Exclusive:ஜெயலலிதா இறந்தது எப்படி? அந்த ரகசியத்தை சசியிடம்தான் சொல்வேன்.. ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா

Subscribe to Oneindia Tamil

சென்னை: அழுகிய பிணங்களுக்கு நடுவில்தான் நான் தியானம் செய்வேன் என ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா தெரிவித்தார்.

Recommended Video

    பிணங்களுக்கு நடுவில்தான் தியானம் செய்வேன் | Athma Siddhar Lakshmi Amma p-02 |Oneindia Tamil

    ஐம்புலன்களையும் அடக்க கற்று கொள்ள வேண்டும். தேவையில்லாத காமத்திற்கு அடிமையாகக் கூடாது. மனித வாழ்வில் ஒழுக்கம் மிக அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்களையும் நான் சசிகலாவிடம்தான் சொல்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்:

     ஒலிம்பிக்கில் நம் நாட்டுக்கு தங்கம்

    ஒலிம்பிக்கில் நம் நாட்டுக்கு தங்கம்

    கே: ஒலிம்பிக்கில் நம் நாட்டுக்கு தங்கம் கிடைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

    ப: நம் நாட்டிற்கு தங்கம் கிடைக்க வேண்டுமானால் நேர்மையை பயன்படுத்த வேண்டும். நம் நாட்டில் எல்லாம் இருக்கிறது. இந்த நாட்டில் பிறந்ததற்கு நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நம் நாட்டை வெல்ல யாராலும் முடியாது. ஒலிம்பக்கில் கலந்து கொண்டவர்களுக்கு ஆணுறை கொடுத்தால் அவர்கள் எப்படி பயிற்சி எடுப்பார்கள். இது தவறு அல்லவா?

     காம இச்சை என்றால் என்ன தெரியுமா?

    காம இச்சை என்றால் என்ன தெரியுமா?

    காம இச்சை என்றால் என்ன? உங்களால் சிறுநீரை அடக்க முடியுமா? என்னால் தவத்தில் உட்காரும் போது 3 நாட்கள் கூட அடக்க முடியும். அந்த உணர்வுகளை துண்டிக்கக் கூடிய நரம்புகள் துண்டிக்கப்படும். அழுகிய பிணங்களுக்கு நடுவே நான் தியானம் செய்யும் போது எனக்கு மூக்கு சுவாசம் துண்டிக்கப்படும். ஐம்புலன்களில் தூண்டிக் கூடிய உணர்வுபூர்வமான நரம்புகளை என்னால் கட்டுப்படுத்த முடிகிறது. நரம்புகள் எல்லாம் போதையில் மாயையில் சிக்கும் போது அந்த வேலைகளில் ஈடுபட்டு சோர்வாகிவிட்டால் எங்கிருந்து விளையாடுவது? விரதங்களை மேற்கொள்ள வேண்டும்.

     அப்பல்லோவில் நடந்தது என்ன?

    அப்பல்லோவில் நடந்தது என்ன?

    கே: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை அனுமதித்திருந்த போது என்ன நடந்தது?

    ப: என்னை பார்க்க ஒருவர் வருவார். அவரிடம் நான் உண்மைகளை சொல்வேன். அவர் இப்போதுதான் ஜெயிலுக்கு போய்ட்டு வந்தார்கள். ஜெயலலிதா சார்ந்த நபர்களிடம்தான் உண்மையை சொல்வேன். அவர் முதல்வராக இருந்தவர்தான் ஆனால் அவருக்கு நடந்ததை மீடியா முன்பு சொல்ல முடியாது. உங்களுக்கு வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் வாங்க, அந்தம்மாவின் ஆவியுடன் பேச வைக்கிறேன். எனவே உரியவங்களுக்கு உரியவர்கள் வந்தால் நான் சொல்வேன். அவர்கள் மீடியாவில் சொல்லுங்கள் என்றால் சொல்வேன்.

     ராமேஸ்வரத்தில் திதி கொடுப்பது ஏன்?

    ராமேஸ்வரத்தில் திதி கொடுப்பது ஏன்?

    கே: யாராவது இறந்துவிட்டால் ராமேஸ்வரத்தில் திதி கொடுக்க வேண்டும் என்கிறார்கள், சிலர் நீர் நிலைகளில் கொடுத்தாலே போதும் என்கிறார்கள். அது குறித்து உங்கள் கருத்து என்ன?

    ப: ராமேஸ்வரத்தில் நான் தவம் செய்த போது எனக்கு ஒரு சென்ட்கூட இடம் கிடையாது. எனக்குனு 2 ஏக்கர் நிலம் கொடுத்தார்கள். அந்த இடம் எனக்கு வேண்டாம், அதை மக்களுக்கே தரேன், நான் அதில் ஜீவசமாதி அடைய போகிறேன். நதியில் திதி கொடுத்தாலும் கலப்பது சமுத்திரத்தில்தான். இரவு 12 மணிக்கு சமுத்திரத்தில் ஆன்மாக்கள் அலையும். அப்போது அவற்றில் எல்லா வகையான படையல்களையும் அளிக்க வேண்டும். திதி கொடுக்க என்னிடம் நிறைய பேர் வந்துள்ளார்கள். இரவு 12 மணிக்கு கறி மீன், என அனைத்து பொருட்களையும் செய்து படைப்பது வழக்கம். சில ஆன்மாக்களுக்கு கோழி பலியிட வேண்டும். ஆனால் நான் அந்த கோழியை பலியிடாமல் பறக்க விடுவேன். அது சிறிது நேரத்தில் காணாமல் போய்விடும். உங்கள் ஆன்மாவிடம் நல்ல விஷயங்களை பற்றி சொல்லி நல்ல நம்பிக்கையை உருவாக்கினால் நல்ல ஆன்மாவும் அதே நேரம் கெட்டதை சிந்தித்தால் கெட்ட ஆன்மாவாகவும் இருக்கும். கொரோனாவின் போது உயிரிழந்த பலரும் ஒரே நேரத்தில் எரிக்கப்பட்டார்களே என கேட்கிறீர்கள், நம்முடன் இருப்பவர்கள் யாரும் கூட வருவதில்லை. எங்கோ இருக்கும் ஆன்மாக்கள் எல்லாம் ஒன்றாக வந்துள்ளன. என் சொந்தம் என் குடும்பம் என்று நினைக்காமல் எல்லாம் என் குடும்பம் என்று வாழ வேண்டும். எல்லா ஆத்மாக்களும் சாந்தியடை வேண்டும் என்பதே என் விருப்பம் என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+