ரயில் ஸ்லீப்பர் கோச்களிலும் இனி படுக்கை வசதி, பெட்ஷீட் ரூ.20! தலைகாணி ரேட் இதுதான்.. ரூல்ஸ் சூப்பர்ல
சென்னை: ரயிலில் பயணிக்கும் பயணிகள், எந்தவிதமான அசௌகரியத்துக்கும் ஆளாகிவிடக்கூடாது என்பதற்காகவே, ரயில்வே நிர்வாகம் ஏராளமான வசதிகளை செய்து தந்து வருகிறது. அந்தவகையில், ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கான புதிய சேவையை தற்போது அறிமுகம் செய்துள்ளது.. அதாவது ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளிலும் இனி படுக்கை விரிப்பு வசதி கொண்டுவரப்பட உள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்வதென்ன தெரியுமா?
பொதுவாக, ரயில் பயணங்களில் ஏ.சி. வகுப்புகளில் மட்டுமே படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டு வந்தன.. நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள், தங்களுக்கும் படுக்கை விரிப்புகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வந்தனர்..

இந்த கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம், ஸ்லீப்பர் வகுப்பிற்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னை பிரிவில் ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகளை வழங்கும் சேவையை கொண்டுவந்துள்ளது.. ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்கும் பயணிகள், இனி பயணத்தின்போது சுகாதாரமான மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட படுக்கை விரிப்புகளைக் கட்டண அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்.
AC வசதி இல்லாத ஸ்லீப்பர் கிளாஸ்
முதற்கட்டமாக 10 ரயில்களில் படுக்கை விரிப்புகள் வழங்கும் வசதி செயல்படுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.. மேலும், ஜனவரி 1 முதல் ஏ.சி. ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகள் கட்டண அடிப்படையில் கிருமி நீக்கம் (Sanitized) செய்யப்பட்ட படுக்கை விரிப்புகளை கோரலாம்..
அதாவது படுக்கை விரிப்புகள் கோரும் பயணிகள், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி, இந்த கிருமி நீக்கம் செய்யப்பட்ட விரிவுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.. அப்படியனால் விரிப்பு, கம்பளி, தலையணை, கை துண்டு போன்றவை இந்த விரிவுத்தொகுப்பில் அடங்கும் என தெரிகிறது.
தலையணை ரூ.30, பெட்ஷீட் ரூ.20
அந்த சேவை குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "AC வசதி இல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்கும் பயணியருக்கு, முதல்முறையாக படுக்கை விரிப்பு வசதி, சென்னை ரயில் கோட்டத்தில் வரும் ஜனவரி முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.. இது ரயில்வேயில் முன்னோடி திட்டமாகும்.. பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் ரிசர்வ் செய்யும்போதே இந்த வசதியையும் பெற்றுக் கொள்ளலாம்..
இந்த படுக்கை வசதி தேவை என்றால், அதற்குரிய ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.. அல்லது ரயிலில் பயணிக்கும்போது, உரிய கட்டணம் செலுத்தி, படுக்கை விரிப்புகளை பெற்றுக் கொள்ளலாம். இதில் படுக்கை விரிப்பு, தலையணைக்கு, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தலையணைக்கு மட்டும் 30 ரூபாய், படுக்கை விரிப்பு மட்டும், 20 ரூபாய் என்றும் வசூலிக்கப்படும்..
10 ரயில்களில் வசதி
முதல் கட்டமாக, நீலகிரி, மங்களூரு, மன்னார்குடி, திருச்செந்துார், பாலக்காடு, சிலம்பு, நாகர்கோவில், ஆலப்புழா, திருவனந்தபுரம் உள்பட, 10 ரயில்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது...
ரயில்வே கட்டண உயர்வை தவிர, மாற்று வழிகளில் வருவாய் பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சேவை பேருதவியாய் இருக்கும். அந்தவகையில், இப்புதிய சேவையினால், ரயில்வேக்கு வருடந்தோறும் 28.27 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் இந்த புதிய அறிவிப்பானது பயணிகளுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications