சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரவெடி.. இனிமே தப்ப முடியாது.. ரேஷன் கடைகளுக்கு அரசு பிறப்பித்த மாஸ் உத்தரவு.. வருகிறது QR கோட்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு திருட்டை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் பொருட்கள் அடிக்கடி திருடப்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு செல்ல வேண்டிய பொருட்களை சிலர் திருடி அண்டை மாநிலங்களில் விற்று வருகிறார்கள்.

முக்கியமாக கேரளா, ஆந்திராவில் அதிக விலைக்கு இந்த பொருட்களை விற்பனை செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சமீபத்தில் கூட அரிசி பற்றாக்குறை புகார் வந்தால், 24 மணி நேரத்தில் இதில் பறக்கும்படை ஆய்வு செய்ய வேண்டும். அரிசி திருடப்பட்டுள்ளதா என்பதை மண்டல அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரம்தான்! ரேஷன் கடைகளுக்கு பறந்த சுளீர் உத்தரவு! மக்களுக்கு ஸ்வீட் நியூஸ் சொன்ன தமிழக அரசு24 மணி நேரம்தான்! ரேஷன் கடைகளுக்கு பறந்த சுளீர் உத்தரவு! மக்களுக்கு ஸ்வீட் நியூஸ் சொன்ன தமிழக அரசு

ரேஷன்

ரேஷன்

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் திருட்டுகளை தவிர்க்க க்யூஆர் கோடு வசதியை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரிசி மூட்டைகள், சர்க்கரை மூட்டைகள், பருப்பு பாக்கெட்டுகள் அனைத்திலும் தமிழ்நாடு அரசின் முத்திரை இடம்பெறும். அதற்கு மேலே க்யூ ஆர் கோடு இடம்பெறும். இந்த க்யூ ஆர் கோடு உள்ள மூட்டைகளை யாரும் வாங்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாராவது திருடி வெளியே விற்றால் இதை வாங்க கூடாது.

விற்பனை

விற்பனை

அதோடு இதை விற்பவர்கள் பற்றி அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரிசி, நெல் திருட்டை தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டு இருக்கிறது. தமிழ்நாடு ரேஷன் கடைகள் கடந்த சில மாதங்களாக நவீனமயமாகி வருகிறது. முக்கியமாக ரேஷன் கடைகளில் தற்போது கணினி மூலம் பொருட்கள் இருப்பு குறித்து அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது..

ஆன்லைன்

ஆன்லைன்

ஆன்லைன் மூலமே கடைகள் திறந்து உள்ளதா இல்லையா என்பதை பார்க்க முடியும். அதோடு பொருட்கள் இருக்கிறதா இல்லையா என்பதை பார்க்க முடியும். இந்த நிலையில்தான் தற்போது அரிசி, பருப்பு திருட்டை தடுக்கவும் க்யூ ஆர் கோடு முறையை தமிழ்நாடு அரசு கையில் எடுத்து உள்ளது. நேற்றுதான் ரேஷன் பொருட்களை திருடி விற்கும் ஊழியர்களை உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பினார்.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

இவர்களை சஸ்பெண்ட் செய்வதோடு இல்லாமல் உடனடியாக அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் அவர்கள் ரேஷன் பொருட்களான அரிசி, சர்க்கரை தொடங்கி வேறு எந்த பொருட்களை திருடியது என்பது உறுதி செய்யப்பட்டாலும் அவர்களை நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதோடு அருகில் இருக்கும் கிடங்குகளில் உடனே ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வில் கடத்தப்பட்ட அரிசி, பருப்பை மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
BIG NEWS: Major announcement for Ration Shops to use QR codes to keep Rice and Sugar safe
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X