ரஜினிகாந்த் யாரை வேண்டுமானாலும் பார்க்கட்டும்.. ஆனால்.. ஒரு சிக்கல்.. விளாசி தள்ளிய திருமாவளவன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வழிகாட்டும் நிலைப்பாடாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் நடவடிக்கை அமைய வேண்டும் என விசிக எம்.பியும் அக்கட்சியின் தலைவருமான திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதேபோல "ரஜினி யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம் ஆனால், ஆளுநர் தனது பொறுப்பை மீறி செயல்பட்டு வருகிறார்" என விமர்சித்துள்ளார்.

VCK MP Thirumavalavan questions Rajinikanth meeting with Governor RN Ravi

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், டெல்லியிலிருந்து சென்னை திரும்பி அவர், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், "ஆளுநர் ஆர்.என்.ரவி முழுநேர அரசியல்வாதியாக செயல்படுகிறார்" என்றும் திருமாவளவன் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார். அவருடைய அரசியல் கடமை மாநில-மத்திய அரசுகளுக்கு இணைக்க போக்கை உருவாக்க வேண்டியதுதான். ஆனால் அவர் ஆர்எஸ்எஸ்.காரராக முழு நேர அரசியல்வாதியாக செயல்படுகிறார். ஆளுநரின் போக்குகள் மாநில அரசுக்கு மட்டுமல்ல தேசிய அளவில் ஜனநாயகத்திற்கு முரணாக சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக இருப்பது கவலை அளிக்கிறது" எனக்கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெறிக்க கூடியதாக ஜனநாயகத்தை நசுக்க கூடியதாக இருந்தது. வரும் 12ம் தேதி வரை கூட்ட தொடரை நடத்தாமல் 4 நாட்களுக்கு முன்னதாக நிறைவு செய்து விட்டார்கள். பாஜக அரசு ஒரு பாசிச அரசு என்பதற்கு அவையின் எதேச்சதிகாரங்கள் சான்றாக இருந்தன. 4 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த போது எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தம் காரணம் திரும்ப பெற்றனர்.

மாநிலங்களவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 18 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில் ஜனநாயகத்தை நெறிக்க கூடிய கூட்டத் தொடராக இந்த மழைக்கால கூட்டத்தொடர் இருந்தது. எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்காமல் எதிர்ப்புகளை மீறி சில மசோதாக்களை ஆளும் பாஜக அரசு நிறைவேற்றி கொண்டது. அதில் முக்கியமானது மின்சார திருத்த சட்ட மசோதா. மின்சார விநியோக உரிமையை தனியாருக்கு விடும் இந்த மசோதாவை விசிக கடுமையாக எதிர்க்கிறது.

பீகாரில் பாஜகவுக்கு ஒரு அச்சுறுத்தல் தரக்கூடிய வகையிலும் தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைக்க ஒரு ஆச்சாரமாக இருக்க கூடிய வகையில் நிதிஷ் குமார் எடுத்து உள்ள முடிவு வரலாற்று சிறப்புமிக்கதாக உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து விலகி புதிய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கிறார் நிதிஷ் குமார். ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கும் கூட்டணியாக இது விளங்குகிறது. இந்தியா முழுவதும் இது போல் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைக்க வழி காட்டும் நிலைப்பாடாக இது அமைய வேண்டும்" எனக் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+