக வளாகத்தை பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இப்படி தனியாரிடம் வழங்கப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகள் + 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

கடைகள், ஏடிஎம்கள்: பேருந்து நிலையம் துவக்கப்பட்ட புதிதில் பல்வேறு சேவை குறைபாடுகள் இருந்ததை பயணிகள் சுட்டிக்காட்டினர். அதாவது போதிய அளவு ஏடிஎம் வசதிகள் இல்லாதது.. கடைகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களில் இந்த பிரச்சினை சீர் செய்யப்பட்டது. தற்போது, முன்னணி வங்கிகளின் ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளன. அதேபோல், ஆங்காங்கே கடைகள், உணவகமும் உள்ளது.

மலிவு விலையில் உணவகம்: பேருந்து நிலயமும் தூயமையாக பராமரிக்கப்பட்டு வருவதற்கு பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கழிவறைகளும் சுத்தமாக பராமரிக்கபபடுகின்றன. தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் இந்த பணியில் எப்போதும் ஈடுபட்டுள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இப்படி உயரதரமாக பராமரிக்கப்பட்டாலும் மலிவு விலையில் உணவகம் எதுவும் இல்லை என்ற ஆதங்கம் பயணிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

அமைச்சர் சிவசங்கர்: இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் சிவசங்கர், "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி மலிவு விலையில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார். இதனால் கூடிய விரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலிவு விலையிலான உணவகங்கள் திறக்கப்படும் என்று தெரிகிறது. அமைச்சர் சிவசங்கரின் இந்த பேச்சுக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பயணிகள் மகிழ்ச்சி: மலிவு விலையில் உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் பட்சத்தில் கிளாம்பாக்கத்திற்கு வருபவர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்று பயணிகள் சொல்லும் கருத்தாக உள்ளது. ஏனெனில், தற்போது நகரில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வருவதேற்கே கிட்டதட்ட 2 மணி நேரம் ஆகிவிடுகிறது.

இதனால், இரவில் வரும் பயணிகள் கிளாம்பாக்கத்தில் இருக்கும் உணவகங்களில் சற்று விலையை கேட்டவுடன் பர்சை பார்த்த பிறகே சாப்பிடுவது பற்றி யோசிக்கிறர்கள். எனவே, தற்போது மலிவு விலையில் உணவு கிடைக்கும் பட்சத்தில் பயணிகளின் மனதும் வயிறும் நிறையும் என்று அவர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+