Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வரை ரகசியமாக சந்திக்க போகிறாரா விஜய்? பரபரப்பு தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் பிகில் திரைப்படம் தொடர்பாக ரகசியமாக சந்திக்கக்கூடும் என தகவல்கள் உலா வருகின்றன. அரசியல் சர்ச்சைகள் இல்லாமல் பிகில் தீபாவளிக்கு வெளியாக வேண்டும் என விஜய் விரும்புவதால் இந்த சந்திப்பு நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அரசியல் ஆர்வத்தை அடிக்கடி திரைப்பட இசை வெளியிட்டு விழா மேடைகளில் வெளிப்படுத்தி வரும் விஜய் பிகில் பட இசை வெளியிட்டு விழாவில் ஆளும் கட்சியினரை தாக்கும் வகையில் பேசியிருப்பது அந்த கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் நடிகர் விஜய் மற்ற நடிகர்களை போல் அல்லாமல் சமூக ரீதியான பிரச்னைகளில் அதிக அளவு கருத்துகளை வெளிப்படையாக பேசுவதை வழக்கமாக வைத்து வருகிறார். அவரது படங்களிலும் அது போன்ற காட்சிகள் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது. இதனால் பாதிக்கப்படும் அரசியல் கட்சியினரால் அல்லது அமைப்புகளால் விஜய் படம் வரும் போது எல்லாம் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

தலைவாவில் தொடங்கி

தலைவாவில் தொடங்கி

கத்தி, தலைவா, துப்பாக்கி, மெர்சல், சர்கார் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அதிலும் கடைசியாக வெளியான சர்கார் படம் மறைந்த முன்னாள் முதல்வரின் இயற்பெயரை தாக்கும் வகையில் இருப்பதாக அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடியதால் பல திரையரங்குகளில் கட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட பின்னரே படம் ஓடியது. அதுமட்டுமின்றி படத்தின் கதையே முருகதாஸின் கதை இல்லை என்ற அளவுக்கு பிரச்னைகள் அப்போது விஸ்வரூபம் எடுத்தது.

விஜய் படங்கள் மோதல்

விஜய் படங்கள் மோதல்

இப்படி ஒவ்வொரு முறையும் ஆளும் அதிமுக அரசுடன் விஜய்யின் படங்கள் மோதலை சந்தித்த நிலையில் பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேனர் விவாகரம். யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது போன்ற விஜய்யின் பேச்சுகள் ஏகத்துக்கும் அதிமுகவை காயப்படுத்தி உள்ளது.

விஜய் கவனம்

விஜய் கவனம்

இதனால் சென்சார் தொடங்கி, திரையரங்க உரிமையாளர்கள் தரப்பு, விநியோகிஸ்தர்கள் தரப்ப வரை அரசை பகைக்காமல் பிகில் வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாம். இதனை அறிந்த விஜய் தீபாவளிக்கு பிகில் திரைப்படம் வெளிவருவதில் எந்த தடையும் வந்துவிடக்கூடாது என்பது கவனம் செலுத்தி வருகிறாராம். பட தயாரிப்பு நிறுவனமும் எந்த பிரச்னையும் இல்லாமல் பிகில் தீபாவளிக்கு வர வேண்டும் என்பதையே விரும்புகிறது. அதற்கான சமாதான முயற்சிகள் நடந்து வருவதாக சொல்கிறார்கள்.

முதல்வரை சந்திப்பாரா

முதல்வரை சந்திப்பாரா

இதனால் நடிகர் விஜய் விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ரகசியமாக சந்தித்து பேசக்கூடும் என தகவல்கள் கசிந்துள்ளன. எனினும் ஊகத்தின் அடிப்படையிலேயே இது போன்ற தகவல்கள் கசிந்து வருகின்றன. பிகில் எந்த பிரச்னையும் இல்லாமல் வெளியாக விஜய் இந்த முடிவினை எடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக செய்திகள் கசிகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+