ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து நடந்த என்கவுண்டர்கள்.. போலீஸ் சொல்வது என்ன?
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் அடுத்தடுத்து ரவுடிகளை கைது செய்து வருகிறார்கள். இதில் ஒருசில ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களில் மட்டும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 3 என்கவுண்டர்கள் நடந்துள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் தனது புதிய வீட்டின் கட்டுமான பகுதியை பார்வையிட்டு கொண்டிருந்த போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலை வழக்கில் கைதானவர்களில் 25 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 2 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ரான் கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே திருவேங்கடமும், இன்று அதிகாலை ரவுடி சீசிங் ராஜாவும் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
ரவுடி திருவேங்கடம் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி அதிகாலை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். வழக்கில் தொடர்புடைய ஆயுதங்களை எடுப்பதற்காக மணலியில் உள்ள அவரது வீட்டிற்கு ரவுடி திருவேங்கடம் அழைத்து செல்லப்பட்டார். அப்போது ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டுமந்தை செல்லும் பாதையில் இயற்கை உபாதைக்காக வாகனத்தை போலீசார் நிறுத்திய போது, போலீசாரை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பி ஓட முயன்றார்.
அப்போது, போலீசார் துரத்தி சென்று பிடிக்க முற்பட்ட போது, மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து திருவேங்கடம் காவலர்களை நோக்கி சுட்டார். இதனால் தற்காப்பிற்காக போலீசார் திருப்பி சுட்டனர். இதில் காயம் அடைந்த திருவேங்கடம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறினர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மிக முக்கிய நபராக திருவேங்கடம் அறியப்பட்டார். அண்மையில் காக்காதோப்பு பாலாஜி போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
ரவுடி சீசிங் ராஜாவின் பெயரும் தொடக்கம் முதலே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடிபட்டது. சீசிங் ராஜா தொடர்ந்து தலைமறைவாகவே இருந்த வந்தார். தனிப்படை போலீசார் சீசிங் ராஜாவை கடந்த சில மாதங்களாக தேடி வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் போலீசாரிடம் சிக்காமல் எஸ்கேப் ஆகியிருந்தார். ஆனாலும் தனிப்படை போலீசார் தொடர்ந்து அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் தான் ஆந்திராவில் பதுங்கியிருந்த ரவுடி சீசிங் ராஜா நேற்று இரவு சிக்கியுள்ளார். அவரை சென்னை அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் போலீசாரை தாக்க முற்பட்டதால் தற்காப்புக்காக நடத்திய பதில் தாக்குதலில் சீசிங் ராஜா பலியாகியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர்களில் 3 பேர் இதுவரை என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே சீசிங் ராஜாவுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் தொடர்பும் இல்லை எனவும் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications