சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிகப்பெரிய தளர்வுகள்.. துணி, நகை, ஷாப்பிங் மால்களுக்கு அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை ; வகை 3ல் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகளை முதல்வர் மு.க,ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜவுளி கடைகள், நகைக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள முதல்வர், தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்றுப் பரவலின் அடிப்படையில், மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ள ஊரடங்கு 28-6-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் நோய்த் தொற்றுப் பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கை 5-7-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

வகை 3-ல் உள்ள மாவட்டங்களில் (சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்) ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

நகைக்கடைகள்

நகைக்கடைகள்

அனைத்து தனியார் நிறுவனங்கள், 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்துத் துணிக்கடைகள், குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து நகைக் கடைகள், குளிர்சாதன வசதி இல்லாமலும், 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

உணவு கூடங்கள்

உணவு கூடங்கள்

வணிக வளாகங்கள் (Shopping Complex / Malls) காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். எனினும், வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் அனுமதிக்கப்படும். திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.

திருவிழாக்கள் அனுமதியில்லை

திருவிழாக்கள் அனுமதியில்லை

கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். அர்ச்சனை, திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை. காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை விளையாட்டுப் பயிற்சிக் குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.

இபதிவு தேவையில்லை

இபதிவு தேவையில்லை

வகை - 2 மற்றும் 3-ல் உள்ள மாவட்டங்களில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளுடன், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவில்லாமல் செயல்பட அனுமதிக்கப்படும்.

100 சதவீதம் அனுமதி

100 சதவீதம் அனுமதி

மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர்.
அனைத்து அரசு அலுவலகங்கள், 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், தானியங்கி பணம் வழங்கும் (ATM) சேவைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

தொழிற்சாலைகள்

தொழிற்சாலைகள்

இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) மற்றும் அதன் செயல்பாடுகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதர தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

அருங்காட்சியகங்கள்

அருங்காட்சியகங்கள்

வீட்டு வசதி நிறுவனம் (HFCs) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), குறு நிதி நிறுவனங்கள் (MFIs) 50 சதவிகிதப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், குளிர் சாதன வசதி இல்லாமல், ஒரே நேரத்தில் 50% நபர்களுடன் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கமாகச் செயல்படும் நேரத்தில் அனுமதிக்கப்படும். அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+