பஸ் ஸ்டிரைக்... ஆப்சென்ட் போட்டு சம்பளப்பிடித்தம் செய்வோம் - அமைச்சர் ராஜ கண்ணப்பன் எச்சரிக்கை
வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயலாகும்; பணிக்கு வருகை தரவில்லை எனில் ஆப்செண்ட் மார்க் செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயலாகும்; பணிக்கு வருகை தரவில்லை எனில் ஆப்செண்ட் மார்க் செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல்" "தேசிய பணமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல்" உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பா.ஜ.க. அரசிற்கு தங்களது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக நடத்தப்படும் இந்த அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முழு ஆதரவு வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருந்தார்.

பொது வேலை நிறுத்தம்
இந்நிலையில் மார்ச் 28 மற்றும் 29 ல் அகில இந்திய அளவில் பொது வேலைநிறுத்தத்தின் போது போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்செண்ட் போடப்படும்
வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயலாகும்; பணிக்கு வருகை தரவில்லை எனில் ஆப்செண்ட் மார்க் செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.

மார்ச் 28,29ல் லீவ் கேன்சல்
மார்ச் 28, 29ல் தொழிற்சங்க ஸ்ட்ரைக்கில் ஈடுபட உள்ள நிலையில், ஊழியர்கள் விடுமுறை எடுக்க அனுமதி கிடையாது என்றும் ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகளும் ரத்து எனவும் மதுரை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

பாரத் பந்த் 2022
மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல் உள்ளிட்ட தொழிலாளர் நல விரோத அரசாக இருக்கும் மத்திய பாஜக அரசிற்கு தங்களது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் அகில இந்திய பொது வேலை நிறுத்தப்போராட்டம் அறிவிக்கப்ட்டுள்ளது. இந்த நிலையில், போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications