விஜய் வெறும் 3வது ஆப்ஷன் கிடையாது.. தற்குறின்னு திமுக பேச பேச விஜய்க்கான ஓட்டு 1 லட்சம் உயர்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் தங்கள் வீட்டில் உள்ள இளைஞர்கள், பேரன் பேத்திகள் யாருக்கு ஓட்டுப் போடுவார்கள் என்று மனசாட்சியைத் தொட்டுச் சொன்னால் உண்மை தெரியும். இளைஞர்கள் தங்களை திமுக மற்றும் அதிமுக ஏமாற்றுவதாக உணர்கிறார்கள்" என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.. அத்துடன் தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் குறித்தும் பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருக்கிறார்.

மலேசியாவில் கூடியது மாபெரும் கூட்டம். எம்.ஜி.ஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' காலத்து நினைவுகளை கொண்டு வருகிறது.. காரணம், சினிமா கலைஞர்கள் நிதி திரட்ட செல்லும் கூட்டத்தை விட இது மிகப் பெரியது.

Vijay DMK Tharkuri

இந்தக் கூட்டத்தில் இருப்பவர்களுக்கு ஓட்டு இல்லை என்று சொல்வது முட்டாள்தனமானது. வாக்காளர்களும் அங்கு வந்துள்ளார்கள். சோஷியல் மீடியா பெரிய பங்கு வகிக்கும் இந்த காலத்தில், இந்தக் கூட்டம் ஒரு பெரிய தாக்கத்தை தேர்தலில் ஏற்படுத்தும்.

தற்குறிகள் என விமர்சிப்பது தவறு

1989ல் சிவாஜிக்குக் கூடிய கூட்டத்தை விட விஜய்க்கு இப்போது சேரும் கூட்டம் மிகப்பெரியது... ஆனாலும், விஜயகாந்த், சிவாஜிக்கு வந்த கூட்டத்தை விட விஜய்யின் கூட்டத்தின் தன்மை வேறானது.. இந்த ரசிகர் கூட்டத்தில் 30% வாக்குகள் அப்படியே தவெகவுக்கு மாறினால் கூட, அது திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும்..

விஜய்க்கு கூடும் கூட்டத்தை 'தற்குறிகள்' என்று விமர்சிப்பது தவறு. இந்தக் கூட்டம் ஆளும் மற்றும் ஆண்ட திராவிடக் கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும்... மக்கள் மீதுள்ள அதிருப்திதான் இப்படி கூட்டமாக திரள்கிறது. தற்குறிகள் என்று திமுக ஆதரவாளர்கள் விமர்சிப்பது மிகத் தவறான உள்நோக்கம் கொண்டது என்கிறார். இந்த இளைஞர் கூட்டம் உண்மையில் திராவிடக் கட்சிகள் மீதுள்ள அதிருப்தியின் வெளிப்பாடே தவிர வேறில்லை..

விஜய்க்கான ஓட்டு எகிறுகிறது

திமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் தங்கள் வீட்டில் உள்ள இளைஞர்கள், பேரன் பேத்திகள் யாருக்கு ஓட்டுப் போடுவார்கள் என்று மனசாட்சியைத் தொட்டுச் சொன்னால் உண்மை தெரியும். இளைஞர்கள் தங்களை திமுக மற்றும் அதிமுக ஏமாற்றுவதாக உணர்கிறார்கள்.

Gen Z என்று சொல்லக்கூடிய இன்றைய இளைஞர்கள், திராவிடக் கட்சிகள் தங்களுக்கான கட்சிகள் இல்லை என்று நினைக்கிறார்கள். விஜய்யை விமர்சிக்கிறோம் என்ற போர்வையில் திமுகவினர் பேசுவது, உண்மையில் விஜய்க்கான வாக்கு வங்கியைத்தான் கூட்டுகிறது. அவர்கள் பேசும் ஒவ்வொரு பேச்சும் விஜய்க்கு 50,000 முதல் 1 லட்சம் ஓட்டுகளை கூட்டுகிறது.

வெறும் 3வது ஆப்ஷன் கிடையாது

விஜய் வெறும் 3வது ஆப்ஷன் கிடையாது.. மக்கள் இரு திராவிட கட்சிகளையும் வெறுக்கும் சூழலில், அவர் ஒரு மாற்று சக்தியாக தெரிகிறார். விஜய்யின் ஒரு படத்தை கூட பார்க்காதவர்கள் கூட, "இவர்கள் 2 பேருமே வேண்டாம், இந்த முறை விஜய்க்கு ஓட்டுப் போடுவோம்" என்று சொல்லும் மனநிலைக்கு வந்துள்ளனர்.
|
1996 தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு அலை இருந்தது, அப்போது திமுக ஒரு வலுவான மாற்றாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை வேறு, மக்கள் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே வேண்டாம் என்ற மனநிலையில் ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

18 முதல் 40 வயது வரையிலான இளைஞர்களிடம் கேட்டால், 10-ல் 7 அல்லது 8 பேர் விஜய்க்கு ஓட்டுப் போடுவோம் என்று சொல்கிறார்கள். பாரம்பரிய திமுக குடும்பங்களில் உள்ள இளைஞர்கள் கூட இந்த முறை விஜய்க்கு ஓட்டுப் போட நினைக்கிறார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+