சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை தமிழகமெங்கும் கோலாகல கொண்டாட்டம்.. சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள்
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
சென்னை: நவராத்திரி நிறைவடையும் நிலையில், வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையை மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள்.
கல்விக்குரிய சரஸ்வதி, செல்வத்துக்குரிய லட்சுமி, வீரத்துக்குரிய பார்வதி போன்றோரை வணங்கக்கூடிய பண்டிகைதான் நவராத்திரி..
இதில் கல்வி மற்றும் தொழில் சிறக்க சரஸ்வதி தேவி மற்றும் பார்வதியை வழிபடும் நாள் சரஸ்வதி பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் மக்கள் கொண்டாடுவது வழக்கம்.

வழிபாடு
இன்று சரவஸ்வதி பூஜை என்பதால், வீடுகளில் பாடப்புத்தகங்களை வைத்து, சரஸ்வதியிடம் வேண்டுதல்கள் நடந்து வருகிறது.. அவல், பொரி, சுண்டல் போன்றவற்றையும் சரஸ்வதிக்கு படையல் வைத்து வழிபட்டு வருகின்றனர். அதேபோல, செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கேற்றார்போல், ஆயுத பூஜை நாளின்போது, தொழில் சம்பந்தமான உபகரணங்கள், கருவிகள், ஆயுதங்கள், வாகனங்களை சுத்தம் செய்து, மஞ்சள், குங்குமம், வைத்து அலங்கரித்து வருகின்றனர்..

விஜயதசமி
அத்துடன், பழம், பொரி சுண்டல் போன்றவற்றை வைத்தும் படையல் செய்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.. கடைகளிலும், அலுவலகங்ளிலும் சிறப்பு பூஜைகளும் நடந்து வருகின்றன... இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமி என்பதால், ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.. வரும் சனி மற்றும் ஞாயிறுக்கிழமையும் விடுமுறை என்பதால், மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை உள்ளது.

பஸ்கள்
பண்டிகை விடுமுறை நாளையொட்டி, கல்வி, தொழில் உள்ளிட்ட காரணங்களுக்கு சென்னையில் வசித்து வரும் வெளியூர்வாசிகளும், பண்டிகை காலங்களின்போது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அந்தவகையில், இதனையொட்டி சென்னையில் வசிக்கும் வெளியூர்வாசிகள், சொந்த ஊர்களுக்கு நேற்றே செல்ல தொடங்கி விட்டனர்.. இதனால் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.. விடிய விடிய மக்கள் காத்து கிடந்து சொந்த ஊருக்கு சென்றனர்.

கடைகள்
பயணிகள் வசதிக்காக சென்னையில் கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன... இதைதவிர, சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.. கோவை மாவட்டத்தில் இருந்தும் வெளியூர்களுக்கு 260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன... இன்றைய தினம் பண்டிகை என்பதால், தமிழகம் முழுவதும் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications