பிஇ,, பிடெக் மாணவர் சேர்க்கை.. இன்று முதல் பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் ஆரம்பம்.. அறிவிப்பு
சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று முதல் ஆரம்பமாகிறது.. தொடங்குகிறது. புதியதாக 4 பொறியியல் கல்லூரிகள் உட்பட தற்பொழுது 421 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று கலந்தாய்வு தொடங்கியிருக்கிறது. இன்று முதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே 7ந் தேதி முதல் ஜூன் 6ந் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.. அவர்களுக்கான தரவரிசைப் பட்டியலும் கடந்த ஜூன் 27 ந் தேதி வெளியிட்டப்பட்டது.

தரவரிசை பட்டியல்
இதையடுத்து, பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க 3,02,374 மாணவர்கள் பதிவு செய்தனர். அதில் பதிவுக்கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 2,50,298. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 40,645 கூடுதலாகும். நடப்பாண்டில் 2,41,641 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கிய கலந்தாய்வில், முதல்கட்டமாக முன்னாள் ராணுவ வீரரின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடந்தது.. ஜூலை 7 முதல் 11-ம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெற்றது. இதன் சிறப்புப்பிரிவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்த நிலையில், அதில் 994 இடங்களில் மட்டுமே நிரம்பின. இதில் 125 இடங்கள் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.
இன்று முதல் ஆரம்பம்
இதையடுத்து பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று 14ம் தேதி ஆரம்பமாகிறது.. இன்று முதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில் தரவரிசை அடிப்படையில் கல்வியியல் பிரிவில் 39,145 பேரும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு 2,662 பேரும், தொழிற்கல்விப் பிரிவில் 2,342 பேரும், அரசுப் பள்ளி மாணவர்கள் 524 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ஜூலை 17-ம் தேதி காலையில் வெளியிடப்படும். அதற்கு மறுநாள் (ஜூலை 18) மாலை 5 மணிக்குள் ஒப்புதல் அளித்து மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது வேறு கல்லூரி கிடைத்தால் ஏற்றுக் கொள்கிறேன் என்பதை பதிவு செய்யலாம்.
கலந்தாய்வு - உரிய வழிகாட்டுதல்
மேலும், இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 23-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.19-ம் தேதி முதல் 23 ஆம் தேதிக்குள் கல்லூரியில் மாணவர்கள் சேர வேண்டும். அனுமதி அளிக்கப்படும் மாணவர்களுக்கு 26-ம் தேதி காலை 10 மணிக்கு ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கலந்தாய்வின்போது விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதை உறுதிசெய்து இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி மாணவர்கள் செயல்பட வேண்டும் என்றும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org/ எனும் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம், மொத்தம் 3 சுற்றுகளாக பெறவுள்ள இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications