தயாநிதிமாறனின் வங்கி கணக்கிலிருந்து திருடப்பட்ட ரூ 99,999 திரும்ப கிடைத்தது! ஆக்ஸிஸ் வங்கி விளக்கம்
சென்னை: திமுக எம்பி தயாநிதி மாறன் வங்கிக்கணக்கில் இருந்து திருடப்பட்ட ரூ.99,999 பணம் திரும்ப கிடைத்துவிட்டதாக ஆக்ஸிஸ் வங்கி விளக்கமளித்துள்ளது.
சென்னை ஆர்.ஏ.புரம் போர்ட் கிளப் பகுதியில் வசித்து வரும் தயாநிதி மாறன் எம்பி நேற்று முன் தினம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். திமுக எம்பியாக உள்ளேன். நானும் என் மனைவி பிரியாவும் சேர்ந்து ஜாயின்ட் அக்கவுன்ட்டை கோபாலபுரத்தில் உள்ள ஆக்ஸிஸ் வங்கியில் சேமிப்புக் கணக்காக வைத்துள்ளோம்.
கடந்த 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மலேசியாவிலிருக்கும் என் மனைவிக்கு, தெரியாத செல்போன் எண்களில் இருந்து 3 தடவை போன் வந்துள்ளது. அதில் ஹிந்தி மொழியில் பேசியவர்கள் ஆக்ஸிஸ் வங்கியில் இருந்து பேசுவதாகவும் ரூ 99,999 பண பரிவர்த்தனை உங்களால் செய்யப்பட்டதா என்றும் கேட்டுள்ளனர்.
எனது மனைவி எந்தவித ஓடிபி நம்பரையும் கொடுக்காத நிலையில் எங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 99,999 ஒரே தடவையாக எடுக்கப்பட்டுவிட்டதாக எஸ்எம்எஸ் வந்தது. எனவே சம்பந்தப்பட்ட மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பர் தன்னுடையதான் என்றும் தனது மனைவியின் செல்போன் எண் இல்லை என்றும் புகாரில் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவுக்கு புகாரை அனுப்பி வைத்தார்.
அதன் பேரில் தயாநிதிமாறன் மனைவிக்கு வந்த செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீஸார் ஆய்வு செய்து வந்தனர். ஓடிபி எண் இல்லாமலேயே எப்படி பணம் மோசடி செய்யப்பட்டிருக்கும் என்ற அதிர்ச்சி எழுந்தது. மேலும் இந்த திருட்டு குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் தயாநிதி மாறன் புகாராக கொடுத்திருந்தார். டிஜிட்டல் இந்தியாவில் தனிப்பட்ட தரவுகளுக்கு பாதுகாப்பு இல்லை என தயாநிதி மாறன் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் அவருடைய பணம் திரும்ப கிடைத்துவிட்டதாக ஆக்ஸிஸ் வங்கி தெரிவித்துள்ளது. தயாநிதி மாறனின் வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்ட ரூ 99,999 பணம் மீண்டும் கிடைத்துவிட்டது என தெரிவித்துள்ளனர்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications