Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆண் குழந்தைகளுமா? எது எதுக்கெல்லாம் மாணவர்கள் பயப்படுகிறார்களோ அவையும் சீண்டல்கள்தான்: அன்பில் மகேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ''பெண் குழந்தைகளுக்கு நிகராக, ஆண் குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, ஆய்வுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். பாலியல் சீண்டல்கள் மட்டுமல்ல, குழந்தைகள் எதற்கெல்லாம் பயப்படுகிறார்களோ அதுவும் சீண்டல்கள்தான் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருக்கிறார்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி, சென்னை எழும்பூர் டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளியில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. இதை அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்து, விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார்.

schools tn government

அப்போது பேசிய அமைச்சர், "குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் குறித்து ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டு இருக்கிறோம். குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் நவம்பர் 25 முதல் நவம்பர் 29 வரை அனைத்து வகை பள்ளிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பாலியல் வன்முறை: பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுக்கும் வகையில் 14417, 1098 ஆகிய எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கு சமூக நலத்துறை மூலம் 181 விழிப்புணர்வு எண் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் எதிர்பாராத வகையில் சில சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

18 வயதிற்கு கீழ் உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்கின்ற பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. பல்வேறு வகையான துன்புறுத்தல்களிலிருந்து அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் நிலையில், மாணவர்களின் உரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்திட வேண்டும். வருங்காலங்களில் நவம்பர் 17 முதல் 22 ஆம் தேதி வரை குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படும்.

மாணவர்கள்: பள்ளி வளாகத்திற்குள் மாணவ, மாணவியர்களுக்கு கருத்துரையாற்ற வருபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும், எப்படிப்பட்ட கருத்துக்களை வழங்க வேண்டும் என்பது குறித்து விரிவாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது..

பள்ளிகளில் காலை வழிப்பாட்டு நேரங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு புரியும் வகையில் தெரிவிக்க வேண்டும். பாலியல் சீண்டல்கள் மட்டுமல்ல; குழந்தைகள் எதற்கெல்லாம் பயப்படுகிறார்களோ அதுவும் சீண்டல்கள்தான்.

பெண் குழந்தைகள்: குழந்தைகளுக்கான பாலியல் பாதுகாப்பு குறித்து, என்எஸ்எஸ் மூலம் இதுவரை, 1,723 முகாம்களை நடத்தி உள்ளோம். அதன் வாயிலாக, 8,615 ஆசிரியர்களுக்கும், 86,186 மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது ஆண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கு நிகரான பாலியல் சீண்டல்கள் நடைபெறுவது ஆய்வுகளில் தெரிகிறது.

தினந்தோறும் வெளியாகும் பத்திரிகை செய்திகளை படித்து, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமே தவிர, யாரும் பயப்படத் தேவை இல்லை. செய்திகளை விழிப்புணர்வுக்காக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு Good Touch, Bad Touch சொல்லி தர வேண்டும். தேன் சிட்டு, புது ஊஞ்சல் போன்ற இதழ்களை வழங்கி வருகிறோம். பள்ளி அளவில் ''மாணவர் மனசு'' என்ற புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.

குழந்தைகள் புகார்: குழந்தைகளின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளை மாணவர் மனசு பெட்டியில் செலுத்துகிறார்கள்.. அவர்கள் அவர்களின் மொழியில் எழுதி இருப்பார்கள். சில மாணவர்கள் பெயர் எழுதாமல் விட்டிருந்தாலும் அதனை எடுத்து காலை வணக்க கூட்டத்தின்பாேது நாங்கள் இருக்கிறோம் என சொல்ல வேண்டும். மாணவர்கள் சுதந்திரமாக கருத்துக்களையும் தெரிவிக்கலாம் என்ற எண்ணத்தை ஆசிரியர்கள்தான் வளர்க்க வேண்டும்.

இன்றைய கருத்தரங்கில் பேசப்படும் கருத்துகள் அடிப்படையில், தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஒரு நண்பனை போல இருந்து எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து, விரைவில் குறும்படம் வெளியாக உள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நம்முடைய செயல்பாடும் அமைய வேண்டும்'' என்றார் அன்பில் மகேஷ்.

விழிப்புணர்வு: இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை செயலர் மதுமதி பேசும்போது, "கடந்த 2012 முதல், போக்சோ சட்டம் இருந்தாலும், அதுகுறித்த விழிப்புணர்வு பலரிடமும் இல்லை. அதை விளக்கவே, ஒவ்வொரு வருடமும் கருத்தரங்குகளை நடத்துகிறோம். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவோர் தைரியமாக வெளிப்படுத்தினால் கூட, கேட்பவர்கள் மூடி மறைக்க நினைக்கிறார்கள்..

அப்படித்தான், கிருஷ்ணகிரியில் பாதிக்கப்பட்ட குழந்தை வெளியில் சொல்லத் துணிந்தபோது, பள்ளி தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும், வெளியில் சொன்னால், உனக்கு கெட்ட பெயர் வந்து விடும் என்று சொல்லி தடுத்திருக்கிறார்கள்

போக்சோ சட்டம்: போக்சோ மட்டுமல்லாது POSH சட்டத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். (Prevention of sexual harassment for women at work place) .பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது ஆண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும் போக்சோ சட்டத்தில் கீழ்தான் வரும். பெண்களுக்கு பெண்களாலும், ஆண்களுக்கு ஆண்களாலும் கூட இந்த பாலியல் சீண்டல்கள் நடைபெறும்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+