பிக்பாஸ் 7: காலில் விழும் கலாசாரம்- சரமாரியாக ஏற்ற கமல்ஹாசன்.. 'அட்வைஸ்' எல்லாம் ரொம்ப மிஸ்ஸிங் சாரே!
சென்னை: பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாசன் (கமல்ஹாசன்) (கமல்) போட்டியாளர்கள் காலில் விழுந்து வணங்குவதை ஒருவித தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டது ஆச்சரியம் தந்தது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 இன்று தொடங்கியது. இதன் பிரம்மாண்ட தொடக்க விழாவில் ஒவ்வொரு போட்டியாளர்களையும் ' தமிழ் கூறும் நல்லுலக'த்துக்கு அறிமுகம் செய்து வைத்தார் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன்.

பொலிட்டிக்கல் டச்: பொதுவாக கமல்ஹாசனின் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் பொலிட்டிக்கல் டச் கொடுப்பார். பொடி வைத்து அரசியல் நையாண்டிகளை தூவி விடுவதில் கமல்ஹாசன் வல்லவர். பிக்பாஸ் நிகழ்ச்சிகளை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் போது, அவர் பேசும் அரசியல் நெடி வசனங்கள், வீச்சுகள் 'தலைப்புச் செய்தி'களாகி இருக்கின்றன.
கன்னத்தில் அறைந்த கமல்ஹாசன்: அதுவும் குறிப்பாக காலில் விழும் கலாசாரத்துக்கு எதிராக கர்ஜிப்பவர் நடிகர் கமல்ஹாசன். 6 ஆண்டுகளுக்கு முன்னர் ரசிகர் ஒருவர் பொதுவெளியில் கமல்ஹாசன் காலில் விழுந்ததால் ஓங்கி அறையே விட்டது அப்போது பேசு பொருளானது.
காலில் விழ எதிர்ப்பு: பிக்பாஸில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரிக்கும் பாலாஜிக்கும் பிக்பாஸில் பஞ்சாயத்து வெடித்தது. அப்போது கமல்ஹாசன் பேசுகையில், காலில் விழும் கலாசாரத்தை ஒழிக்கத்தான் நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.. நீங்கள் கை குலுக்கி மன்னிப்பு கேட்டு கொள்ளலாம். கொரோனா காலம் என்பதால் தள்ளி நின்று கூட மன்னிப்பும் கேட்டு கொள்ளுங்கள் என அறிவுரை எல்லாம் அள்ளி வீசினார்.
அதிமுக மீதான விமர்சனம்?: அப்போது, காலில் விழும் கலாசாரத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அண்ணா திமுகவினரைத்தான் கமல்ஹாசன் இப்படி சாடுகிறார் என்கிற ஒரு பார்வையும் முன்வைக்கப்பட்டது.
காலில் விழும் கலாசாரத்தை ஏற்கிறாரா?: இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தொடக்க விழா நடைபெற்றது. இதில் போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். தொடக்கத்தில் வந்த கூல் சுரேஷ் முதல் ஒவ்வொரு போட்டியாளருமே தவறாமல் கமல்ஹாசன் காலில் விழுந்தனர். அவர்களை கமல்ஹாசன் தடுத்தார்தான்.. ஆனால் கடந்த காலங்களைப் போல அல்லாமல் இம்முறை ஒருவகையில் இந்த காலில் விழும் போக்கை ஏற்றுக் கொள்ளவும் செய்தார் கமல்ஹாசன் என்றுதான் பார்வையாளர்கள் மனதில் பட்டிருக்கிறது.
அந்த அரசியல் நெடி?: அத்துடன் எப்போதும் வீசக் கூடிய அரசியல் பொடிமாஸ் வாடை, அரசியல் நக்கல் பட்டாசுகள் ஏனோ கமல்ஹாசனிடம் இருந்து இல்லாமல் இருந்தது 'வரத்து' இல்லாத நீர்வீழ்ச்சி போல வெறுமையை வெளிப்படுத்தியது என்பதையும் சொல்லித்தானே ஆக வேண்டும். சொல்ல வந்ததை வெளிப்படையாக சொல்லிடனும்தானே நடிகர் கமல்ஹாசன் சார்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications