நீங்க கவனிச்சீங்களா.. வருமான வரி, தங்கம், மருந்து, வாகனம், காப்பீடு.. ஏப் 1 முதல் 5 மாற்றங்கள்!
சென்னை: ஏப்ரல் 1ம் தேதி முதல் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்துள்ள புதிய மாற்றங்களை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். புதிய வருமான வரி விகிதம், தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தனித்துவ குறியீடு எண் (HUID) கட்டாயம், அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவீதம் அதிகரிக்கும்.
50 சதவீத வரி விலக்கு ரத்தால் மின்சார வாகனங்களின் விலை உயரும், 5 லட்சத்திற்கும் கூடுதலாக ஆண்டு பிரீமியம் கொண்ட காப்பீடுகளுக்கு இனி வரி உண்டு, இந்த ஐந்து மாற்றங்களை நேற்று முதல் சந்தித்துள்ளீர்கள்.
சரி ஐந்து மாற்றங்களையும் கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம். முதலில் புதிய வருமான வரி விகிதம் குறித்து பார்ப்போம். தற்போது இந்தியாவில் தனிநபர் வருமான வரி விதிப்பில் பழைய முறை, புதிய முறை என 2 நடைமுறைகள் இருக்கிறது. இரு நடைமுறைகளிலும் ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது. ஏப்ரல் 1 முதல் புதிய வரி விதிப்பு முறையில் வருமான வரிச் சலுகை வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே 7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது.

6 விதமான வரி
அதேபோல் அறிய வேண்டிய முக்கியமான விஷயம் இதுதான்.. புதிய வரி விதிப்புமுறையில் 6 விதமான வரி விகிதங்கள் இருந்தது. இந்த நிதியாண்டில் அது 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்புமுறையில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதன்படி, ரூ.3 லட்சம் வரை வரி கிடையாது. ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை 5 சதவீதம், ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.15 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளளது,.

ஊதியதாரர்கள்
இதன்படி, ஒருவர் ஆண்டுக்கு ரூ.9 லட்சம் வருவாய் ஈட்டினால் அவர் ரூ.45,000 வரி செலுத்த வேண்டும். இதற்கு முன்பு இதே வருமான வரம்புக்கு ரூ.60,000 வரிசெலுத்த வேண்டி இருந்தது. தற்போதுவரி விகிதம் 25 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது.. ஒருவர் ஆண்டுக்கு ரூ.15 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டினால் அவர் ரூ.1.5 லட்சம் வருமான வரி செலுத்த வேண்டும். இதற்கு முன்பு இதே வருமான வரம்புக்கு ரூ.1,87,500 வரி விதிக்கப்பட்டது. தற்போது 20 சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் பெறுவோர், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு புதிய வரி விதிப்பு முறையில் அடிப்படை விலக்கு வழங்கப்பட்டுள்ளது,இதன்படி ஆண்டுக்கு ரூ.15.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் வருவாய் ஈட்டும் ஊதியதாரர்கள் ரூ.52,000 வரை சலுகை பெற முடியும். நாட்டில் தற்போது அதிக வருவாய் ஈட்டுவோருக்கு 42.74 சதவீத வருமான வரி விதிக்கப்படுகிறது. இது உலகின் மிக அதிக வருமான வரி விகிதங்களில் ஒன்று என்பதால், புதிய வருமான வரி விதிப்பில், அதிக வருவாய் ஈட்டுவோருக்கான கூடுதல் கட்டண விகிதம் 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிகபட்ச வரி விகிதம் 42.74 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு முதல் புதிய வரி விதிப்பை பிரதான நடைமுறையாக பின்பற்ற அரசு முடிவு செய்துள்ளது.. எனினும், பழைய முறையை விரும்புவோர் அதே நடைமுறையில் வரி செலுத்தலாம்.

தங்கம்
ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்க அனுமதி கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே நகைகளில் HUID எனப்படும் ஹால்மார்க் முத்திரை கண்டிப்பாக இருக்க வேண்டும். ஹால்மார்க் முத்திரை (HUID) என்பது 6 எண்கள் கொண்ட ஒரு குறியீடு. ஹால்மார்க் முத்திரை Assaying & Hallmarking centre என்ற இடத்தில் பதிக்கப்படும். நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நகைக்கான நம்பகத்தன்மை உருவாக்க முத்திரை அவசியம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இனிமேல் ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதை பார்த்து வாங்குங்கள்.

மருந்துகள் விலை உயரும்
ஏப்ரல் 1ம் தேதி முதல் அத்தியவசிய மருந்துகளின் விலை 12 சதவீதம் உயர்ந்துள்ளது. மருந்து நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட, மக்கள் அத்தியாவசியமாகப் பயன்படுத்தும் 384 மருந்துகளின் விலை, மற்றும் 900-க்கும் மேற்பட்ட மாறுபட்ட ஃபார்முலேஷன் கொண்ட மருந்துகளின் விலை உயர்ந்துள்ளது.

மின்சார வாகனம்
ஏப்ரல் 1 முதல் மின்சார வாகனங்களுக்கு அளிக்கப்பட்ட 50 சதவீதம் வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாக மின்சார வாகனங்கள் விலையும் உயருகிறது. 5 லட்சத்திற்கும் கூடுதலாக ஆண்டு பிரீமியம் கொண்ட காப்பீடுகளுக்கு இந்த நிதியாண்டு முதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே ஐந்து லட்சம் ரூபாய் அளவிற்கு ஒரே ஆண்டில் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டினால் அதற்கு கூடுதலாக பணம் செலுத்த வேண்டியதிருக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications