ரூ.1000-க்குள் சிறந்த கிரெடிட் கார்டுகள்! இந்த 6 கார்டுகளில் 2 லைஃப்டைம் ஃப்ரீ, அம்சங்களும் சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரெடிட் கார்டு இன்றைய காலகட்டத்தில் நம்முடைய அவசர தேவைகளுக்கும் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கும் முக்கியமான நிதி ஆயுதமாகவே மாறிவிட்டது. ஆனால், அதை பயன்படுத்தத் தெரியாமல் கடன் வலையில் சிக்கி தவிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.. அதனால் கிரெடிட் கார்டு நமக்கு வழங்கும் நன்மைகள் என்ன, அதை பயன்படுத்தும்போது நாம் எந்தெந்த விஷயங்களில் மிகவும் அலர்ட்டாக இருக்க வேண்டும் என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

கிரெடிட் கார்டு என்பது வங்கிகள் நமக்கு கொடுக்கும் ஒரு தற்காலிகக் கடன் அட்டை என்றே சொல்லலாம்.. அவசர தேவைக்கு கையில் பணம் இல்லாதபோது, கை கொடுத்து உதவக்கூடியது.. எனவே, சரியான முறையில் பயன்படுத்தினால் இதில் பல நன்மைகள் உள்ளன.

Credit Cards Personal Finance Lifetime Free Credit Card Annual Fee Cashback Credit Card Amazon Pay ICICI IDFC FIRST Bank SBI Card Axis Bank HDFC Bank

கிரெடிட் கார்டுகள் நன்மைகள்

கிரெடிட் கார்டுகளை பொறுத்தவரை, இது நமக்கு தரும் பணப் பாதுகாப்பு. பாக்கெட்டில் நிறைய பணத்தை வைத்து கொண்டு, பயந்து அலைய வேண்டிய அவசியமில்லை.. ஆன்லைன் மூலமாகவோ அல்லது கடைகளிலோ எளிதாக பொருட்களை வாங்க முடியும்.

இரண்டாவதாக, வட்டி இல்லாத அவகாசம் இதில் உண்டு.. நாம் கார்டு மூலம் செலவழிக்கும் பணத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டியதில்லை. வங்கிகள் 45 முதல் 50 நாட்கள் வரை வட்டி இல்லாமல் அவகாசம் தருகின்றன. அதற்குள் நாம் சம்பளம் வந்தவுடன் அந்த பணத்தை திருப்பி கட்டிவிட வேண்டும்..

கிரெடிட் அட்டைகளின் வசதிகள்

மூன்றாவதாக, ரிவார்டுகள் மற்றும் தள்ளுபடிகள். பெரிய கடைகளில் அல்லது ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் கேஷ்பேக் எனப்படும் பணம் திரும்பப் பெறுதல் சலுகை அல்லது ஸ்பெஷல் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. அதைவிட முக்கியமாக எமர்ஜென்சி செலவுகளுக்கு கையில் உடனடியாக பணம் இல்லாதபோது, இந்த கிரெடிட் கார்டு மிகப்பெரிய பாதுகாப்பாக செயல்படுகிறது.

இப்படி கிரெடிட் கார்டில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், நாம் கொஞ்சம் அலர்ட்டாகவே வேண்டும். கவனக் குறைவாக இருந்தால் இது ஒரு பெரிய கடனில் கொண்டுபோய் விட்டுவிடும்.

மாத கடைசியில் வரும் பில்

நம்முடைய அக்கவுண்ட்டில் பணம் இருக்கும்போதுதான் நம்மால் செலவு செய்ய முடியும். ஆனால் கிரெடிட் கார்டில் வங்கி நமக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாக அனுமதித்திருக்கும். கையில் பணம் இல்லாவிட்டாலும் வாங்கலாம் என்ற எண்ணம், தேவையற்ற செலவுகளுக்கு நம்மை தூண்டிவிடும்.

