• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அரச கிரீடம்... அசுர கிரீடம் - பிக்பாஸ் வீட்டில் கலகல... அனிதாவுக்கு பலமுனை எதிர்ப்பா இருக்கே

|

சென்னை: அதென்னவோ தெரியலை ஆரம்பத்தில் இருந்தே அனிதாவை எல்லோரும் எதிரியாகவே பார்க்க ஆரம்பித்து விட்டனர். ஷிவானிக்கும் அனிதாவிற்கு தீராத பகையாக நீடிக்கிறது. பிக் பாஸ் வீட்டில் சனிக்கிழமை கமலால் நடத்தப்பட்ட கேமில் அனிதாவை, நீங்க ரொம்ப கோவப்பட்றீங்க என கூறியதைக் கேட்டதிலிருந்தே ஷிவானியின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் அனிதா. கேபிக்கு இப்போது அனிதா வேண்டாதவராகவே இருக்கிறார்.

சுரேஷ், வேல் முருகனிடம் கார்னர் செய்வது கமல் பேசும் போது அனிதா கை தூக்கி, தற்போதைய நாட்களில் எனக்கு தோன்றிய விசயம் ஓபன் டாஸ்க்கில் நான் ஒருத்தர குத்தினா அவங்க திரும்ப எல்லாத்துலயுமே தொடர்ந்து என்னையே குத்திக்கிட்டு இருக்குற மாதிரி இருக்கு என கூறினார்.

அதைக்கேட்ட கமலின் முக பாவனைகள் நீங்க குத்தினா திரும்ப குத்ததான செய்வாங்க என்பது போல முக பாவத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அனிதா பேசிவிட்டு அமர்ந்த உடன் போட்டியாளர்களின் மனச்சோர்வை போக்க கமல் ஒரு கேமை விளையாட ஸ்டோர் ரூமில் இருந்து பொருட்களை எடுத்து வர சொன்னார். அதில் அரச கிரீடமும், அரக்க கொம்புகள் வைத்த கிரீடமும் இருந்தது.

கர்நாடக இசைக்கலைஞர் 'பிக்பாஸ் நைனா' மோகன் வைத்யா பாஜகவில் இணைந்தார்

யார் அரசர் யார் அசுரர்

யார் அரசர் யார் அசுரர்

அரச கிரீடத்தை தங்களின் மனதிற்கு பிடித்த ராஜா அல்லது ராணியாக இருக்கிறார் என கூறி சூட்ட வேண்டும் அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும். அதே சமயம் பிக்பாஸ் வீட்டில் ஒருவர் எவ்வளவு நல்ல விசயங்களை செய்திருந்தாலும், எனக்கு ஒவ்வாத குணாதிசயம் உடையவர் என அரக்கர்களின் கொம்பு கிரீடத்தை மனதிற்கு பிடிக்காதவர்களுக்கு சூட்டி அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும் என்று இருந்தது.

சுரேஷின் அசுரன் பாலா

சுரேஷின் அசுரன் பாலா

சுரேஷ், ராணி கிரீடத்தை ரம்யாவுக்கும், அசுரக் கிரீடத்தை பாலாவுக்கும் கொடுத்தார். ஆஹா இன்னும் சண்டை ஓயலை போலயே என்று பார்வையாளர்கள் நினைக்க, பல அசுரர்கள் யாகம் பண்ணி நல்லவங்களா மாறிட்டாங்க. அதுபோல பாலாவும் மாறணும் என்று பஞ்ச் வைத்தார் சுரேஷ்.

