Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்துயிர் பெறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள்! 1.7 கோடி மகளிருக்கு முதல்வரின் முக்கிய அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 1.7 கோடி மகளிருடைய நிதி சுதந்திரத்தையும் உறுதி செய்ய அரசு முனைப்போடு செயலாற்றிக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிராம சபைக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் எல்லாவற்றையும் கவனமாக குறித்து வைத்துள்ளதாகவும் நிச்சயமாக அதை மிக விரைவில் நிறைவேற்றி தருவோம் எனவும் உறுதியளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு;

மகளிர் சுய உதவி

மகளிர் சுய உதவி

தமிழகத்தில் மொத்தம் உள்ள 7.46 இலட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள 1.7 கோடி மகளிருடைய நிதி சுதந்திரத்தையும், நிதி மேலாண்மையையும் உறுதி செய்து நம்முடைய அரசு முனைப்போடு செயலாற்றிக் கொண்டிருக்கிறது. நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு கிராம ஊராட்சிகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு 'திராவிட மாடல் ஆட்சி' என்பதை உலகிற்கு நாம் உணர்த்திடப்

கோரிக்கைகள்

கோரிக்கைகள்

குடிநீர் பிரச்சனையைப் பற்றி சொன்னீர்கள், ரேஷன் கடையைப் பற்றி சொன்னீர்கள், அதேபோல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இருக்கக்கூடிய இடையூறுகளைப் பற்றிச் சொன்னீர்கள், நூறு நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறீர்கள், இப்படி பல கோரிக்கைகள் இருக்கின்றன. இதையெல்லாம் நாங்கள் இன்றைக்கு கவனமாக குறித்து வைத்துக்கொண்டு, நிச்சயமாக, உறுதியாக அதையெல்லாம் மிகமிக விரைவில், அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றித் தருவதற்குக் காத்திருக்கிறோம்.

அரசின் குறிக்கோள்

அரசின் குறிக்கோள்

இப்பொழுது நான் அறிவித்துள்ள திட்டங்கள் மட்டுமன்றி இன்னும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் கிராம அளவில் அனைத்துத் தரப்பு மக்களையும் அடைய வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய குறிக்கோளாக இருக்கிறது. அதன் மூலம் உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்வு வளம் பெற வேண்டும் என்ற வகையிலேதான் நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவைகளெல்லாம் ஏதோ அறிவிப்புகளுக்கு அறிவித்துச் சென்றுவிட்டேன் என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம்.

உறுதிமொழி

உறுதிமொழி


நாங்கள் எப்போதுமே, நம்முடைய ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் சொன்னதைத்தான் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம் என்ற அந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது. அதை நான் நிச்சயமாக உணருகிறேன். எனவே, இது நடந்து முடிந்திருக்கிறதா என்பதை அவர்களிடத்தில் தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ கேட்டு மட்டும் அல்ல, நேரடியாக வந்து அடுத்த முறையும் நான் வந்து பார்ப்பேன் என்ற அந்த உறுதிமொழியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+