அடித்து ஆடும் சேகர் பாபு.. கோவில் செல்பவர்களுக்கு மிக முக்கிய செய்தி.. என்னென்னலாம் வருது பாருங்க!
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.80.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் இருக்கும் டாப் அமைச்சர்களில் ஒருவராக சேகர் பாபு பார்க்கப்படுகிறார். இந்த துறையில் இவரின் பணிகள் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே சேகர்பாபு பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கோவில்களை புதுப்பிப்பது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, அன்னதானம் திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதோடு கோவில் நிலங்கள் கடந்த 4 மாதங்களில் ஏக்கர் கணக்கில் மீட்கப்பட்டு உள்ளது. பல லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. கோவில் சொத்துக்கள், நிலங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முறையாக இணையத்திலும் பதிவேற்றப்பட்டு வருகிறது. அனைத்து கோவில் சொத்து விவரங்களும் இணையத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
கோவில் சொத்துக்கள் அனைத்தும் இணைத்ததில் பதிவேற்றப்படும் என்று ஏற்கனவே சேகர் பாபு அறிவித்து இருந்தார். அதன்படியே கோயிகளுக்கு சொந்தமான 3,43,647 ஏக்கர் நிலங்கள் தொடர்பான விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டது.
முக்கிய அறிவிப்பு: இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.80.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.08.2023) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 80 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயில்களில் கட்டப்படவுள்ள திருமண மண்டபம், திருக்குளப் பணிகள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகம், தடுப்புச் சுவர்கள், முடிகாணிக்கை மண்டபம், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம். உணவருந்தும் கூடம், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரி ஆய்வகங்கள் போன்ற புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்து சமய அறநிலையத்துறை அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்ட செயலாக்கம், 866-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்பு, அன்னதானத் திட்டம் விரிவாக்கம், மலைத் திருக்கோயில்கள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள், புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம், ஒருகால பூஜை திட்டம் விரிவாக்கம், துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருவதோடு, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளும் தொடர்ந்து நிறைவேற்றபட்டு வருகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுநாள்வரை 6,962 திருக்கோயில்களில் 3,373 கோடி ரூபாய் செலவில் 9,294 திருக்கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் - தேக்கம்பட்டி, அருள்மிகு வனபத்ர காளியம்மன் திருக்கோயிலில், 14.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்று பிரகார மண்டபம், நடைபாதை மண்டபம், சுற்றுச்சுவர் மற்றும் முடிகாணிக்கை மண்டபம் அமைக்கும் பணிகள்; மதுரை மாவட்டம்- திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தெப்பக் குளத்தையொட்டி தடுப்புச் சுவர் அமைத்தல் மற்றும் கந்த சஷ்டி மண்டபம் கட்டும் பணிகள்;
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு. அருள்மிகு தேவி - கருமாரியம்மன் திருக்கோயிலில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் காத்திருக்கும் கூடம், உணவருந்தும் கூடம் கட்டும் பணிகள்:
சேலம் மாவட்டம் மேச்சேரி, அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் 4.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி, உணவருந்தும் கூடம் மற்றும் செயல் அலுவலர்கள் குடியிருப்பு கட்டும் பணிகள்; சென்னை பள்ளிக்கரணை, அருள்மிகு வீரத்தம்மன் திருக்கோயிலில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி: புதுக்கோட்டை மாவட்டம் - நார்த்தாமலை, அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயிலில் 3.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி: தஞ்சாவூர் மாவட்டம் - தாமரங்கோட்டை. அருள்மிகு கண்டேஸ்வரர் திருக்கோயிலில் 3.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி; திருவள்ளூர் மாவட்டம் - சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 3.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குளத் திருப்பணி; கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், அருள்மிகு - திருவிக்ரம சுவாமி திருக்கோயிலில் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 தெப்பக்குளம் மற்றும் தீர்த்தக்குளங்களை சீரமைத்து நீராழி மண்டபம் கட்டும் பணி:
கடலூர் மாவட்டம் சிதம்பரம், அருள்மிகு தில்லையம்மன் திருக்கோயிலில் 2.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குளம் மேம்படுத்தும் பணி; சென்னை சைதாப்பேட்டை, அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயிலில் 2.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர், அருள்மிகு - அங்காளம்மன் திருக்கோயிலில் 1.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி; திருவாரூர் மாவட்டம் - வலங்கைமான், அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயிலில் 1.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்காணிக்கை மண்டபம் மற்றும் பக்தர்கள் இளைபாறும் மண்டபம் கட்டும் பணி; திருச்சிராப்பள்ளி மாவட்டம் - குமாரவயலூர். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 1.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன் மண்டபத்தை சீரமைக்கும் பணி:
சென்னை திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி 1 திருக்கோயில் சார்பில் 8.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள்: மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் 1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அன்னதானக் கூடம் கட்டும் பணி; நாகப்பட்டினம் மாவட்டம் - சிக்கல், அருள்மிகு நவநீதேஸ்வர சுவாமி திருக்கோயிலில் 1.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி;
கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூர், அருள்மிகு காளிகாம்பாள் காமாட்டீஸ்வரர் திருக்கோயிலில் 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மலர் வணிக வளாகம் கட்டும் பணி; திண்டுக்கல் மாவட்டம் - பழனி, அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 5.52 மதிப்பீட்டில் ஆய்வகங்கள் கட்டும் பணி; கோடி ரூபாய்
என மொத்தம் 80 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications