இளையராஜா மகள் பவதாரணி மரணம்! என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்.. பாரதிராஜா கண்ணீர் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணியின் இறப்புக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இளையராஜாவுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்களது குடும்பமே இசை குடும்பம். பவதாரணியும் பின்னணி பாடகிதான். ஒளியிலே பாடலை அவர் பாடிய விதம் அனைவரையும் ஈர்த்தது.

Bharathiraja expresses his condolence for Ilayaraja daughter bhavatharani demise

அது போல் மயில் போல பொண்ணு ஒன்று என்ற பாடலும் மயங்க வைத்தன. 47 வயதாகும் பவதாரணிக்கு கடந்த 5 மாதங்களாக கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று மாலை 5.20 மணிக்கு இலங்கையில் சிகிச்சை பலனின்றி பவதாரணி உயிரிழந்தார். அவருடைய உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

இதுகுறித்து பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: என் நண்பனுக்கு
எப்படி ஆறுதல் சொல்வேன்.. மகள் பவதாரிணியின் மறைவு, எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.

Bharathiraja expresses his condolence for Ilayaraja daughter bhavatharani demise

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்: "இசையமைப்பாளர் இளையராஜா மகளும்,பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணி உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். தனது இனிமையான குரல் வளத்தால் பல இசை ரசிகர்களை கவர்ந்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதோடு சகோதரி பவதாரணியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல்: "இசைஞானி இளையராஜா மகளும், திரைப்பட பின்னணி பாடகியுமான, பவதாரணியின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

வானதி ஸ்ரீனிவாசன் இரங்கல்: "இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+