சட்டமன்றத்தில் உள்துறை மானிய கோரிக்கை தொடங்கியது.. பக்கா பிளானுடன் திமுக.. சமாளிப்பாரா விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. தவெக, திமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இருவரும் பரஸ்பரம் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். சட்டமன்றத்தில் உள்துறை, மதுவிலக்கு , போக்குவரத்து, வீட்டு வசதித்துறை மானிய கோரிக்கை தொடங்கியது. முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை மானிய கோரிக்கையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எழுப்ப திமுக உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அரை நூற்றாண்டு அரசியல் வரலாற்றை மாற்றி தவெக அரியணையில் அமர்ந்தது. தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் ஆகிறது. தவெக அரசு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தங்களின் முதலின் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதனை தொடர்ந்து சட்டசபையில் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது.

Assembly Live

திமுக மீது தவகவும், தவெக மீது திமுகவும் கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். தவெக அமைச்சர்கள், திமுக முன்னாள் அமைச்சர்கள் இடையே காரசார விவாதம் நடக்கிறது. தினசரி பல துறைகளின் மானிய கோரிக்கை நடைபெறுகிறது. நேற்று அதிகபட்சமாக இரவு 7.20 மணி வரை சட்டசபை நிகழ்வுகள் லைவ் செய்யப்பட்டன. சுமார் 9 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு சட்டசபை நிகழ்வு நடைபெற்றது.

இந்நிலையில் சட்டமன்றத்தில் உள்துறை, மதுவிலக்கு , போக்குவரத்து, வீட்டு வசதித்துறை மானிய கோரிக்கை தொடங்கியுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை முதலமைச்சர் விஜய் கட்டுப்பாட்டில் உள்ளது. தவெக ஆட்சியிலும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. தமிழகத்தின் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகிறார்கள்.

இன்றைய நிகழ்வில் சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு குற்றங்கள், காவல் கஸ்டடியில் மரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப திமுக உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். பல விவகாரங்களில் முதலமைச்சர் விஜய் மௌனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இன்றைய மானிய கோரிக்கையில் அவரிடம் நேரடியாக கேள்வி எழுப்புவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதை விஜய் எப்படி சமாளிப்பார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+