இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தில் பாஜக சூப்பர் அதிரடி.. முதியோர்கள் ஹேப்பி! சபாஷ் ஆயுஷ்மான் பாரத்
சென்னை: தமிழகத்தில் 65 வயதுக்கு உட்பட மூத்த குடிமக்களுக்கு, ரேஷன் பொருட்களை நேரடியாக வழங்கும் திட்டத்தை, கடந்த ஆகஸ்ட் மாதம் துவக்கியிருந்தது.. இந்த திட்டத்தின் கீழ், ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்குவதால், முதியோருக்கு சிரமம் குறைந்துள்ளது. இதே பாணி யுக்தியை பாஜகவும் கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக பாஜகவின் வியூகம் வேகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டிலுள்ள எல்லா குடிமக்களுக்கும் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்கத்திற்காகவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம்தான், ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டம் (Ayushman Bharat Health Insurance Scheme) ஆகும்.

ரூ.5 லட்சம் காப்பீட்டு திட்டம்
ஆயுஷ்மான் பாரத் பிரதார் ஜன் ஆரோக்கியா திட்டத்தில், குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.. இதன்மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். உலகிலேயே மிகப்பெரிய, அரசால் முழுவதுமாக மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டம் இதுவாகும்,.
மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு (inpatients) இந்த சலுகை வழங்கப்படுகிறது.. குறிப்பாக, கேன்சர், சர்க்கரை நோய், நீரிழிவு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உட்பட 26 பிரிவுகளில் 1669 மருத்துவ முறைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
யார் யாருக்கு கிடைக்காது
எனினும், இரு சக்கரம், மூன்று சக்கர வாகனம் அல்லது கார் போன்ற வாகனங்களை சொந்தமாக வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்கள், மாத வருமானம் ரூ.10,000க்கு மேல் உள்ளவர்கள், விவசாய இயந்திரங்கள், உபகரணங்கள், சொந்த வீடு, கிசான் அட்டை வைத்திருப்பவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலமுள்ள விவசாயிகள், வீடுகளில் ஏசி, லேண்ட்லைன் போன் வைத்திருப்பவர்கள் இந்த அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது.
மற்றபடி 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், இத்திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெறலாம்.
வீடு வீடாக சென்று உதவும் பாஜகவினர்
இந்நிலையில் தமிழகத்துக்கு விரைவில் தேர்தல் வரப்போகிறது.. ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு தேர்தல் யுக்திகளையும், வாக்காளர்களை கவருவதற்கான முயற்சியிலும் இறங்கி உள்ளனர்.
அந்தவகையில் பாஜகவும் மும்முரமாகி உள்ளது.. இதில், தமிழக பாஜக சார்பில், மத்திய அரசின் திட்டங்களை, மக்களிடம் சேர்க்கும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.. அந்தவகையில், முதியோரின் வீடுகளுக்கே சென்று, அவர்களை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கும் பணியில், பாஜகவினர் ஈடுபட்டுள்ளார்களாம்.
சென்னையில் வீடு வீடாக, லேப்டாப்புடன் பாஜகவினர் சென்று, காப்பீடு, ஆதார் சேவைகளைப் பெற உதவி வருகிறார்கள்..
பிரதமரின் காப்பீட்டு திட்டம்
இது குறித்து, தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, ''அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் முதியோர் சிரமமின்றி, பிரதமரின் காப்பீட்டு திட்டத்தை பெற, வீடுகளுக்கே சென்று, காப்பீடு எடுத்து தரப்படுகிறது.
மறுநாளே, காப்பீடு அட்டை தயாரானதும் எடுத்து சென்று வழங்கப்படுகிறது. ஆதார் சேவை, காப்பீடு சேவை தொடர்பாக பாஜகவினரை மக்கள் தொடர்பு கொண்டால், வீடுகளுக்கே சென்று, அந்த சேவைகளை பெற உதவி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான்












Click it and Unblock the Notifications