விஜய்க்கு வெள்ளி கிரீடம், காலணியை பரிசாக கொடுக்க! நீலாங்கரை வீட்டில் பெங்களூர் ரசிகர் காத்திருப்பு
சென்னை: வெள்ளி கிரீடம், காலணியை விஜய்க்கு வழங்குவதற்காக அவரது நீலாங்கரை வீட்டு வாசலில் பெங்களூர் ரசிகர் ஒருவர் காத்திருக்கிறார். அதன் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என சொல்லப்படுகிறது.
தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவரும் பிரபல நடிகருமான விஜயை நேரில் சந்தித்து தனது அன்பையும் மரியாதையையும் தெரிவிக்க, பெங்களூரைச் சேர்ந்த 28 வயது தீவிர ரசிகர் ஆகாஷ் வர்மா மணிக்கணக்கில் சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள விஜயின் இல்லம் முன்பு காத்திருக்கிறார்.

ஆகாஷ் வர்மா கையில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க வேலைப்பாடு கொண்ட வெள்ளி கிரீடம் மற்றும் நேர்த்தியான காலணி உள்ளன. இந்த பரிசுகளை பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற ஆபரண கலைஞரிடம் சிறப்பு ஆர்டர் கொடுத்து தயாரித்ததாக அவர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் ஆகாஷ், நேற்று காலை சென்னைக்கு ரயிலில் வந்தார். நேரடியாக நீலாங்கரை சென்று காத்திருக்கிறார். அவரது ரசிகர் அர்ப்பணிப்பை நண்பர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் வீடியோ வைரலாகி உள்ளது.
"விஜய் அண்ணன் அரசியலில் நுழைந்து சாமானிய மக்களுக்காக குரல் கொடுக்கிறார். அதை கௌரவிக்கும் விதமாகவே இந்த பரிசுகளை தயார் செய்தேன். அவரை சந்திக்காமல் திரும்ப மாட்டேன்." என ஆகாஷ் வர்மா, தெரிவித்தார்.
விஜயின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆரம்பத்தில் அனுமதி மறுத்தனர். ஆனால் ஆகாஷின் நிலையான காத்திருப்பை கண்ட உள்ளூர் ரசிகர் கழக உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து உணவும் தண்ணீரும் கொண்டு வந்து உதவி வருகின்றனர். வீட்டு வாசல் பகுதியில் படிப்படியாக ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், "விஜய் ஒரு நடிகர் என்ற அளவிலிருந்து அரசியல் தலைவராக மாறியிருக்கிறார். ரசிகர்களின் இந்த அர்ப்பணிப்பு அவரது மக்கள் செல்வாக்கை நன்கு காட்டுகிறது" என்றார்கள்.
கட்சி வட்டாரங்கள் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆகாஷின் காத்திருப்பு எப்படி முடியும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
விஜய்க்கு பிரச்சாரத்திற்கு செல்லும் இடத்தில் எல்லாம் வெள்ளி, பித்தளை வேல் பரிசாக கொடுக்கப்படுகிறது. அது போல் வாள்களும் கொடுக்கப்படுகின்றன. அது போல் ஒரு முறை சங்கீதாவுடன் விஜய் இருக்கும் புகைப்படத்தையும் ரசிகர்கள் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
பெங்களூரில் நடக்கும் கொடுமை..! திடீர் திடீரென வீட்டை காலி செய்யச் சொல்லும் வீட்டு ஓனர்கள்.. ஏன்? -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு












Click it and Unblock the Notifications