அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்கிறாங்களே! நேரடியாக பேங்க் கணக்கிற்கே வரும் ரூ.4 லட்சம்! தமிழக அரசு செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் விளையாட்டுத்துறை தொடர்பான மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று நேற்று வெளியானது.

நேற்று விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தல் மூலம் கிடைக்கும் உதவிகள் பற்றி குறிப்பிட்டார்.

bank

விளையாட்டு வீரர்கள் போட்டிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் உபகரணங்கள் மேம்பாடு பயிற்சிகள். விளையாட்டு மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றிற்கு உதவ கொடையாளர்கள் இந்த தளத்தை பயன்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட பிற இணையதள பயன்பாடுகள் பின்வருமாறு:
*தமிழ்நாடு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது
*நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம்
*தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதி சேர்க்கை *சிறப்பு உதவித் தொகை திட்டங்கள் (ELITE / MIMS /CDS)
*இணையதள விளையாட்டரங்கம் முன்பதிவு
* இணையதள உறுப்பினர் முன்பதிவு
* இணையதள வணிக வளாகம் மேலாண்மை அமைப்பு
*உயரிய ஊக்கத்தொகைக்கான இணையதள filedareerLab (HCI) வழங்கப்படும்.

பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கங்கள்: தற்போது 23 மாவட்டங்களில் 30 பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில், நேரு பூங்கா. மாவட்ட விளையாட்டு வளாகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய AGB விளையாட்டு வளாகம், வேளச்சேரி, ஷெனாய் நகர் விளையாட்டு வளாகம். முகப்பேர் விளையாட்டு வளாகம் மற்றும் சென்னை. ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் ஆகிய இடங்களில் இந்த வசதிகள் உள்ளன.

அரியலூர், தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம். கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி (அண்ணா விளையாட்டரங்கம் மற்றும் ஸ்ரீரங்கம்). திருநெல்வேலி, திருப்பூர். திருவண்ணாமலை, திருவாரூர். விழுப்புரம், விருதுநகர். நீலகிரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த விளையாட்டரங்கங்களில் இறகுபந்து, கூடைப்பந்து, வாள்சண்டை கைப்பந்து, ஜூடோ. கபாடி, மேசைப்பந்து மற்றும் கையுந்துபந்து போன்ற விளையாட்டு வசதிகள் உள்ளன.

இது போக வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் / வீராங்கனைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ.2 இலட்சம் நிதி ரூ. 4 இலட்சமாக உயர்த்தப்படுகிறது. இனி அந்த பணம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்க்கு செலுத்தப்படும்.

தமிழ்நாடு அரசு. 2023-2024-ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை பராமரிப்பதற்காக ரூ.30.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மாநிலத்தில் உள்ள விளையாட்டு வீரர்களின் நலனிற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு அறிவியல் மையங்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்களை நிறுவி உள்ளது.

இந்த மையங்கள் சரியான ஊட்டச்சத்து, மிதமான மற்றும் தீவிரமான உடற்பயிற்சி, சரியான உடற்தகுதி மற்றும் நல்வாழ்வை அடைவதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதையும். ஊக்குவிப்பதையும் குறிக்கோளாகக் கொண்டு விளையாட்டு பயிற்சி மற்றும் போட்டிகளின்போது காயமடைந்த விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவி வழங்குகிறது, என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+