ஷிவானிக்கு அசுர கிரீடம் சூடிய அனிதா

ஷிவானிக்கு அசுர கிரீடம் சூடிய அனிதா

அனிதா தனது கையில் இருந்த அரச கிரீடத்தை தான் தனியாக இருக்கும் நேரங்களில் அவருக்கு ஆறுதலாக இருந்ததாக கூறி ரியோவிற்கு சூட்டினார். தொடர்ந்து அனிதா, அரக்க கொம்பு கிரீடத்தை ஷிவானிக்கு சூட்டி, அதற்கான காரணமாக ஷிவானியை எல்லோரும் குழந்தை மாதிரி இருக்காங்கன்னு சொல்றாங்க ஆனா குழந்தை கிட்ட இல்லாத பழி வாங்குகிற இயல்பு அவங்ககிட்ட இருக்கு என்று சொன்னார்.

ஷிவானியின் அரக்கி அனிதா

ஷிவானியின் அரக்கி அனிதா

ஷிவானி தனது அசுர கிரீடத்தை அனிதாவுக்குச் சூட்டி பதில் மரியாதை செய்தார். அனிதாவிற்கு அரக்க கொம்புகளை சூட்டிய ஷிவானி, அதற்கான காரணமாக உண்மையாகவே அனிதா செய்கின்ற விசயங்கள் எனக்கு எரிச்சலாக இருப்பதினால் தான் நான் அவரோட பெயரை கூறியிருக்கிறேன். இப்பவும் அதை பழிவாங்குவதாக நினைத்தால் அது அவரின் தனிப்பட்ட கருத்து, அதை மாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று நான் நினைக்கிறேன் என்று சொன்னார். சம்யுக்தாவுக்கு ராணி கிரீடத்தை சூட்டினார் ஷிவானி.

என்னை டார்கெட் செய்வது ஏன்

என்னை டார்கெட் செய்வது ஏன்

அனிதா பேசும் போது, ஒரு டாஸ்கில் என் மனசில் பட்டதினால் நான் ஷிவானியின் பெயரை சொன்னேன். அதற்காக அவர் என்னை எப்பவுமே எல்லாத்துலையும் வொர்ஸ்ட் கேட்டகரியில் கூறி என்னையே டார்கெட் பண்ற மாதிரி இருக்கு என அனிதா கூற அதற்கு ஷிவானி ஏதோ தேவையில்லாததை எல்லாம் பேசுகிறார் என்ற முகபாவனையை காட்டி அதை பொருட்படுத்தாதவறாக அமர்ந்திருந்தார்.

பழிக்கு பழி வாங்கல்

பழிக்கு பழி வாங்கல்

அனிதாவின் பேச்சுக்கு பதில் சொன்ன கமல், நீங்கள் இப்பொழுது செய்வதும் ஏற்கனவே நடந்த ஒன்றிற்கான பழிவாங்கல் ஆகத்தானே இருக்கிறது. நீங்க மட்டும் என்ன "பெரிய கொம்பா" என்கிற மாதிரியல்லவா இருக்கிறது என்று சொல்ல, அதை மற்ற போட்டியாளர்கள் கரகோசம் எழுப்பி ஏற்றுக் கொண்டனர்.

அனிதாவுக்கு பலமுனை எதிர்ப்பு

அனிதாவுக்கு பலமுனை எதிர்ப்பு

கேப்ரில்லா அரசு கிரீடத்தை அனைவரும் கணித்ததைப் போல பாலாவுக்குச் சூட்டினார். அசுர கிரீடத்தை அனிதாவுக்குச் சூட்ட, அவரது முகம் இறுகியது. இதிலிருந்து அறியப்படும் நீதி, அனிதாவை ஷிவானிக்கு மட்டுமல்ல கேபிக்கும் பிடிக்கலை போல இருக்கே... பிக்பாஸ் வீட்டில் பலமுனை எதிர்ப்புகளை சம்பாதித்து வைத்திருக்கிறார் அனிதா என்றே தெரிகிறது. இருக்கும் நாட்களை எப்படி சமாளிக்கப் போகிறாரோ தெரியலையே.

 
 
 
English summary
From the very beginning, everyone began to see Anita as an enemy. Shivani and Anita remain at loggerheads. Anita is furious with Shivani after hearing that Anita, who was played by Kamal at the Bigg Boss house on Saturday, told her to be very angry.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X