ஆட்டோ கட்டணம் உயர்கிறதா? 2 கி.மீ.க்கு இவ்வளவா? மறுத்த தமிழக அரசு.. விளக்கம் தந்த போக்குவரத்துத் துறை
சென்னை: பிப்ரவரி மாதம் முதல், ஆட்டோ கட்டணம் உயரப்போவதாக சில தகவல்கள் பரவிவந்த நிலையில், அதுகுறித்து போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருக்கிறது.
எவ்வளவுதான் ஓலா, உபேர் போன்ற செயலிகள் வந்தாலும்கூட, ஆட்டோக்களுக்கான தேவையும், கிராக்கியும் இருந்து கொண்டே தான் உள்ளது.. ஆனால், சில நேரங்களில் அதிகப்படியாக கட்டணம் வசூலிப்பதாக, பயணிகளின் குற்றச்சாட்டுகளாக இருந்து வருகிறது. மற்றொருக்கம் 12 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாததால், அரசு கட்டணத்தை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டும் வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயர்வதாக ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், 10 நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தன. ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக இந்த ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி அறிவிப்புகளை வெளியிட்டிருந்தன.
கட்டணம் உயர்வு: அதன்படி, குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.50 ஆகவும், கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 கட்டணம் என்றும் நிர்ணயித்துள்ளது.
ஆட்டோவில் பயணம் செய்யும் முதல் 2 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாய் கூடுதல் கட்டணம் உயர்த்தப்படும். மேலும், இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை பயணம் செய்தால் பகல் நேர கட்டணத்தை விட 50% அதிகம் வசூலிக்கப்படும். காத்திருப்பு கட்டணமாக நிமிடத்திற்கு ஒரு ரூபாய் 50 பைசா பெறப்படும் எனவும் இந்த புதிய கட்டண உயர்வு பிப்.1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் ஆட்டோ சங்கங்கள் தெரிவித்திருந்தன.
போக்குவரத்து துறை: இந்நிலையில், சில ஆட்டோ சங்கங்கள் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக போக்குவரத்து துறை கவனத்திற்கு வந்துள்ள நிலையில், இது தொடர்பாக போக்குவரத்துத்துறை ஆணையர் விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.. அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவு அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது.
புகார் தரலாம்: சில ஆட்டோ சங்கங்கள் பிப்ரவரி1 முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக கவனத்திற்கு வந்துள்ளது. அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மீறி ஆட்டோக்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம். புகாரின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications