Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருத்துவர்களை கைது பண்ணுங்க.. பறிபோன கால்பந்து வீராங்கனை உயிர்! உடலை பெறமறுத்து உறவினர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்துக்கு நீதி கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவி என்பவரது மகள் பிரியா. கால்பந்து வீராங்கனையான இவர் மாவட்ட, மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

இந்த நிலையில் இவரது வலது காலில் வலி ஏற்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பரிசோதித்ததில் சவ்வு பிரச்சனை இருப்பது தெரியவந்தது.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

இதனை தொடர்ந்து சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கடந்த 7 ஆம் தேதி வீராங்கனை பிரியாவுக்கு 2 மருத்துவர்கள் அதிநவீன அறுவை சிகிச்சை செய்தனர். வெற்றிகரமாக சிகிச்சை நடைபெற்ற பின் அவருக்கு இறுக்கமாக கட்டு போடப்பட்டு இருக்கிறது.

ரத்த ஓட்டம் பாதிப்பு

ரத்த ஓட்டம் பாதிப்பு

இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதால் அவரது ரத்த நாளங்களும் பழுதடைந்தன. நிலைமை மோசமானதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கடந்த 8 ஆம் தேதி பிரியா இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

இதனிடையே ரத்த நாள பாதிப்பு காரணமாக ரத்த ஓட்டம் நின்றுவிட்டதால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பிரியாவின் சிறுநீரகம், ஈரல், இதயம் ஆகிய உறுப்புகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று காலை 7:15 மணியளவில் வீராங்கனை பிரியா காலமானார்.

உறவினர்கள் போராட்டம்

உறவினர்கள் போராட்டம்

இதனை தொடர்ந்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இறந்த வீராங்கனையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து வீட்டுக்கு கொண்டு செல்லப்பட ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனை வளாகத்தில் பிரியாவின் மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள் நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடலை பெற மறுப்பு

உடலை பெற மறுப்பு

கவனக்குறைவாக சிகிச்சையளித்த 2 மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் உறவினர்கள், அதுவரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் எனக்கூறி ஆம்புலன்ஸ் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

போலீசார் பேச்சுவார்த்தை

போலீசார் பேச்சுவார்த்தை

பூக்கடை துணை ஆணையர் தலைமையில் போலீசார் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரியாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். போலீசாரின் சமரச பேச்சுவார்த்தையை ஏற்று பெற்றோர் உடலை பெற ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து உடல் அவர்களிடம் வழங்கப்பட்டது.

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

முன்னதால ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரியாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். கவனக்குறைவாக நடந்துகொண்ட 2 மருத்துவர்களும் தொலைதூர இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறினார்.

பணியிடை நீக்கம்

பணியிடை நீக்கம்

"மருத்துவர்கள் இருவரும் இன்று பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். வீராங்கனையின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் உடனடியாக வழங்க உத்தரவிட்டு உள்ளது. பிரியாவின் சகோதரர்கள் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முடிவெடுத்து உள்ளோம்." என்றார்.

 மாணவியின் தந்தை

மாணவியின் தந்தை

அதேநேரம் தனது மகள் பிரியாவுக்கு கவனக்குறைவாக சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என அவரது தந்தை ரவி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இனி இதுபோல் எந்த நிகழ்வும் அரசு மருத்துவமனையில் நடக்கக்கூடாது என்றும், அவர் வலியுறுத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+