Flashback வித்யாசாகர் வரனை முதலில் மறுத்தேன்.. நல்லவேளை மிஸ் செய்யவில்லைனு பூரித்த மீனா
சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் மரணத்தை யாராலும் ஜீரணிக்க முடியாததால் அவர்களது 13 ஆண்டு கால மகிழ்ச்சியான வாழ்க்கை குறித்து நினைவலைகள் பகிரப்படுகின்றன.
Recommended Video
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா சிறு வயது முதல் நடித்து வருகிறார். ரஜினியுடன் குழந்தையாக நடித்த இவர் பின்பு எஜமான் படம் மூலம் அவருக்கே ஜோடியாக நடித்தார்.
ரஜினி, கமல், மோகன்லால், வெங்கடேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த மீனாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரிஷ்யம் படம் (மலையாள) பெரிதும் பெயரை பெற்றுத் தந்தது. அது போல் தற்போது அதன் இரண்டாம் பாகமும் வெளியாகியுள்ளது.

திருமணம்
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. சுமார் 13 ஆண்டுகளாக மீனாவை வித்யாசாகர் தனது கண்ணுக்குள் வைத்து பார்த்து வந்தது போல் இருந்தாராம். மீனாவின் குடும்பத்தினருக்கு அண்மையில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தொற்றிலிருந்து மீண்ட குடும்பம்
இவர்கள் அந்த தொற்றிலிருந்து மீண்டாலும் வித்யாசாகருக்கு மட்டும் அவ்வப்போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட வண்ணம் இருந்துள்ளது. இந்த பாதிப்பு மிகவும் தீவிரமடைந்ததால் அவர் சென்னை அமைந்தரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வித்யாசாகர்
இங்கு 95 நாட்களாக சிகிச்சை பெற்ற நிலையில் அவரது உயிர் நேற்று முன் தினம் பிரிந்தது. இதையடுத்து மீனாவின் கணவரின் உடலுக்கு அவரும் அவரது மகளும் இறுதி சடங்குகளை செய்தனர். வித்யாசாகரின் இறப்பு மீனாவுக்கும் அவரது மகளுக்கும் பேரிழப்பு. எனினும் மீனா, அவரது கணவரின் நினைவலைகள் பகிரப்படுகின்றன.

ரியாலிட்டி ஷோ
ஒரு ரியாலிட்டி ஷோவில் மீனா தனது கணவர் வித்யாசாகருடன் கலந்து கொண்டார். அப்போது சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். அவர் கூறுகையில் எனக்கு 2009 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே மாப்பிள்ளை பார்த்து வந்தனர். தனது ஜாதகத்திற்கு ஏற்ற ஒரு வரனை பார்த்துவந்தனர்.

பக்காவாக பொருந்திய ஜாதகம்
அப்போது தனது ஜாதகத்துடன் வித்யாசாகரின் ஜாதகம் பக்காவாக பொருந்தியிருந்தது. இதையடுத்து நாங்கள் இருவரும் தனியாக சந்தித்து பேசினோம். ஆனால் அவர் மீது எனக்கு பெரிய ஈர்ப்பெல்லாம் ஏற்படவில்லை. ஒரு வேளை இருவரும் வெவ்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் என்பதால் இருக்கலாம்.

பிடிக்கவில்லை என்றேன்
சில நாட்கள் கழித்து வித்யாசாகரை தொடர்பு கொண்ட நான் தொடர்பு கொண்டு தனக்கு இந்த வரனில் விருப்பம் இல்லை என்றேன். அவரும் அதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டு எனக்கு பிடித்தமான வரன் கிடைக்க வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். ஆனால் நான் நல்லதொரு வரனை இழக்க போகிறாய் என எனது உறவினர் ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து நான் யோசித்து அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டேன்.

13 ஆண்டு கால நினைவுகள்
அன்று முதல் என்னை வித்யாசாகர் நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்றார். மீனாவின் தோழிகளும் மீனாவுக்கு வித்யாசாகரை விட நல்ல மாப்பிள்ளை கிடைத்திருக்க மாட்டார் என்றே சொல்லி வந்தனர். ஆனால் இப்போது 13 ஆண்டுகால திருமண வாழ்க்கையை மனதார மட்டுமே எண்ணி பார்த்து பூரிக்கும் நிலை மீனாவுக்கு ஏற்பட்டுவிட்டது. ஏனெனில் வித்யாசாகர் திரும்பி வராத இடத்திற்கு சென்றுவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications