சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே ஒரு மெசேஜ்தான்.. வங்கி கணக்கிலிருந்து ரூ. 1 லட்சத்தை நொடியில் இழந்த டாக்டர்.. ஜாக்கிரதை மக்களே!

Google Oneindia Tamil News

சென்னை: ஒரே ஒரு மெசேஜ் காரணமாக புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.

இப்போதெல்லாம் வங்கி கணக்கில் இருந்து நூதன முறைகளில் மோசடிகள் செய்யப்பட்டு வருகின்றன. முன்பெல்லாம் போன் செய்து.. உங்கள் ஏடிஎம் கார்ட் காலாவதியாகிவிட்டது கார்ட் மேலே இருக்கும் 16 நம்பர் சொல்லுங்கள் என்று கூறி மோசடி செய்தனர்.

வங்கி மேனேஜர் பேசுவதாக கூறி இப்படி மோசடியாளர்கள் பேசுவதை நம்பி பலர் ஓடிபியை பகிர்ந்து ஏமாந்த கதைகள் உண்டு.

தனியார்மயமாகும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி? லாபம் ஈட்டியும் தப்பவில்லை.. மத்திய அரசு திட்டம் தனியார்மயமாகும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி? லாபம் ஈட்டியும் தப்பவில்லை.. மத்திய அரசு திட்டம்

 பரிசு

பரிசு

அதன்பின் உங்கள் வங்கி கணக்கிற்கு பரிசு விழுந்து இருக்கிறது. வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி சிலர் லிங்க் அனுப்புவது உண்டு. இந்த லிங்கை கிளிக் செய்த பலர் அதில் வங்கி கணக்கை கொடுத்து ஏமாற்றம் அடைந்தது உண்டு. இது போக இன்னும் பல மோசடியாளர்கள் உங்கள் வங்கி கணக்கை ஆதரவுடன் இணைக்க வேண்டும் என்று கூறி.. வங்கி கணக்கு விவரங்களை வாங்கி மோசடி செய்யும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில்தான் ஒரே ஒரு மெசேஜ் காரணமாக புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். புதுச்சேரி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார் சீனிவாசன். இவருக்கு மோசடியாளர்கள் வங்கி கணக்கில் பான் நம்பரை இணைக்க வேண்டும் என்று கூறி லிங்க் ஒன்றை அனுப்பி உள்ளனர். இது தெரியாமல் அந்த லிங்கை சீனிவாசன் கிளிக் செய்துள்ளார்.

அதிக போன்

அதிக போன்

இப்போதெல்லாம் இப்படி அதிக மெசேஜ் வர தொடங்கி உள்ளது. அவர் அந்த லிங்கை கிளிக் செய்த நிலையில், உள்ளே வங்கி கணக்கு விவரம் கேட்டுள்ளது. அதேபோல் ஓடிபி கேட்டுள்ளது. இவரும் ஓடிபி விவரங்களை கொடுத்துள்ளார். அப்போது உடனே அவரின் கணக்கில் இருந்து 72 ஆயிரம் ரூபாய் சென்றுள்ளது. பின்னர் மீண்டும் 25 ஆயிரம் ரூபாய், அதன்பின் 6500 ரூபாய் என்று மூன்று தவணையாக சென்றுள்ளது.

எப்படி?

எப்படி?

இது ஸ்பேம் லிங்க் ஆகும். இதை கிளிக் செய்து வங்கி விவரங்களை கொடுத்தால், அதை மோசடியாளர்கள் பார்க்க முடியும். அவர்கள் உடனே உங்கள் வங்கி கணக்கு விவரங்களை வைத்து பணம் எடுக்க முயற்சிப்பார்கள். பின்னர் அது ஓடிபி கேட்கும். நீங்கள் கொடுக்கும் ஓடிபியை வைத்து அவர்கள் உங்கள் வங்கி விவரங்களை தங்கள் தளத்தில் சேவ் செய்து கொள்வார்கள். இப்படி சேவ் செய்யும் போது.. முதல் முறை மட்டும் பணம் எடுக்க ஓடிபி கேட்கும். அடுத்த முறை ஓடிபியே இல்லாமலும் பணம் எடுக்க முடியும்.

மோசடி

மோசடி

இந்த முறையை பயன்படுத்தி மோசடியாளர்கள் அவரின் வங்கி கணக்கை சேவை செய்து அடுத்தடுத்து மூன்று முறை பணம் எடுத்துள்ளனர். மொத்தமாக ரூ.1,03,500 பணம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீனுவாசன் சைபர் கிராம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது போன்ற மெசேஜ்கள் வந்தால் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். அப்படியே தவிர கிளிக் செய்தாலும் அதில் எந்த வங்கி விவரங்களையும் கொடுக்க வேண்டாம் என்று புதுச்சேரி போலீசார் அறிவித்தி உள்ளனர்.

English summary
Bank fraud alert: A doctor lost 1 lakhs rupees after clicking a spam link in Puducherry.ஒரே ஒரு மெசேஜ் காரணமாக புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X