அதுமட்டுமில்லாமல், மாத கடைசியில் வங்கியிடமிருந்து பில் வரும்போது மொத்த தொகையையும் கட்ட சொல்லாமல், குறைந்தபட்சத் தொகை என்ற பெயரில் ஒரு சிறிய தொகையை கட்டச் சொல்வார்கள். பாமர மக்கள் பலரும் இதைத்தான் கட்ட வேண்டும் என்று நினைத்து ஏமாந்து விடுகிறார்கள். நீங்கள் அந்த சின்ன தொகையை மட்டும் கட்டினால், மீதி தொகைக்கு வங்கி மிக அதிக அளவிலான வட்டியை விதிக்கும்.

அடுத்ததாக, கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து, அவசரத்திற்குக்கூடப் பணம் எடுக்கக் கூடாது. அப்படி எடுத்தால், எடுத்த அடுத்த நொடியில் இருந்தே அதற்கு வட்டியும் அபராதமும் விதிக்கப்படும்.


கிரெடிட் கார்டு கட்டணம்

ஆனால், இங்கு முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், எல்லா கிரெடிட் கார்டுகளும் ஒரே மாதிரி இருக்காது. சில கார்டுகளுக்கு வருஷந்தோறும் 500 ரூபாய் அல்லது 999 ரூபாய் போன்ற ஆண்டு கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், ஒரு ஆண்டில் குறிப்பிட்ட அளவு தொகையை மட்டும் நாம் செலவு செய்தால் அந்தக் கட்டணத்தையும் வங்கிகள் தள்ளுபடி செய்து விடும்.

அதேசமயம், சில கிரெடிட் கார்டுகள் வாழ்நாள் முழுவதும் எந்த ஆண்டு கட்டணமும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதனால் கிரெடிட் கார்டைத் தேர்வு செய்வதற்கு முன்பு, அதன் ஆண்டு கட்டணம் என்ன, அது எந்த நிபந்தனையில் தள்ளுபடி செய்யப்படுகிறது, சலுகைகள் அதில் கிடைக்கிறதா என்றெல்லாம் கவனமாக பார்த்து முடிவு செய்வது நல்லது.

குறைவான கட்டணத்தில் பெஸ்ட் 6 கார்டுகள்

இதை பற்றிதான், சமீபத்தில் லைவ் மின்ட் ஆங்கில ஊடக செய்தியில் விரிவாக தரப்பட்டிருந்தது.. சந்தையில் 1000 ரூபாய்க்கு குறைவான கட்டணத்தில் சிறந்த 6 கார்டுகள் கிடைக்கின்றன. முதலாவதாக அமேசான் பே ஐசிஐசிஐ கார்டு மற்றும் 2வதாக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் மில்லினியா கார்டு ஆகிய இரண்டுமே வாழ்நாள் முழுவதும் கட்டணமே இல்லாத கார்டுகளாகும்.

3வதாக வரும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கார்டு 500 ரூபாய் கட்டணத்துடன் வந்தாலும், வருடத்தில் 3.5 லட்சம் செலவழித்தால் கட்டண விலக்கு அளிக்கிறது. 4வதாக, 999 ரூபாய் கட்டணம் கொண்ட எஸ்பிஐ கேஷ்பேக் கார்டு, வருடத்தில் 2 லட்சம் செலவழித்தால் புதுப்பித்தல் கட்டணத்தைத் தள்ளுபடி செய்கிறது

இது வரப்பிரசாதமே

5வதாக ஆக்சிஸ் வங்கி ஏஸ் கார்டு 499 ரூபாய் கட்டணத்துடன் கிடைக்கிறது, இதிலும் 2 லட்சம் செலவில் கட்டண விலக்கு உண்டு. 6வதாக, எச்டிஎஃப்சி மணிபேக் பிளஸ் கார்டு 500 ரூபாய் கட்டணத்தைக் கொண்டிருந்தாலும், வருடத்தில் வெறும் 50,000 ரூபாய் செலவழித்தாலே அந்தக் கட்டணத்தை முழுமையாகத் தள்ளுபடி செய்து விடுகிறது.

சுருக்கமாக சொன்னால், கிரெடிட் கார்டு என்பது ஒரு கூர்மையான கத்தி போன்றது. அதை நாம் கையாளும் முறையில்தான் இருக்கிறது. வாங்கிய கடனை மாதந்தோறும் சரியான தேதியில் முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வழக்கத்தை கடைப்பிடித்தால், கிரெடிட் கார்டு நமக்கு ஒரு வரப்பிரசாதமே..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+