தீபாவளிக்கு ரெடியான தி நகர்.. இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! பாருங்க இந்த வழியாக போக முடியாது
சென்னை: சென்னையில் தீபாவளியன்று தெருவுக்கு தெரு பட்டாசு காகிதங்கள் இருக்கிறதோ இல்லையோ. ஆனால் நிச்சயம் டிராபிக் இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் சென்னையில் பெய்யும் மழை வெள்ளமாக பெருக்கெடுத்து போக்குவரத்தை துண்டித்து நெரிசலை ஏற்படுத்தும் எனில், அதேபோல ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தீபாவளியன்று மக்கள் வெள்ளம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும்.
குறிப்பாக தி நகர் பகுதியில் சொல்லவே வேண்டாம். சென்னைவாசிகள் போர் அடிக்கிறது என்றால் கூட தி நகர் பக்கம்தான் போவார்கள்.

போக்குவரத்து மாற்றம்
இப்படி இருக்கையில் விழா நாட்களில் இப்பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது என்பது காவல்துறைக்கு சவாலான விஷயம். இந்த ஆண்டு போக்குவரத்தை முறைப்படுத்தி நெரிசலை குறைக்க காவல்துறை சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி இன்று முதல் 24ம் தேதி வரை தி நகர் பகுதியில் சில மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அதாவது இன்று முதல் இப்பகுதியில் வணிக மற்றும் சரக்கு வாகனங்கள் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

ஆட்டோ செல்ல தடை
பிகாசம் சாலையிலும், இப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியிலும் வாகனங்களை நிறுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படும். அதேபோல ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, பாஷ்யம் சாலை மற்றும் தண்டபாணி தெரு ஆகியவற்றிலும் வாகனங்களை கட்டணத்துடன் பார்க்கிங் செய்துகொள்ளலாம். பார்க்கிங் வசதி இப்படியெனில், போக்குவரத்து வசதியை பொருத்த அளவில் தியாகராஜர் தெரு-தணிகாசலம் சாலையிலிருந்து பனகல் பார்க்கை நோக்கி செல்லும் வழித்தடங்களில் ஆட்டோக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்
இது மட்டுமல்லாது பிருந்தாவன் ஜங்ஷன் - பனகல் பூங்கா, வடக்கு உஸ்மான் சாலை-கோட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பனகல் பூங்கா, ரோகிணி சிக்னல் சந்திப்பில் இருந்து பனகல் பூங்கா, வடக்கு உஸ்மான் சாலை-மகாராஜபுரம் சந்தானம் சாலையிலிருந்து பனகல் பூங்கா மற்றும் கண்ணம்மாபேட்டை சந்திப்பிலிருந்து மேட்லி சந்திப்பு நோக்கி செல்லும் வழிகளிலும் ஆட்டோக்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் இது போன்று தடை விதிக்கப்படுவது இயல்புதான் என்றாலும் இந்த முறை கட்டுப்பாடுகள் அதிகம் இருப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு
அதேபோல தீபாவளியன்று பலரும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தி நகர் மட்டுமல்லாது மெரினா கடற்கரை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் கோயில்கள், பெசன்ட் நகர் கடற்கரை என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். என்ன மக்களே ஷாப்பிங்க் செய்ய நீங்களும் ரெடியா?
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications