உயிரை பறிக்கும் இதய நோய்.. 9 மாத குழந்தையை காப்பாற்ற உடனே உதவுங்கள்!
சென்னை: 9 மாத பச்சிளம் குழந்தையான பி.அனிஷா கடுமையான இதயநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பிறக்கும்போதே இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்த இக்குழந்தை தற்போது உயிர் பிழைக்க போராடி வருகிறது. இக்குழந்தையை காப்பாற்ற உடனே உதவுங்கள்
9 மாத குழந்தை அனிஷா, பிறந்த ஐந்தே நாட்களில் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் எடை குறைவாக இருந்ததால், அனிஷாவுக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சை தேவைப்பட்டது.

சமீபத்தில், எம்.ஐ.ஓ.டி மருத்துவமனைகளில் நடைபெற்ற இலவச இருதய பரிசோதனை முகாமில், அனிஷாவுக்கு 'டெட்ராலஜி ஆஃப் ஃபாலோட் வித் அப்சென்ட் பல்மனரி வால்வு' (Tetralogy of Fallot with absent pulmonary valve) எனும் அரிய மற்றும் ஆபத்தான இதய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இத்தகவல் அனிஷாவின் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எம்.ஐ.ஓ.டி மருத்துவமனை மருத்துவர்கள், அனிஷாவுக்கு உடனடியாக இதய உள்ளுறுப்பு சீரமைப்பு மற்றும் ஆர்.வி-பி.ஏ குழாய் பொருத்தும் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளனர். அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சைப் பிரிவு செலவுகள், மருத்துவமனையில் தங்கும் செலவு மற்றும் மருந்துகளுக்கான மொத்த செலவு ₹3,65,000/- என மதிப்பிடப்பட்டுள்ளது.
அனிஷாவின் தந்தை பாலகிருஷ்ணன், திருப்பத்தூரைச் சேர்ந்த நாடி ஜோதிடர் ஆவார். ஒரு சமயத்தில் மாதத்திற்கு ₹4,000 மட்டுமே சம்பாதித்த அவர், தற்போது வேலையின்றி, தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை பராமரிக்க சிரமப்படுகிறார்.

"என் சின்னப் பெண் இவ்வளவு இளம் வயதில் இவ்வளவு வலியை அனுபவிப்பாள் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. அவள் சுவாசிக்க சிரமப்படும் ஒவ்வொரு முறையும், ஒரு தந்தையாக நான் உதவியற்றவனாக உணர்கிறேன். அவள் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை" என்று பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவரது தாயார் கூறுகையில், "எனது மகள் தினம் மூச்சு திணறால் கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை. மற்ற குழந்தைகளைப் போல சிரிக்கவும், விளையாடவும், வளரவும் அவளுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும். எங்கள் மகளைக் காப்பாற்ற தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள். உங்கள் ஆதரவு இல்லாமல், இந்த அறுவை சிகிச்சைக்கு எங்களால் பணம் செலுத்த முடியாது" என்று வேண்டியுள்ளார்.
இந்த பெரிய தொகையை திரட்ட அனிஷாவின் குடும்பத்தினரிடம் எந்த வழியும் இல்லை. அனிஷாவின் தாத்தாவின் சிறிய உதவியுடன், அவர்களால் அன்றாடச் செலவுகளை மட்டுமே சமாளிக்க முடிகிறது. இச்சமயத்தில், குழந்தையின் உயிர், உரிய நேரத்தில் செய்யப்படும் அறுவை சிகிச்சையைப் பொறுத்து இருப்பதால், அவர்கள் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளனர்.

உங்கள் பங்களிப்பு, எவ்வளவு சிறியதாக இருந்தாலும், குழந்தை அனிஷாவுக்கு இரண்டாவது வாழ்வை அளிக்கும். ஒன்றாக இணைந்து, இந்த உயிர்காக்கும் அறுவை சிகிச்சைக்கு உதவுவதன் மூலம், அனிஷாவின் போராடும் குடும்பத்திற்கு நம்பிக்கையை அளிக்க முடியும். குழந்தை அனிஷாவின் சிகிச்சைக்கு ஆதரவு தாருங்கள். உங்கள் கருணையால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியும்.
உங்கள் அன்பான பங்களிப்பை கீழ்கண்ட அறக்கட்டளை கணக்கு மூலம் செலுத்தலாம்: UPI ID: Dotogethe.09@idfcbank, கணக்கு பெயர்: Dotogether Foundation, கணக்கு எண்: 10137533382, IFSC குறியீடு: IDFB0080536, வங்கி பெயர்: IDFC BANK.













Click it and Unblock the Notifications