எம்பி தேர்தலுடன் எம்எல்ஏ தேர்தல்? எடப்பாடி கோஷ்டி போடும் மனக் கணக்கு! அடடே ’அவரே’ சொல்லிட்டாரே?
சென்னை : தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் எனவும், எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என அதிமுக அவைதலைவராக எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேன் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது காவல்துறை, நீதிமன்றம், தேர்தல் ஆணைய என பல்வேறு கட்டங்களை சந்தித்து வருகிறது
இந்நிலையில், ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அதன் மூலம் அவை தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டார்.

தமிழ் மகன் உசேன்
முதலில் இருசார்புக்கு ஆதரவாய் இருந்த தமிழ் மகன் உசேன் பின்னர் எடப்பாடி அணிக்குத் தாவினார். தற்போது தீவிர எடப்பாடி ஆதரவாளராக உள்ள அவர், தமிழகத்தில் அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் உள்ள 75 தர்காக்களில் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள தற்காக்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகிறார், இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக மதுரைமேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவேடகம் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார்

சிறப்பு வழிபாடு
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," இந்தியாவிலே இருக்கின்ற பத்து மாநிலங்களில் உள்ள தற்காக்களிலும் சிறப்புத் தொழுகையில் ஈடுபட உள்ளேன், சிறப்பு வழிபாடு எனும் தூஆ நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் துவங்கி இருக்கிறேன், இதுவரை 42 மாவட்டங்களை வழிபாடு முடித்துவிட்டு இது 43வது மாவட்டமாக துவங்கி இருக்கிறேன்.

ஜெயலலிதா
ஏற்கனவே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெங்களூர் சிறைச்சாலையில் இருக்கும் போது பெங்களூர் சிறைச்சாலைக்கு சென்று கடிதம் கொடுத்துவிட்டு 126 தற்காக்களில் சிறப்பு வழிபாடு நடத்தியதன் பலனாக அம்மா விடுதலை பெற்றார்கள். வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி மாண்புமிகு அம்மா அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் ஏற்பாட்டில் நடைபெறும் 51 திருமணங்கள் இறைவன் அருளால் சிறப்பாக நடைபெற வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் நடத்த இறைவன் அருள் புரிய வேண்டும். தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க வேண்டும். தமிழகத்தின் தன்னிகரில்லா முதல்வராக மீண்டும் பொறுப்பு ஏற்க வேண்டும்" எனக் கூறினார். 024 பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும் பாஜக, அண்ணாமலை, அமமுக டிடிவி தினகரன் உள்ளிடோர் கூறி வரும் நிலையில், எடப்பாடி அணியும் பல மாதங்களாக அதையே கூறி வருகிறது.












Click it and Unblock the Notifications