"சண்முகம்.." லுங்கியோடதான் கூட்டிட்டு போக வேண்டி வரும்! போட்டுத் தாக்கிய பெங்களூர் புகழேந்தி!
சென்னை : சொந்த தொகுதியிலேயே தோற்ற சி.வி.சண்முகம் தன்மையோடு பேச வேண்டும் இல்லையென்றால் லுங்கியுடன் அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் வரும் என அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள புகழேந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள அவர்," சி.வி.சண்முகம் இரண்டு நாட்களுக்கு முன்பு காவல்துறையை மிக அநாகரிகமாக பேசியுள்ளார். காவல்துறை கோபாலபுரத்தில் மாவாட்டிக் கொண்டிருக்கிறதா?
சிவி.சண்முகம் போன்றவர்களுக்கு திடீரென ஜானகி அம்மாள் ஞாபகம் வந்துள்ளது. சொந்த தொகுதியிலேயே தோற்ற சி.வி.சண்முகம் தன்மையோடு பேச வேண்டும் இல்லையென்றால் லுங்கியுடன் அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் வரும்.

ஓபிஎஸ்
ஒருங்கிணைப்பாளர் பதவியில் நான் இல்லை என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். அதனால் அவர் தற்போது பதவியில் இல்லை. ஓபிஎஸ் மட்டும் தான் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். நீதிமன்ற தீர்ப்பில் இந்த பிரச்னையின் பிரதான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது வந்த தீர்ப்பு ஒ.பி.எஸ்-க்கு சாதமாகத்தான் வந்துள்ளது. ஒருவேளை சின்னம் மற்றும் கட்சி முடக்கப்பட்டால் அதனை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி இப்போது வந்தாலும் ஒ.பி.எஸ் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார் ஒ.பி.எஸ்-க்கு வருவது தானாக சேர்ந்த கூட்டம் எடப்பாடி பழனிசாமி பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கிறார்.

மது அருந்தியது யார்?
அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் நிறைய வீடியோ ஆதாரங்கள் வெளிவரும். சி.வி.சண்முகம் கொடுத்த புகார் நிரூபிக்கப்படவில்லை என்றால் சட்டம் அவர் மீதுதான் பாயும். முன்னாள் சட்டத்துறை அமைச்சர், தமிழக டிஜிபி மாவாட்டுகிறார் என கூறியதை தமிழக முதல்வர் கேட்டு அமைதியாக இருப்பது வேதனையாக உள்ளது. அதிமுக மீண்டும் எழுந்து நடக்க வேண்டும். எனும் நோக்கத்தோடு தான் ஒபிஎஸ் எடப்பாடியை அழைத்திருக்கிறார். அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் மது அருந்தியது யார்? குத்தாட்டம் போட்டது யார்? என்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவரும்.

டாஸ்மாக் சிவி.சண்முகம்
அதிமுக பொதுக்குழு செல்லும் என்கிற இரு நீதிபதி தீர்ப்பை எதிர்த்து நாளை மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. டாஸ்மாக் சிவி.சண்முகத்திற்கு எதுவும் புரியாது . எங்கள் அண்ணன் பொன்னையன் பேசியிருக்கார். அவரோட அப்பாவும் நானும் க்ளாஸ்மேட். என் பையனோட ஆறு வயசு சின்னவன். காலைலயே சி.வி.சண்முகம் குடிக்க ஆரம்பிச்சுடுவான். அப்பிடின்னு பொன்னையனே உனக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்காரு.

ஜானகி அம்மா
ஒரு நாளைக்கு படத்தை வெச்சு பூ போட்டு இருப்பீங்களா? ஒரு நாளைக்கு ஜெயலலிதாவின் புகழை சொல்லிருப்பீங்களா? இன்னொரு உண்மையையும் சொல்கிறேன் நான். சத்யா ஸ்டுடியோவை நிர்வகிக்கும் குமார் எடப்பாடி ஆட்சியில் இருக்கும்பொழுது ஜானகி அம்மாவுக்கு விழா எடுக்க வேண்டும் என மனுகொடுத்தார். நான் செய்கிறேன் அப்பிடின்னு சொல்லிட்டு உடைப்பில் போட்டுட்டாங்க. கொள்ளையடிச்சுட்டோம், கொள்ளையடிச்சுட்டோம்னு சொல்றிங்க என்ன கொள்ளையடிச்சுட்டோம் நாங்க" ஆவேசமாக பேசினார்.












Click it and Unblock the Notifications