AVM Saravanan: நேற்று பிறந்தநாள்! இன்று இறந்தநாள்! பணிவின் சிகரம்! யார் இந்த ஏவிஎம் சரவணன்?
சென்னை: சரவணன் சூர்யா மணி என்பவர்தான் ஏவிஎம் சரவணன் என அழைக்கப்பட்டு வந்தவர். அவர் இன்று காலமான நிலையில் யார் அவர் என்பதை பார்க்கலாம். எப்போதும் கைகளை கட்டிக் கொண்டே நிற்கும் அவர் பணிவின் சிகரம் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு, அந்த நிறுவனத்தை அவரது மகன் ஏவிஎம் சரவணன் நிர்வகித்து வந்தார். "நானும் ஒரு பெண்", "சம்சாரம் அது மின்சாரம்", "சிவாஜி", "வேட்டைக்காரன்", "மின்சார கனவு", "அயன்" உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

பல சூப்பர் ஸ்டார் நடிகர்களை உருவாக்கிய நிறுவனம் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தை செட்டியாரின் மகன் ஏவிஎம் சரவணன் தொடர்ந்து நடத்தி வந்த நிலையில் வயது மூப்பு காரணமாக அவரது மகன் எம்எஸ் குகன் நடத்தி வருகிறார்.
சரவணனுக்கு என்ன ஆச்சு
கடந்த இரு ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருந்த ஏவிஎம் சரவணன், ஒரு மாதத்திற்கு முன்புதான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள வீட்டில் கடந்த ஒரு மாதமாக இருந்தார்.
உடல் அஞ்சலி
இந்த நிலையில் அவரது உயிர் இன்று காலை 5.30 மணிக்கு பிரிந்தது. அவரது உடல் அஞ்சலிக்காக, ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது. 1958 ஆம் ஆண்டு முதல் சினிமா தயாரிப்பில் சரவணன் ஈடுபட்டு வருகிறார்.
ரஜினி கமல் வளர்ச்சியில் பங்கு
இவர் ஏவிஎம் செட்டியாரின் மூன்றாவது மகன். ஏவிஎம் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். ரஜினி, கமல் ஆகியோர் வளர்ச்சியிலும் இவரது பங்கு உள்ளது. 1986 ஆம் ஆண்டு சென்னை ஷெரீப் என்ற பட்டத்தையும் சரவணன் பெற்றார்.
வெள்ளை சட்டை
வெள்ளை சட்டை, கைகளை கட்டி நிற்பது என்பதுதான் இவரது அடையாளம். பல்வேறு குடும்ப பாங்கான படங்களை தயாரித்து வந்தார். ஏவிஎம் தயாரிப்பு படங்கள் என்றால் நம்பி போகலாம் என்ற நிலையை உருவாக்கியவர். தந்தை கடைபிடித்து வந்த பாரம்பரியத்தை சரவணனும் கடைபிடித்து வந்தார்.
சினிமா தயாரிப்புகள்
இப்படிப்பட்ட நிலையில்தான் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏவிஎம் நிறுவனம் தனது சினிமா தயாரிப்புகளை நிறுத்திக் கொண்டது. கடந்த இரு ஆண்டுகளாக உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த சரவணின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஆம் இவர் 1939 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி பிறந்தார். தனது 18 ஆவது வயதில் ஏவிஎம் ஸ்டூடியோவிற்குள் நுழைந்தார்.
கற்றுத் தேர்ந்தவர்
அப்போது முதலே நிர்வாகம், படத்தயாரிப்பு, விநியோக உரிமை, படங்களை வெளியிடுவது, கதை கேட்டல் உள்ளிட்ட அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். 1958ஆம் ஆண்டு "மாமியார் மெச்சிய மருமகள்" திரைப்படத்தின் மூலம் அவரது தனது திரைப்பயணத்தை தொடர்ந்தார்.
100-க்கும் மேற்பட்ட படங்கள்
அந்த வகையில் தமிழ், தெலுங்கு, இந்தி, என பல்வேறு மொழிகளிலும் 100-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தார். அதிலும் "முரட்டுக்காளை" , "சகலகலா வல்லவன்", "முந்தானை முடிச்சு", "புதுமைப் பெண்", "மிஸ்டர் பாரத்", "சம்சாரம் அது மின்சாரம்", "மனிதன்", "எஜமான்" உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.
விருதுகள்
இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் அதில உலக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். தமிழக அரசின் கலைமாமணி, ராஜா சாண்டோ உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். "முயற்சி திருவினையாக்கும்", "மனதில் நிற்கும் மனிதர்கள் (4 பாகங்கள்)", "ஏவிஎம் 60 சினிமா" ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.
கோபமே வராது
"நானும் சினிமாவும்" என்ற தலைப்பில் ஒரு தொடரையும் அவர் எழுதி வந்தார். எப்போதுமே கோபம் கொள்வதோ, பதற்றமாக இருப்பதோ சரவணனிடம் பார்க்கவே முடியாது என்கிறார்கள் அவருடன் இருந்தவர்கள். அது போல் அவர் சாய்பாபா பக்தராம்.
இன்று உடல் தகனம்
சரவணனின் உடல் இன்று மாலை 4 மணி வரை ஏவிஎம் ஸ்டுடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் ஏவிஎம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும். சரவணனின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி வருகிறார்கள்.
-
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications